Monday 1 April 2013

என்னை கவர்ந்த அடால்ப் ஹிட்லர் பாகம்.2


வறுமையில் வாழ்தல்;

'''ஹிட்லர்''' [1905] ம் ஆண்டு முதல் நாடோடித்தனமான வாழ்க்கையை [வியன்னா]வில் தன் தாயுடன் வாழந்தார். தன் தாய்க்குக் கிடைத்த ஆதரவற்றோர் உதவித்தொகையே குடும்ப வருமானம். இந்நிலையில் இரண்டுமுறை வரைபடவரையத் தகுதியில்லையென்று, வியன்னாவின் வரைவாளர் நுண்கலைக்கழகம், (''Academy of Fine Arts Vienna'') அவரை நிராகரித்தது. அவர் படைப்புகள் கவர்ச்சியூட்டுவதாகவும் மற்றும் கட்டுமான தொழிலுக்கு பொருத்தமானதாகவும் இல்லையென்று  அங்கீகரிக்க மறுத்தது. [21 டிசம்பர்], [1909] அவருடைய தாய் தன்னுடைய 47 வயதில் [மார்பக புற்று நோய்] தாக்கத்தால் மரணமடைந்தார். ஹிட்லர் ஆதரவற்றோர் உதவித்தொகையை வைத்துக்கொண்டு தன் தங்கையுடன் மிகவும் வருமையில் வாழும் சூழல் ஏற்பட்டது. ஹிட்லர் 21 ம் அகவையில் தன் மரபுவழி சொத்துக்களால் கிடைத்த சிறு தொகையுடன் வரைவாளராக வியன்னாவில் வறுமை வாழக்கையுடன் போராடினார். அஞ்சல் அட்டையில் வரும் படங்களை மாதிரியாக வைத்து வரைந்த ஒவியங்களை வணிகர்களிடமும், சுற்றுலாப் பயணிகளிடமும் விற்று வரும் பணத்தில் குடும்ப வறுமையை ஒரளவு குறைத்தார்.

ஹிட்லர் அதன் பின் ஓவிய அட்டை தயார் செய்து பிழைப்பு நடத்தினார். இரவில் கூட மண்ணெண்ணெய் வெளிச்சத்தில் ஓவியங்கள் வரைவார். சில மாடல் அழகிகளை வைத்து ஹிட்லர் வரைந்த ஓவியங்கள் நல்ல விலைக்கு போயின. அதனால் சொந்தமாக ஒரு ஓவியக் கூடம் அமைத்தார். அந்த சமயத்தில் தான் சிந்தியா என்ற பெண்ணை ஹிட்லர் காதலித்தார். அது தோல்வியில் முடிந்தது.

அவமானங்களும் தோல்விகளுமே மிக பெரிய சாதனையாளர்களின் இளமை காலத்தை நிரப்புகிறது. தெரு ஒர டீ கடைகளில் நாளிதழ்களை ஒரு வரி விடாமல் படித்தார். அவருக்கு அரசியல் ஈடுபாடு உருவானது. தன வரைந்த ஓவியங்களை விற்று காலத்தை ஓட்டினார். அவருக்கு ஒரு நண்பரும் இருந்தது இல்லை. அவர் எப்பொழுதும் இறுக்கமான முகத்துடனே காணப்பட்டார்.
முதல் உலக போரில் ஹிட்லர் 

ஹிட்லரின் யூத எதிர்ப்பு;
வியன்னாவில் இவர் மட்டுமே யூதவைரியாக (''Anti-Semite'') இருந்தார் என்பதை அவருடைய சிறு வயது நண்பரான ''அகஸ்ட் குபிசெக்'' தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். வியன்னாவில் பெரும்பான்மையோர் யூதர்கள். புராதான யூதர்களும் அதிகமிருந்தனர். வியன்னாவில் வகுப்புவாத கலவரங்கள் அதிகமிருந்தன.
'''ஹிட்லர்'''யூதப் பகைமை கருத்தாய்வு நூல்களை அதிகம் விரும்பினார். [போல்மிக்] மற்றும் மார்ட்டின் லூதரின் யூத எதிர்ப்பு நூல்களை அதிகம் விரும்பினார். கிறித்தவ சமயத்தின் ஒரு பிரிவான புராட்டஸ்தாந்து சமயத்தின் தந்தை என வர்ணிக்கப்படும் மார்ட்டின் லூதர் எழுதிய யூதர்களும் அவர்களின் பொய்மையும்(''On the Jews and their Lies'') என்ற நூலே யூதர்கள் மேல் வெறுப்புடன் செயல்பட பின்புலமாக அமைந்தது என்று ஹிட்லர் தன் மெயின் கேம்ப் நூலில் விவரித்துள்ளார்.
ஆரியக் கோட்பாட்டுக்கு (''Aryan Race'') தடையாகவும், எதிரிகளாகவும் இருப்பவர்கள் யூதர்களே. ஆஸ்திரியாவுக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு காரணம் யூதர்களே என்று பகிரங்கமாக வெளியிட்டார். யூதப்பகைமையாளரிடம்  மார்க்சியம்|மார்க்சிசமும், சோசலிசம்|சோசலிசமும்]] அதனை வழிநடத்தும் யூததலைவர்களால் கலக்கப்பட்டதை கண்டுணர்ந்தார். அதன் விளைவாகவே முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப்போரில் ஜெர்மனி யூதர்களிடம் வீழ்ந்தது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தினார். யூதர்களால் ஜெர்மனி அதன் உன்னதத்தை இழந்தது என்றார்.

ஹிட்லருடைய தந்தைவழி சொத்துக்களின் கடைசி பங்கு கிடைத்தவுடன் ஜெர்மனியின் பாரம்பரிய நகரமான முனிக் நகருக்கு குடிபெயர்ந்தார். அங்கு குடிபெயர்ந்த்து இன்னுமொரு காரணமும் இருந்த்து. ஆஸ்திரியா இராணுவத்தில் பணிபுரிவதை தவிர்க்கவே ஆனால் எதிர் பாராதவிதமாக ஆஸ்டிரிய இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் உடல் தகுதி தேர்வில் தோல்வியுற்றதால் முனிச் நகருக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். எனினும் [[1914]] ஆம் ஆண்டு ஆகஸ்டில் ஜெர்மனி முதலாம் உலகப்போரில் பங்கெடுப்பதால் அதில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து மூன்றாம் லுட்விக் அரசரிடம் பல்வேரியா இராணுவப்பிரிவிற்காக மனு செய்தார். அதற்கு அனுமதி கிடைத்து பல்வேரிய இராணுவப்பிரிவில் சேர்ந்தார்.`

முதல் பாகம் படிக்காதவர்கள் கிளிக்குங்கள் இங்கே

நன்றி;விக்கிபிடியா 

No comments: