Sunday, 7 April 2013

ஒரு கையெழுத்து மாறியது தமிழனின் தலை எழுத்து?


விளம்பரம் ரொம்ப அவசியமான ஓன்று. ஒவ்வொரு நிறுவனமும் தங்களது உற்பத்தி பொருள்களை மக்களிடம் கொண்டு செல்ல இது உதவும். அதுக்கு மட்டும் இல்லாம மக்களிடம் எதையும் கொண்டு போகணும்னா விளம்பரம் மிக இன்றி அமையாதது. ஒரு ப்ரோக்ராம் டி .வி ல பார்க்கணும்னு உட்காந்த விளம்பரத போட்டு நம்மள ஒரு வழி பண்ணிருவாங்க. பார்க்க சகிக்க முடியாத விளம்பரமா இருக்கும். 

அதும் இந்த பாடி ஸ்ப்ரே விளம்பரம் இருக்கு பாருங்க. அந்த ப்ரண்ட் யூஸ் பண்ணுனா பக்கத்துக்கு வீட்டு ஆன்டி, அடுத்தவன் பொண்டாட்டி, எல்லாம் நம்ம பக்கம் ஓடி வந்துருவாங்கலாம். ஏன்டா நாயிங்களா உங்களுக்குலாம் அறிவே கிடையாதா. 

நாம சினிமா பார்க்க போகும் போது விளம்பரமா போட்டு நம்மள கொலையா கொல்லுவாங்க. அதும் இப்ப புகை பிடித்தலுக்கு எதிரா கட்டாயம் அந்த விளம்பரத்த போட்டு ஆகணும்னு தமிழக அரசு சொல்லிட்டதால நம்ம முகேஷு விளம்பரத படம் ஆரம்பிக்குரப்பவும், இடைவேளை அப்பவும் போட்டுறாங்க. நம்ம ஆளுங்க அதையும் பார்த்துட்டு போயி தான் ஊதி தள்ளுறாங்க. என்னமோ இவங்க சொல்லி அவங்க கேட்க போறது மாதிரி.

அப்பறம் மது இவங்களே விப்பாங்களாம் இவங்களே குடிக்க வேணான்னு விளம்பரமும் பண்ணுவாங்களாம் என்ன கன்றாவிடா.

இப்ப ஒரு விளம்பரம் படம் இடைவேளை அப்ப பார்த்திங்களா. ஒரு கையெழுத்து! மாறியது தலை எழுத்து. அப்படின்னு சொல்லி நம்ம புரட்சி தலைவி, பாரத தாய், வருங்கால பிரதமர், அகிலாண்டேஸ்வரி, அம்மா தமிழக மக்கள் அனைவருக்கும் ஆடு, மாடு, மிக்சி, கிரைண்டர், வீடு, மாணவ மாணவிகளுக்கு சைக்கிள், லேப்டாப், எல்லாம் கொடுக்குறாங்க. தமிழக மக்கள் தலை எழுத்து மாரிபோச்சமாம். ஆமா இதெல்லாம் எங்க ஊருக்கு கொடுக்கவே இல்லையே. அப்ப நாங்க தமிழ் நாட்டுள்ள இல்லையா? 

நல்ல ரோடு, குடி நீர் வசதி, சிறப்பான கல்வி, படித்த அனைவருக்கும் வேலை வாய்ப்பு, அரசு அலுவலகத்தில் மக்களுக்கு தரமான சேவை, விலைவாசிய குறைக்க குறைந்த விலை உணவகம் ஆரம்பிகிறான்கலாம் நாலு இடத்துல்ல இவங்க ஆரம்பிச்சுட்டா  மத்த  ஊர்ல உள்ளவன்லாம் மண்ணையா தின்பாங்க.இவங்க அரசு ஆஸ்பத்திரி நிலைமை நமக்கு தெரியாதா? முக்கியமா மிக பெரிய பிரச்சனையான மின்சாரம், இதுக்கு வழி என்னடானு பார்காம சும்மா 40 பேருக்கு இதெல்லாம் கொடுத்துட்டு மிச்சத இவங்க பங்கு போட்டு கிட்டு மக்கள் ரொம்ப சந்தோசமா இருக்குற மாதிரி இவங்களே நினச்சுகுறாங்க. 

ஒரு பதினைந்து நாட்களுக்கு முன்பு மாணவர்கள் போராட்டம் பெரிய அளவு பேச பட்டது. அவங்க அந்த அளவு போராடி என்ன மாற்றம் வந்தது என்று எனக்கு தெரியல்ல. பழைய மாதிரி கிரிக்கெட் போட்டதும் மொத்த பேரும் போயி அங்க நிக்குரானுங்க. உலகத்துள்ள எங்க போனாலும் தமிழன் தான்யா மிதி வாங்குறான். மிதி வாங்குநதையும் மறந்துறான். 

ஒரு நாட்டுள்ள தமிழ் இனத்தையே அழிகிறாங்க. நமக்கு தர வேண்டிய தண்ணிய பக்கத்துக்கு மாநிலகாரன்  தர மாட்றான். எல்லா பிரச்சனைக்கும் முடிவு எடுக்க வேண்டிய நம்ம ஊரு அரசியல்வாதிங்க எல்லாத்தையும் அரசியல் ஆக்குரான்களே தவிர பிரச்சனைய தீர்க்க மாட்டேன்கிறான்.

தமிழனா பிறந்தாலே தர்ம அடித்தானா? எப்ப தான் மாற போகுதோ..?

13 comments:

கோவை நேரம் said...

சரியா சொல்லி இருக்கீங்க...இதுக்கு தான் சொல்றது படம் போடறதுக்கு 20 நிமிசம் முன்னாடியே போய் உட்கார்ந்தா இப்படிதான் கண்ட விளம்பரலாம் போடுவாங்க..

Unknown said...

என்ன பன்றது தல சமயத்துல்ல நானா போயி மாட்டிக்கிறேன்

வருகைக்கு நன்றி தல

கார்த்திக் சரவணன் said...

அந்த முகேஷ் விளம்பரத்தைப் பார்க்க முடியல.... கையெழுத்து விளம்பரம் வரும்போது தியேட்டரில அவன் அவன் ஓ ஓ னு கத்தறான்...

Unknown said...

ஆமா பாஸ் தேர்தல் வருதுல்ல அதான் இந்த மானங்கெட்ட பொழப்பு

வருகைக்கு நன்றி ஸ்கூல் பையன் பாஸ் ..

Anonymous said...

தியேட்டருக்கு வர்றவனையும் விரட்ட பார்க்குறானுகளே . .

Unknown said...

ஆமாங்க பாஸ் டென்ஷன் பன்றாங்க

கருத்துக்கு நன்றி தினகரன் பாஸ்

VOICE OF INDIAN said...

பயனுள்ளத் தகவல் ஆய்வுக்கு உரியது நல்ல விழிப்புணர்வு பதிவு இது போன்ற பதிவுகள் அனைவரும் காணும் வகையில் பகிரப்பட வேண்டும் நம்மால் பகிரப்பட வேண்டும்

நல்ல பதிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பகிர்ந்தால் நாடு நாளை உங்களை வணங்கும்


--
www.vitrustu.blogspot.com
VOICE OF INDIAN
256 TVK Qts TVK Nagar,
Sembiyam,
Perambur,
Chennai 600019

Unknown said...

தங்கள் வருகைக்கும் கருதிடமைகும் நன்றி சுப்பிரமணியன் சார்

Anonymous said...

உங்க ஆதங்கம் நியாயமானதுதான்.

ஒவ்வொரு முறையும் ஒரே நிமிடத்துல ஒட்டு போட்டு நம்மளோட 5 வருட வாழ்க்கையை வீணடிக்கிறதில்லையா? அது மாதிரி தாங்க.

என்ன பண்றது? நாமதான் உஷாரா இருக்கணும் போல.

புரட்சி தமிழன் said...

அது என்ன கையோடு சேர்த்து கோப்பைக்கு பூட்டு? எவனும் குடிக்கரத நிறுத்தவே கூடாதுனு கோப்பைய கையோடு சேர்த்து கட்டிட்டாங்களா.

Anonymous said...

எந்த உருப்படியான முன்னேற்ற திட்டத்தையும் செய்யாமல் வாய் பேச்சிலேயே போகிறது தற்போதைய ஆட்சி... முன்பும் இப்படிதான் இருந்தாலும் பற்பல வேலைகள் நடந்து கொண்டு இருந்தன. இப்போதோ வெறும் பேச்சு மட்டுமே.

Unknown said...

என்ன பன்றது ஜெஸ்வா நம்ம ஜனங்களுக்கு இவங்க 2 பேர தவிர வேற யாரும் கண்ணுக்கு தெரிய மாற்றங்க

Unknown said...

நம்ம தமிழக அரசே பொது மக்கள் கைல பாட்டில் ல கோர்த்து விட்டுட்டாங்க புரட்சி தமிழா அதான் அந்த போட்டோ