Tuesday, 23 April 2013

என்னை கவர்ந்த அடால்ப் ஹிட்லர் பாகம்.4


அரசியலில் நுழைவு
ஹிட்லர் முதலாம் உலகப் போருக்குப்பின் இராணுவத்தில் தான் இருந்தார் பின் முனிச் நகருக்குத் திரும்பினார். பவேரியன் பிரதமர் கொல்லப்பட்டபின் பல மாறுபட்ட எண்ணங்களுடன் அவர் செயல்பாடுகள் அமைந்தன. 1919 ல் ஹிட்லர் இராணுவ உளவாளியாக ரெய்ச்வேரில் நியமிக்கப்பட்டார். உடன் பணியாற்றிய வீரர்களின் ஆதரவால் அங்கு ஏற்படுத்திய ஒரு சிறு குழுவின் மூலம் ஜெர்மன் தொழிலாளர் கட்சி ஆன்டன் டிரக்ஸ்லரால் உருவாக்கப்பட்டது. அப்போது அந்த கட்சியின் பலமே சிறு நூறு தான். அவர்களின் யூதபகைமை, தேசியவாதம், முதலாளித்துவ பகைமை, மார்க்சிய பகைமை போன்ற உணர்வுகளால் இட்லர் பெரிதும் கவரப்பட்டார்.ஆன்டன் டிரக்ஸ்லரும் ஹிட்லரின் சாதுர்யமான, திறமையான பேச்சாற்றலால் கவரப்பட்டார். அவரை கட்சியில் சேர அழைப்பு விடுத்தார்.

அதன்பொருட்டு ஹிட்லர் 56 வது உறுப்பினராக அக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.
கட்சியின் 7 வது பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தார். ஆண்டுகள் ஆக கட்சியினரின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க தேசிய பொதுவுடைமை ஜெர்மன் தொழிலாளர் கட்சியாக உருமாறியது. கட்சிப் பணியில் தன் முழுக்கவனத்தையும் செலுத்துவதற்காக 1920 ல் ஹிட்லர் இராணுவப்பணியை கைவிட்டார். ஹிட்லர் உணர்ச்சி பிழம்பாய் உடல் நடுங்க கண்கள் சிவக்க ஆவேச பெருக்கோடு அவர் ஆற்றிய உரை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.தன் பேச்சுத்திறமையை கட்சி செயல்வீரர்களுக்கு பயிற்றுவித்தார். இதனால் கட்சியிலும் அவர் செல்வாக்கு உயர்ந்த்து. விரைவிலேயே கட்சித் தேர்தலில் 543 வாக்குகள் பெற்று கட்சித் தலைவர் ஆனார். எதிர்த்து வாக்களித்தவர் ஒருவர் மட்டுமே. 29 ஜூலை, 1921 ஹிட்லர் கட்சியின் ஃபியூரராக முதல் முதலாக அந்த வார்த்தை அறிமுகப்படுத்தப்பட்டு அதன்படி அழைக்கப்பட்டார்.

அடுத்த ஓரிரு ஆண்டுகளில் ஹிட்லரின் பேச்சை கேட்பதற்காகவே லட்ச கணக்கில் மக்கள் குவிய தொடங்கினர். உலகில் மிக சிறந்தவர்கள் ஜெர்மானியர்கள் என்ற பெருமிதத்தை அவர்களிடம் விதித்தார் ஹிட்லர். ஸ்வஸ்திகா சின்னத்தை கட்சியின் சின்னமாக பயன்படுத்தினார். அரசாங்கத்தின் நிர்வாக திறமின்மையால் தான் வறுமையும் வேலை இல்லா திண்டாட்டமும் பெருகி விட்டதாக பிரசாரம் செய்தார். அரசாங்கத்துக்கு எதிராக மக்களை தூண்டி விட்டு ஆட்சியை கைப்பற்ற முயன்ற்று அதில் தோல்வி அடைந்தார்.

1923ல் அரசாங்கத்தை கவிழ்க்க முயன்ற குற்றத்திற்காக ஹிட்லர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜெர்மன் அரசு அவருக்கு 5 ஆண்டு காலம் தண்டனை விதித்து பின்பு ஒரு ஆண்டு காலமாக குறைக்க பட்டது. முதல் பொது கூட்டம் நடத்திய மூன்று ஆண்டுகளில் ஒரு கட்சியால் ஆளும் அரசாங்கத்தையே பயமுறுத்தும் அளவிற்கு கட்சியை வளர்த்தது ஹிட்லரால் மட்டுமே முடியும். சித்தாந்தம் இல்லாத தனது கட்சிக்கு ஹிட்லர் சித்தாந்தம் உருவாக்கியதும் அப்போதுதான்.

சிறையில் இருந்தவாறு எனது போராட்டம் [mein kempf ] என்ற நூலை எழுதினார். இது உலக புகழ் பெற்ற நூல். இதில் உலகை வழி நடத்த தகுதி உடையவர்கள் ஜெர்மானியர்கள் மட்டுமே என்று எழுதினார் ஹிட்லர். யூதர்களையும் கம்யுனிஸ்ட்களையும் மிக கேவலமாக எழுதினார். யூதர்கள் ரஷ்யர்கள் மன நிலை பாதிக்க பட்டவர்கள் இல்லாத புதிய யுகத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை முன்  வைத்தார்.
1928ல் நடந்த தேர்தலில் ஹிட்லரின் கட்சி தோல்வி அடைந்தது. அனால் ஹிட்லர் சோர்ந்து போய்விடவில்லை. தன்னுடைய கட்சியின் பெயரை நாஜி கட்சி என்று மாற்றி நாடு முழுவதும் திவிரவாததில் ஈடுப்பட்டார்.அரசாங்கத்துக்கு எதிராக மக்களை ஓன்று திரட்டினார். ஹிட்லரின் இடைவிடாத உழைப்பும் ராஜா தந்திரமும் வெற்றி பெற்றது. ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்து போராட்டத்தில் குதித்தனர்.

ஹிட்லரின் பேச்சாற்றலால் கட்சி வியக்க தக்க வகையில் வளர்ந்தது. ஆயினும் ஜனாதிபதி தேர்தலில் மூத்த தலைவர் ஹிண்டன்பர்க் வெற்றி பெற்றார். இருந்தாலும் அவர் ஆட்சி அமைக்க ஹிட்லரின் ஆதரவு அவருக்கு தேவை பட்டது.  எனவே கூட்டனி அரசில் ஹிட்லருக்கு சான்சலர் பதவி தர பட்டது. ஆனால் ஹிட்லரின் மீது இருந்த பயம் காரணமாக அதிகாரம் குறைத்து வழங்கப்பட்டது. அந்த சமயம் பாராளுமன்ற கட்டிடம் கொளுத்தப்பட்டது.  ஜனாதிபதியாக இருந்த ஹிண்டன்பர்க் மக்கள் போராட்டத்திற்கு அடி பணிந்தார். 1933ல் 30ம் தேதி ஹிட்லரை அழைத்து பிரதமாராக அறிவித்தார்.

அன்று முதல் ஹிட்லருடைய ஆட்சி ஆரம்பம் ஆனது. ஹிட்லர் பதவி ஏற்ற ஒரு ஆண்டில் ஜனாதிபதி ஹிண்டென்பெர்க் மரணமடைந்தார். பின்பு ஜனாதிபதி பதவியையும் கைப்பற்றி கொண்டு எதிர்பாளர்களை எல்லாம் ஒழித்து கட்டி ஜெர்மனியின் சர்வாதிகாரியாக அமர்ந்தார் ஹிட்லர்.


No comments: