Saturday 25 May 2013

மலேசியாவில் நானும் என் காதலும்

(மலேசிய இரட்டை கோபுரம்)
எங்க ஊர்ல அதிகமான நபர்கள் வெளி நாட்டில் தான் வேலை செய்கின்றனர். எனது தந்தையும் பதினெட்டு வருடங்கள் வெளிநாட்டில் தான் இருந்தார். அதனால என்னவோ நான் படிக்கும் காலத்தில் இருந்தே என்னத்த படிச்சு என்ன செய்ய போறோம். வெளிநாட்டுல தானே வேலை நமக்கு என்ற எண்ணம் சிறு வயதிலேயே வந்துவிட்டது. இப்போ அது மாதிரியான எண்ணம் தற்போது வளர்ந்து வரும் பிள்ளைகளிடம் இல்லை அனைவரும் நன்றாக படிகிறார்கள் ரொம்ப சந்தோசமா இருக்கு. அதனால ஒழுங்காபடிக்காம ஊர சுத்திக்கிட்டு ஜாலியா இருந்தேன்.

(மலேசிய பீச் பினாங்) 
எங்க அம்மாவும் எவ்ளோவோ போராடி என்னை கல்லூரி வரையில் கொண்டு வந்து விட்டார்கள். என்ன இருந்தாலும் சனி நம்மள விடலையே நானும் எப்பவும் போல சினிமா பார்க் கேம்ஸ் ன்னு ஜாலி தான். இந்த லட்சனதுள்ள காதல் வேற வந்து தொலைச்சுருச்சு. அப்பறம் என்ன கல்யாணம் பண்ணனும் நாம எப்ப படிச்சு முடிச்சு சம்பாதிக்கிறது. அதுக்குள்ள நம்ம காதலிய வேற யாருக்காச்சும் கட்டி கொடுத்துட்டா என்ன பண்றது அப்படிங்குற ஒரு அலுப்பதனமான சிந்தனை வந்துருச்சு.

(மலேசிய தேசிய நெடுஞ்சாலை)
இதுக்கு ஒரே வழி சம்பாதிக்க வேண்டும் அதற்கு வெளிநாடு செல்ல வேண்டும். உடனே அதற்கான வேலையில் இறங்கினேன் வீட்டில் படிக்க விருப்பம் இல்லை நான் வெளிநாடு போறேன் என்று கூறி பாஸ்போர்ட் விசா எல்லாம் ரெடி பண்ணி மலேசியா கிளம்பினேன்.

(மலேசிய தேசிய உணவு)

நம்ம நெனைப்பு எல்லாம் ஏதோ வெளிநாடு வந்துட்டா சும்மா அள்ளிகிட்டு வந்துரலாம் என்று எண்ணம். வந்த பின்பு தானே தெரிகிறது அவனவன் ஊர விட்டு உறவுகளை விட்டு தாய் தந்தையரை பிரிந்து மனைவி மக்களை பிரிந்து வந்து என்ன மாதிரி கஷ்ட படுகிறார்கள் இந்த பாழ போன காசை சம்பாதிக்க. அப்போது தான் எண்ணினேன் நாங்க சந்தோசமா இருக்க என் தந்தை எவ்ளோ கஷ்ட பட்டு இருப்பார் என்று.

(மலேசிய தேசிய விலங்கு)
நல்ல வேலை இந்த மாதிரி கஷ்டம் எல்லாம் நமக்கு கடவுள் கொடுக்கவில்லை. எனது உடன் பிறப்பு அங்கு இருத்த காரணத்தினால் சொந்தமாக தொழில் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார்.அதனால நானே ராஜா நானே மந்திரி யாருக்கும் அடிமை இல்லை.நெனச்சா விடுமுறை நினைத்த நேரம் சினிமா என்று ஜாலியா போச்சு.

(மலேசிய தேசிய பழம்) 
இதுமாதிரி ஒரு ஐந்து வருடங்கள் ஓடின. ஊர் பாசம் வந்து விட்டது ஊருக்கு திரும்பலாம் என முடிவு செய்தேன்.எதற்காக வெளிநாடு வந்தேன் காதலியை கை பிடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக போன் செய்து வீட்டில் கூறினேன் ஏற்பாடு செய்யப்பட்டது இந்தியா வந்து இறங்கினேன்.வந்த நோக்கம் நிறைவேறியதா? பின்னே நான் வேறொரு பெண்ணுடனும் அவள் வேறொரு ஆணுடனும் இனிதாய் திருமணம் நிறைவேறியது.


நீதி; காதல் எப்போது வேண்டுமானாலும் பண்ணிக்கலாம்  ஆனா படிப்பு படிக்கிற வயசுல்ல படிச்சுரனும். அதனால நல்லா படிங்க சந்தோசமா இருங்க.

நானும் அனுபவ பதிவு போடனும்ல அதான் சரி அனுபவ பதிவு போட்டாச்சு. அடுத்து உள் குத்து பதிவு போட்ட தான் பதிவராவே ஏத்துக்குவாங்கலாம் அதான் யாரபத்தி போடலான்னு யோசிச்சுகிட்டு இருக்கேன் தம்பிக்கு யோசனை சொல்லி உதவி செய்ய கூடதா.

9 comments:

கோவை நேரம் said...

ஆகா..கடைசில இப்படி ஆகிப்போச்சே...

Unknown said...

ஹி ஹி என்னனே பன்றது கடவுள்ன்னு ஒருத்தரு இருக்கறே

வருகைக்கு நன்றிண்ணே கோவைநேரம்

Unknown said...

ஹா ஹா வருகைக்கும் கருத்திற்கும் நன்றிண்ணே முத்துராசன்

திண்டுக்கல் தனபாலன் said...

எப்படியெல்லாம் அல்ப திருப்தி பாருங்க... ஹா... ஹா...

சில்லறை புத்தி ஆளுங்க... வாழ்க வளமுடன்...

Unknown said...

தனபால் அண்ணே வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

கவிதை வானம் said...

அண்ணன்...சக்கரகட்டி அவர்களே தங்கள் வலைப்பூவில் பிரபல பதிவர்கள் வரிசையில் எனது பதிவுகள் இடம் பெருவதைக்கண்டேன்...எனக்கு அதில் விருப்பமில்லை ...எனவே என்னை அதில் சேர்க்க வேண்டாம் ...நன்றி என்றும் நட்புடன்

திண்டுக்கல் தனபாலன் said...

சக்கரகட்டி அவர்களுக்கு : நீங்கள் எனது சமீபத்திய பதிவில் முக நூலில் இட்ட கருத்துரை மூலம் தான் இங்கு வர நேர்ந்தது... சிறிது நேரத்திற்கு முன்பு தான் எனது அண்ணன் (Blogger id & password) கேட்ட காரணம் புரிகிறது... எனக்கு அப்படியே நேர் எதிர்... இனிய நண்பர் தளத்திலும் கருத்துரை இட்டதாக கூறினார்... அவர் comment moderation வைத்துள்ளதால் என்ன எழுதினாரோ என்று தெரியவில்லை... முதலில் password-யை மாற்ற வேண்டும்...

நண்பர் பரிதி அவர்கள் எளிதாக எடுத்துக் கொள்வார் என்று நம்புகிறேன்... தகவல் கூறியமைக்கு நன்றி...

Unknown said...

முத்தரசன் அண்ணே நான் ஏன் அந்த வரிசையில் சேர்த்து இருக்கிறேன் என்றல் புதிய பதிவுகள் வெளிவரும் பொழுது நான் படிக்க எளிமையாக இருக்கும் என்ற காரணத்தினால் தான் உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் நீக்கி விடுகிறேன் நன்றி

தினகரன் said...

உள் குத்து பதிவை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்;-)