Saturday 8 December 2012

நடுவுல்ல கொஞ்சம் பக்கத்த காணோம் திரை விமர்சனம்

கதை
நான்கு நண்பர்களுக்கு இடையே நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர். நண்பர்களில் நான்கு பேரில் ஒருவர் இயக்குநர், இன்னொருவர் ஒளிப்பதிவாளர் மற்றுமொருவர் அதே கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவ்வாறு மூன்று பேர் இந்த படத்திலேயே பணிபுரிந்துள்ளனர்.நடிகர்கள்

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் பிட்சா படத்தில் நடித்த விஜய் சேதுபதி இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் இணைந்து பகவதி பெருமாள், ராஜ்குமார், விக்னேஷ்வரன் என்று மூன்று புது முகங்களும் நடிக்கிறார்கள். பெங்களுரை சேர்ந்த காயத்ரி படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார்.

இயக்குநர்இந்த படத்தின் இயக்குநர் பாலாஜி தரணிதரன். இவர் சென்னை தரமணி திரைப்படக் கல்லூரியில் படத்தொகுப்பு பயின்று மாநில விருதினை பெற்றுள்ளார்.
இவர் இரண்டு குறும்படங்களை இயக்கி உள்ளார். அந்த படத்திற்கு—- விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் வர்ணம், ஏன் இப்படி மயக்கினாய் என்ற படத்திற்கு வசனங்களையும் எழுதியுள்ளார். இது இவரது முதல் படம்.

தயாரிப்பாளர்Leo Vision என்ற நிறுவனத்தின் கீழ் இந்த படத்தை தயாரிப்பவர் V.S. ராஜ்குமார். இது இவருக்கு முதல் படம். இவர் ஏற்கனவே Leo vision என்ற பெயரில் sound studio நடத்தி வருகிறார்.Executive Producer: K.Sathish.

இசைஅறிமுக இசையமைப்பாளர் வேத்சங்கர் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். இவர் A.R. Rahman Studio-வில் இசை மற்றும் sound engineer course படித்துள்ளார்.
He is the Roll number: 1 student at AR Rahman music conservatory.

ஒளிப்பதிவுசிறந்த படத்திற்கான தேசிய விருதினை பெற்ற பசங்க படத்தின் ஒளிப்பதிவாளர் C. பிரேம்குமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இவரும் திரைப்படக் கல்லூரியில் பயின்று ஒளிப்பதிவு பிரிவில் மாநில விருதினை பெற்றுள்ளார்.
இயக்குநரும் ஒளிப்பதிவாளாரும் ஒரே வகுப்பில் படித்தவர்கள் என்பது குறிபிடத்தக்கது. இவர்களின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தையே கருவாக எடுத்து இயக்கியுள்ளார் இயக்குநர்.

படத்தொகுப்புஇந்த படத்தின் படத்தொகுப்பாளர் R. கோவிந்தராஜ். இவரும் சென்னை தரமணி திரைப்படக் கல்லூரியில் படத்தொகுப்பு பயின்றவர். வெயில் பட படத்தொகுப்பாளர் மதன் குணதேவாவிடம் வெயில், பூ போன்ற படங்களில் உதவி படத்தொகுப்பாளராக பணியாற்றிருக்கிறார்.

கலை இயக்குநர்கலை இயக்குநர் G. வீரமணி. இவர் சிங்கம், பயணம் போன்ற படத்தின் கலை இயக்குநர் கதிரிடம் உதவி கலை இயக்குநராக பணி புரிந்தவர்.சுவாரஸ்யமான சம்பவங்கள்நடிகர்களுக்கு dialogue சொல்லி கொடுக்க வேண்டும் என்று தோன்றியதே இல்லையாம். ஏனென்றால் நடிகர்கள் ஒவ்வொருவரும் தங்களது dialogue-ஐ finger tip-லே வைத்திருந்திருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்கள் shooting-க்கு முன்னால் எடுத்துகொண்ட rehearsal.

pre-production மட்டும் ஒரு வருடம் எடுத்து கொண்டு, script wirting, script reading. script correction, audition, rehearsal என ஒவ்வொரு process-ற்கும் அதற்கேற்றார் போல உழைத்திருக்கிறது நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் டீம். உழைப்பிற்கான பலனை பெற்று இருக்கிறது படம். சூப்பரா போயிகிட்டு இருக்கு. இந்த வாரதுள்ள படத்துக்கு தியேட்டர் காட்சி அத்தனையும் அதிகமாக்கி இருகாங்க பிரபல இயக்குனர்கள் மொக்கையா படம் எடுத்துகிட்டு இருக்குறப்ப புது முக இயக்குனர்கள் அசத்துரங்க இது மாறி நெறைய இயக்குனர்கள் வரணும்னு நம்ம பதிவுலகம் சார்பா வாழ்த்துகிறோம்.படத்துல்ல வர அத்தன பேருமே இயல்பா நடிச்சு இருகாங்க. நம்ம விஜய் சேதுபதி ப்பா யாருட இந்த பொண்ணு பேயி மாறி  இருக்கான்னு சொல்லறப்ப தியேட்டர் சிரிப்புல அதருது. இது மாறி  வித்தியாசமான முயற்சிகளில் நடிக்கணும் இப்படி அவரு நடிச்சா  பெரிய அளவு வர வாய்ப்பு இருக்கு. இரண்டாவது வெற்றி பெற்றதுக்கு வாழ்த்து  சொல்லிகிறேன்.அப்புறம் நண்பர்களா நடிச்ச 3பேருமே செம்ம நடிப்பு அதும் நம்ம பக்ஸ் செம்மைய பண்ணிருக்காறு .அவரும் படம் டைரக்ட் பண்ண போறதா படத்துள்ள சொல்லிருகாங்க அவரு படமும் நல்ல வரணும்னு வாழ்த்துகிறோம். மொத்ததுல்ல நடுவுல்ல கொஞ்சம் பக்கத்த காணோம் 2 மணி நேரம் நம்ம மன கஷ்டத்த எல்லாம் காணாம ஆக்கிருச்சு.


No comments: