Saturday 30 March 2013

என்னை கவர்ந்த அடால்ப் ஹிட்லர் பாகம்.1

[குழந்தையாக ஹிட்லர்]
இரண்டாம் உலக போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே அவர் தான் அடால்ப் ஹிட்லர். முதல் உலக போரின் போது ஜெர்மனி படையில் இராணுவ வீரராக இருந்த ஹிட்லர். இரண்டாம் உலக போரின் போது ஜெர்மனியின் சர்வதிகரியாக விளங்கினார். அவர் பெயரை கேட்டு அஞ்சாதவர்களே இல்லை.இரண்டாம் உலக போர் மூள்வதற்கும் அதன் மூலம் 5 கோடி பேருக்கு மேல் செத்து மடிவதற்கும் காரணமாக இருந்தவர். அவரது வாழ்க்கை பல திருப்பங்களும் திடுக்கிட வைக்கும் சம்பவங்களும் நிறைந்தது அதை அறிந்து கொள்ளவே இந்த தொடர் பதிவு. பதிவின் நீளம் கருதி பாகமாக வெளியிடப்படுகிறது.
ஹிட்லரின்  தந்தை 

தோற்றம்;அடால்ப் ஹிட்லர் காஸ்தாப் ஜூம் பொம்மர் என்னுமிடத்தில் 20 ஏப்ரல், 1889 இல் தாய் கிளாரா போல்ஸ் (1860-1907), தந்தை அலாய்ஸ் ஹிட்லர்-க்கும் (1837-1903) ஆறு குழந்தைகளில் நான்காவது குழந்தையாக பிறந்தார். இவருடன் பிறந்த நால்வர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். எஞ்சியவர்கள் அடால்ப் ஹிட்லரும் அவரின் கடைசி தங்கை பவுலா ஹிட்லர் மட்டும்தான். தந்தை அலாய்ஸ் ஹிட்லர் சுங்க இலாக அதிகாரியாக வேலை பார்த்து வந்தார்.பிறந்தது முதலே ஹிட்லர் நோஞ்சானாக தான் வளர்த்தார். ஒரு வருடத்திற்கு பின்பே உடல் நலம் பெற்றார்.
ஹிட்லரின் தாயார் 

அலோய்ஸ் கண்டிப்பான தந்தை சுங்க அதிகாரியாக பணியாற்றியதால் அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். எனவே தாயின் அரவணைப்பில் தான்  ஹிட்லர் வளர்த்தார். அதனால் தாயின் மேல் அளவற்ற அன்பும் பக்தியும் ஹிட்லருக்கு உண்டு.இவரும் இவரைவிட ஏழு வயது சிறியவரான தங்கையும் பருவம் அடைந்தபோது இவருடைய தந்தை (அலாய்ஸ் ஹிட்லர்) தன் இரண்டாவது மனைவியின் மூலம் இரு குழந்தைகளை பெற்றெடுத்தார். இளமைக்காலத்தில் தந்தையின் கொடுமைக்கு இவரும் தாயாரும் ஆளாக்கப்பட்டனர். தன் தந்தை அலோய்ஸ் குடி பழக்கம் கொண்டவர். குடும்பத்தினரை அடிமையாக நடத்துபவர்.அலோய்ஸ் தன் மகனை பெயர் சொல்லி அழைக்க மாட்டார். ஒரு விசிலை எடுத்து ஊதியதும்    ஹிட்லர் ஓடி வந்து நிற்க வேண்டும். எப்படி தன்னையும் தாயையும் அடித்து துன்புறுத்தினார் என்பதை தன்னுடைய மெயின் கேம்ப் என்ற சுய சரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். தந்தையின் கொடுமையால் தன் தாய் துன்புருவதை கண்டு அவர் மேல் இன்னும் அளவுகடந்த பாசம் கொண்டார். அதே சமயம் அவர் தந்தைமேல் அளவுகடந்த வெறுப்பையும் கொண்டார். பொருளாதார சூழ்நிலை காரணமாக இவர் குடும்பம் அடிக்கடி இடம் பெயர்ந்தது.
[ஹிட்லர் சிறுவனாக]

கல்வி; 
தொடக்கத்தில் ஹிட்லர் கல்வியில் சிறந்து விளங்கினார். ஆறாவது வகுப்பு படிக்கும் சமயத்தில் கல்வியில் சிறிது தொய்வு ஏற்பட்டது அதன் காரணமாக அவ்வகுப்பில் தேர்ச்சி பெறாமல் மீண்டும் அதே வகுப்பில் சேர்ந்து படித்தார். இவர் கல்வியில் நாட்டமில்லாமையை கண்டு இவன் உழைப்பதில் ஈடுபாடுகொண்டவனல்லன் என்று ஆசிரியர்கள் இவர் பெற்றோருக்கு சுட்டிகாட்டினர்.

ஓவியராதல்;
ஹிட்லர் தன் படிப்பில் ஏற்பட்ட மந்த நிலையை தன் தந்தையின் கொடுமைக்கு கொடுத்த பரிசாகவும் தன் தந்தை தான் அவரைபோன்று சுங்க அதிகாரி பணியில் அமரவேண்டும் என்ற கனவை பொய்யாக்கிய திருப்தி கிடைத்ததாக தன் சுயசரிதையில் ஹிட்லர் விளக்கியுள்ளார். இதனால் அவர் ஓவியராகும் கனவை மெய்ப்பித்தாகவும் குறிப்பிட்டுள்ளார். அவருடைய தந்தை 3 ஜனவரி, 1903 அன்று மரணமடைந்தார். அதன் பின் அவருடைய கல்வி எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை. ஹிட்லர் தம் 16 ம் வயதில் உயர் நிலை பள்ளி படிப்பை டிப்ளாமா பட்டம் பெறாதநிலையில் நிறுத்திக்கொண்டார்.

அடால்ப் ஹிட்லர் பெயர்க்காரணம்;
''அடால்ப்''' என்ற பெயர் பழங்காலத்து ஜெர்மானியரிடமிருந்து வந்தது. அடால்ப் என்பது உயர் குணமுள்ள (Nobility) + ஒநாய் (wolf) என்பதைக் குறிக்கும் சொல். இதையறிந்த இட்லர் தனக்குத்தானே ஒநாய் என்ற பெயரை தனக்கு புனைப்பெயராக வைத்துக்கொண்டார். அவருக்கு நெருங்கியவர்கள் அவரை அப்படித்தான் அழைப்பார்கள். [[1920]] களில் அவரை அப்படித்தான் அழைத்தனர். அவர் நெருங்கிய உறவினர்கள் அவரை அடி (Adi) என அழைத்தனர். ஹிட்லர் என்பதற்கு மேய்ப்பாளர் என்ற பொருள், காப்பாளர் என்றும் பொருள்படும்.

நன்றி;விக்கிபிடியா

3 comments:

K.s.s.Rajh said...

ஹிட்லர் பற்றிய தொடர் அருமையாக ஆரம்பித்துள்ளீர்கள் தொடருங்கள் அடுத்த பகுதியை படிக்க ஆர்வமாக உள்ளேன்

Unknown said...

வருகைக்கு நன்றி k .s .s

cheena (சீனா) said...

அன்பின் சக்கர கட்டி - வலைச்சர மூலமாக வந்தேன். ஹிட்லர் பற்றிய பல செய்திகள் - படங்களுடன் கூடிய முதல் பகுதி ஆர்வத்தினைத் தூண்டுகிறது. மற்ற பகுதிகளையும் பார்க்க வேண்டும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா