Showing posts with label சிந்திக்க. Show all posts
Showing posts with label சிந்திக்க. Show all posts

Thursday, 5 September 2013

உங்களை நம்புங்கள் - வெற்றி நமதே !

தன்னம்பிக்கை என்பது தன்னை நம்புதலாகும், கடின உழைப்பு, விடா முயற்சி, திட்டமிடல் என்றெல்லாம் சொல்லுகிறோம் இவைகளையெல்லாம் சும்மா வெறுமனே பின்பற்ற முடியாது, தன்னம்பிக்கை இருந்தால்தான் அவைகளெல்லாம் கைகூடும். எனவே எல்லாவற்றிர்க்கும் அடிப்படை தன்னை நம்புதலாகும். ஒரு வாகனத்தை, ஒரு இரயில் வண்டியை ஏதோ ஒரு இயந்திர சக்தி உந்தி தள்ளி விடுகிறதல்லவா, அது போல தன்னம்பிக்கை என்னும் மனித சக்தி நம்மில் நிறைந்திருந்தால்தான் அது முன்னேற்ற பாதையை நோக்கி நம்மை உந்திச் செல்லும்.

சிறிதளவேனும் தன்னம்பிக்கை இல்லாதவர்கள் யாருமே இருக்க முடியாது, பிச்சைக்காரன் கூட நான் பிச்சையெடுத்தால் இவ்வளவு சம்பாதிப்பேன் என்ற தன்மீதுள்ள நம்பிக்கையில்தான் களத்தில் இறங்குகிறான், இயற்கையிலே நாம் நம்மீது நம்பிக்கை கொண்டவர்களாகவே இருக்கிறோம், ஆனால் அது போதுமான அளவு இருப்பதில்லை அதை வளர்த்துக் கொள்வதே நம் வளச்சிக்கான சரியான வழியாகும். சிறிதளவே நம்பிக்கையை வைத்துக்கொண்டு செயலில் இறங்கினால் இறுதியில் சோர்ந்து, துவண்டு போய் விடுவோம், முழுவதுமாக நிரம்பப்பெற்ற நம்பிக்கையே வெற்றியின் உச்சியில் நம்மை கொண்டுசெல்லும்.

உங்கள் பலகீனங்களை விட பலத்தை அதிகப்படுத்துங்கள், சோம்பல்களை விட உற்சாகத்தை அதிகப்படுத்துங்கள், அறியாமையை விட அறிவை அதிகப்படுத்துங்கள், எதிர்மறை சிந்தனைகளை விட நேர்மறை சிந்தனைகளை அதிகப்படுத்துங்கள் இப்படி உங்களிடமுள்ள அழிவு சக்திகளை விட ஆக்க சக்திகளை அதிகரிக்கச் செய்யும்போது தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அப்படி ஏற்படும் நம்பிக்கையை குறைக்கவிடாமல் தினந்தோறும் அவற்றை மதிப்பீடு செய்ய வேண்டும். நேற்றைவிட இன்று வளர்சியடைந்துள்ளேன், இன்றை விட நாளை வளர்ச்சியடைவேன் என்பதில் உறுதியாயிருங்கள்

தன்னம்பிக்கைக்கும் ஆழ்மனதிற்கும் நெருங்கிய தொடர்புண்டு, ஆழ் மனதின் வல்லமையை தட்டி எழுப்ப நம்பிக்கை தருகின்ற விஷயங்களை, வார்த்தைகளை அதற்கு கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். எத்தனை தோல்விகளை நீங்கள் சந்தித்திருந்தாலும் 'வீழ்வது இழிவல்ல வீழ்ந்தே கிடப்பதுதான் இழிவு' எனவே விழித்துக்கொள், வெற்றியை நோக்கி விரைந்திடு சற்றும் தாமதியாதே என்று ஆழ்மனதில் பதித்துக்கொள்ளுங்கள், உங்கள் லட்சியத்தையும் பெரிதாக வைத்துக்கொள்ளுங்கள்.

வெறுமனே ஒரு மொபைல் போன் வாங்குவதையோ, டிவி வாங்குவதையோ, கம்ப்யூட்டர், பைக், கார், அழகான வீடு போன்றவற்றை வாங்குவதையோ லட்சியமாக கொள்ளாதீர்கள் அவைகள் லட்சியத்தின் சிறு பகுதியாகவே இருக்கட்டும். , நீங்கள் இதைவிடவும் பெரிய லட்சியத்தை கொண்டிருங்கள், ஏனைனில் பெரும்பாலும் கார், பங்ளா போன்ற இவைகளெல்லாம் தன்னம்பிக்கையினால் கிடைப்பதாக இருக்காது அளவுகடந்த ஆசையின் வேகத்தினாலே கிடைப்பதாகவே இருக்கும், எனவே தன்னம்பிக்கை என்னும் உந்து சக்தியை உயர்ந்த குறிக்கோளை நோக்கி வைங்கள்.

இவனா! இவனுக்கு என்ன தெரியும், இவனுக்கு ஒன்றுமே தெரியாது, இவனிடம் அப்படி ஒன்றுமில்லை இப்படி உங்களைப் பற்றி பேசுகிறவர்களுக்கு நீங்கள் நிரூபிக்க வேண்டியது உங்களிடம் தன்னம்பிக்கை இருக்கிறது என்பதைதான். நீங்கள் யாராகவும் இருக்கலாம், படிக்காதவர்களாக இருக்கலாம் பரவாயில்லை தன்னம்பிக்கை கொள்ளுங்கள், உங்கள் ஆர்வத்தை, திறமையை சற்று கண்ணோட்டமிடுங்கள் அடுத்த கணமே களத்தில் இறங்குங்கள் எதையாவது சாதியுங்கள், திரும்பி பார்க்க வேண்டாம் உங்கள் கண்முன்னே தெரிவதெல்லாம் வெற்றி படிக்கட்டுகளாக இருக்கட்டும், வெற்றி படிகளில் பயணியுங்கள் மற்றவர்களுக்கு சிறந்த முன்னுதாரணியாகுங்கள் இனி நாளை காலம் என்றும் நம்மோடுதான்.

இது ஒரு மீள் பதிவு..

Tuesday, 9 July 2013

எந்த வேலை செய்வது?

"பணம் சம்பாதிக்க ஒரு வேலை தேவை. அது சொந்த தொழிலாகவும் இருக்கலாம், அல்லது அரசாங்க வேலையாகவும் இருக்கலாம், ஐ.டி. போன்ற உயர்மட்ட தனியார் நிறுவன வேலையாகவும் இருக்கலாம் இது தான் இன்று நம்மில் பலரின் எண்ணமாக இருக்கிறது.

இதனால் கிடைத்த வேலையே போதும் என்று நமக்கு அதிகம் பிடிக்காத வேலையில் இருந்து விடுகின்றோம்.

இந்த மனப்பான்மையால், செய்யும் வேலையில் ஆர்வம் இழந்து
 விடுகின்றோம் படிக்கும் காலத்தில் வாழ்வில் எந்த உயரத்தை அடைய வேண்டும் என்று விரும்பினோமோ, அதை மறந்து செயல்பட்டுக் கொண்டிருப்போம்!

சாதாரண அலுவலக வேலையிலிருந்து விடுபட்டு, நீங்கள் உண்மையிலேயே விரும்பும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க 10 சிறந்த வழிகள்.
1. வாழ்வின் முக்கியதுவம் : 

நம்மில் பலர் வயதான பிறகு நாம் ஏன் பலரைச் சந்தித்திருக்கக் கூடாது அல்லது அதிகக் கடினமாக உழைத்திருக்கக் கூடாது என்று யோசிப்பதுண்டு. சாதாரண அலுவலக வாழ்க்கையின் கட்டாயத்தை விட்டு நம் எதிர்காலத்தில் அடைய வேண்டிய குறிக்கோளுக்காக பாடுபடுவதில் தவறில்லை.

2. வாழ்க்கை ஒரு பாடம் : 

எதை நாம் விரும்புவதில்லையோ அதைப்பற்றி ( குறிப்பாக அர்த்தமற்ற வேலைகள், அலுவக அரசியல் போன்றவை ) எண்ணாமல், நாம் செய்ய விரும்பும் நம்பிக்கையுடன் வேலைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

3. உறுதியான சிந்தனை : 

தொழிலில் செயல்படுபவர்கள் தாங்கள் செய்யும் வேலையை நேசிக்கிறார்கள். அதுவே அவர்களின் வெற்றிக்கு வழிவகுக்கிறது.

4. நம் நோக்கத்தில் உறுதி : 

உள்ளத்திலே ஏற்படும் பயத்தை உதரித்தள்ளி நாம் காணும் கனவை அடைய தைரியமாக முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும். அவற்றிலே நம் முழு கவனத்தையும் செலுத்துவது சிறந்தது.

5. உண்மை நிலை : 

"உங்கள் வீட்டிலே உட்கார்ந்தப்படி மாதம் ரூ 10,000/- சம்பாதிக்க வேண்டுமா, இதோ ஒரு எளிய வேலை" என்ற விளம்பரங்களை விட்டுத் தள்ள வேண்டும். நம் சொந்த முயற்சியில் தொழில் தொடங்குவதற்கு காலமும் கடின உழைப்பும் அதிகமாக தேவைப்படும்.

6. தகவல்களை திரட்டுவது :

 நாம் ஆரம்பிக்க விரும்பும் தொழில் பற்றிய பல தகவல்களை, நூலகங்களிலிருந்தும் அறிந்து அந்தத் தொழில் சம்பந்தப்பட்ட கூட்டமைப்புகளிலிருந்தும் சேகரித்து நம்மை தயார்படுத்திக் கொள்வது நல்லது.

7. கனவை நனவாக்குவது : 

நம் கனவுத் தொழிலைத் தொடங்க ஒரு கால நிர்ணயம் செய்துக் கொண்டு அந்த காலக் கட்டத்துக்குள் தொடங்க எல்லா முயற்சியையும் மேற் கொள்ள வேண்டும்.

8. மற்றவர்களுடைய ஆதரவு : 

உற்சாகம் என்பது தொற்று நோய் போல பரவும். ஆகவே உங்கள் எண்ணங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டு அவர்களின் ஆதரவை தேடிப் பெறவேண்டும்.

9. வேலையை தொடங்குவது : 

"ஒரு மலையை நகர்த்த வேண்டுமா? முதலில் ஒரு கல்லை நகர்த்துங்கள்" என்கிறது சீனப் பழமொழி. நம் மொத்த கனவுத் தொழிலைத் தொடங்க முதலில் அவற்றை சிறு சிறு பாகங்களாக பிரித்துக் கொண்டு ஒவ்வொன்றாகச் செய்யத் தொடங்குவது நல்லது.

10. நன்றி உணர்வு : 

நம் எதிர்காலக் கனவை நினைவாக்க, இப்போது நாம் எவ்வளவு வேலைகளை செய்ய முடிகிறது என்பதை நன்றியுடன் நினைவு கொள்வது நல்லது.

நமது  நண்பர்கள் ஒரு சிறு கதை போட்டி வைத்து உள்ளனர். நம்ம பதிவர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு தங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டும்.

 விமர்சகர் வட்டம் சிறுகதைப் போட்டி

முதல் பரிசு = 10000 Rs
இரண்டாம் பரிசு = 5000 Rs
மூன்றாம் பரிசு = 2500 Rs x 2

1. யார் வேண்டுமானாலும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.

2. குறுங்கதை அல்லது சிறுகதையாக இருக்கவேண்டும்.
3. இதுவரை வேறு எங்கும் வெளியிடப்படாத கதையாக இருத்தல் வேண்டும்.
4. நாகரிகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது.
5. 300 வார்த்தைகளுக்கு குறையாமலும், 1000 வார்த்தைகளுக்கு மிகாமலும் பார்த்துக்கொள்ளுங்கள்.
6. இந்தப் போட்டிக்கு மொத்தம் ஐந்து அல்லது ஆறு நடுவர்கள் இருப்பார்கள்.
7. ஒவ்வொரு கதைக்கும் அதிகபட்சமாக 100 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
நடுவர்கள் = 70 %
வட்ட உறுப்பினர்கள் (likes) = 30%
(see attached 'Marks Calculation Sample')
8. கதை எழுதியது யாரென்று நடுவர்களுக்கோ, உறுப்பினர்களுக்கோ முடிவு அறிவிக்கும் வரை தெரிவிக்கப்படாது.
9. ஒவ்வொரு கதையும், நடுவர்கள் மதிப்பெண்கள் வழங்கிய பிறகே வட்டத்தில் பகிரப்படும்.
10. கதைகளை ஒருங்கிணைப்பாளர்களுக்கு மட்டுமே பின்வரும் முகவரியில் அனுப்பவேண்டும்.
11. கதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 31 ஜூலை 2013
12. கதைகள் அனுப்ப வேண்டிய முகவரி vimarsagar.vattam@gmail.com

போட்டிக்கான நடுவர்கள்:

Mynthan Shiva (மைந்தன் சிவா)  
Parisalkaaran Krishna Kumar (பரிசல்காரன்) 
Pichaikaaran Sgl (பிச்சைக்காரன்)  
Raja Rajendran (ராஜா ராஜேந்திரன்) 
Val Paiyan (வால் பையன்)  

சந்தேகங்கள் எதுவும் இருந்தால் பின்னுட்டத்தில் கேட்கவும்.

Saturday, 11 May 2013

கடலில் இறங்கியாச்சு நீந்த மாட்டேன்னா எப்புடி?

கண்களை பற்றி அறிந்து கொள்வோம்;

1.கருவில் முதன்  முதலாக உருவாகும் உறுப்பு கண்களே.

2.தேனிக்களுக்கு ஐந்து கண்கள் உண்டு.

3.டால்பின்கள் தூங்கும் பொழுதும் கண்கள் திறந்து இருக்கும்.

4.வண்டுகளுக்கும்,முயல்களுக்கும் கண் இமைகள் கிடையாது.

5.கண்கள் இருந்தும் பார்வை இல்லாத உயிரினம் வவ்வால்.

பதநீர் நன்மைகள் தெரியுமா உங்களுக்கு?

நான் சிறுவனாக இருக்கும் பொழுது பதநீர் பருகியது அதன் பின்பு அதை கண்ணால் கண்டே பல ஆண்டுகள் ஆகி விட்டது. தெருக்கு தெரு டாஸ்மாக் தண்ணி கிடைக்கிறதே ஒழிய இந்த பதநீர் கிடைக்க மாட்டேன்கிறது.

பதநீரில் 85% நீர்சத்தும் 12% சர்க்கரை சத்தும் உள்ளது.மேலும் கால்சியம், பாஸ்பரஸ்,இரும்பு போன்ற  தாது உப்புகளும், வைட்ட மின்கள் சி,பி,டி
ஆகியவையும் உள்ளன.

பதநீரில் உள்ள இரும்பு சத்து பித்தத்தை நீக்குகிறது. பற்களின் வளர்ச்சிக்கும், மலசிக்கலை போக்கவும் பதநீர் உதவுகிறது. கர்ப்பிணிகளுக்கு ரொம்ப நல்லது.

தினந்தோறும் காலையில் டீ குடிப்பதை விட பதநீர் பருகினால் காலை உணவு போல உடலுக்கு சக்தி அளிக்கிறது.

பல நாட்டு பழ  மொழிகள்;

1.கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழை அல்ல. அதிகம் ஆசை படுபவன் தான் ஏழை-ஸ்பெயின்

2.எதையும் தெரிந்து வீணாக்கும் பழக்கம், விரைவில் அதையே தேடி அலைய வைக்கும்-ஸ்காட்லாந்து

3.பயந்தகோலி பத்து தைரியசாலிகளையும் கோழையாக்கி விடுவான்-ஜேர்மன்

4.தூக்கி எறியும் குதிரையை விட சுமந்து செல்லும் கழுதையே மேல்-ருமேனியா

5.பேசுகிறவனை விட கேட்பவனுக்கே அதிக புத்தி வேண்டும்-துருக்கி

ஏன்டா தினமும் பதிவ போட்டு எங்கள சாகடிக்கிற அப்படின்னு நீங்க கேக்குறது எனக்கு புரியுது.என்ன பன்றது நேற்று போட்ட பதிவ பார்த்துட்டு அண்ணன் பதிவு உலக மாணிக்கம் பிலாசபி பிரபாகரன் சாபம் கொடுத்து விட்டுட்டாரு. அதனால பயன் தர மாதிரி நான் படித்த விடயங்களை எழுதி இருக்கேன். கடலில் இறங்கியாச்சு நீந்த மாட்டேன்னா எப்புடி? ஹாஹா  

Monday, 6 May 2013

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

வாழ்க்கையின் பய‌னுள்ள 33 குறிப்புகள்;

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்தி
திக்க வைக்கிறது.

Thursday, 11 April 2013

மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள்:

முக நூல் சும்மா அரட்டை அடிக்க மட்டும் இல்லைங்க. பல நண்பர்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் நமக்கு அப்படியே ஏத்த மாதிரி இருக்கும். அப்படி தான் இந்த தகவலும் பெரும்பான்மையான கணவன்மார்களின் எண்ணங்களின் பிரதிபலிப்பாகவே எனக்கு பட்டது. அதான் இதை இங்கு பகிர்ந்து உள்ளேன்.

1. சின்ன விசயத்திற்கெல்லாம் கணவனை துணைக்கு அழைப்பது

2. ஏதோ சொல்ல வந்து பின் ‘அதை விடுங்க’ என பொடி வைத்து பேசுவது . மூடி மறைத்து கணவனை உஷ்ணபடுத்துவது.

3. ‘அன்பு’ என்ற பெயரில் ஆயிரம் ‘போன்கால்’ பண்ணி நச்சரிப்பது

4. எதற்கெடுத்தாலும் அழுது வடிவது

5. ‘இவங்க தப்பா நினைப்பாங்க அவங்க தப்பா நினைப்பாங்க’ என்று தனக்காக வாழாமல் சமூகத்திற்கு பயந்து பயந்து வாழ்வது

6. சாப்பிடும் நேரம் பார்த்து குடும்ப பிரச்சினைகளை கிளறுவது. நமக்காக இரவில் சாபிடாமல் காத்து கொண்டிருப்பது .

7. வீட்டை அலங்கோலமாக போட்டு வைப்பது

8. நண்பர்களை பற்றி தவறாக பேசுவது

9. வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தால் ‘ரூல்ஸ்’ போடுவது

10. எதற்கெடுத்தாலும் கணக்கு கேட்பது

11. கணவன் வேலைவிட்டு வீட்டுக்கு திரும்பும் போது சொர்ணாஅக்கா ரேஞ்சுல முகத்தை வைச்சுக்கிட்டு பேசுவது…

12. எப்ப பாத்தாலும் நான் அழகாயில்லையாங்கன்னு கேட்டு நச்சரிச்சு அடிக்கடி கணவனைப் பொய் சொல்ல கட்டாயப்படுத்துவது.

மனைவியிடம் பிடிக்காத விஷயங்கள் 12 இருந்தாலும் பிடிச்ச விஷயங்கள் ஆயிரத்திற்கு மேல் உள்ளது. [வீட்ல சோறு கிடைக்கணும்ல நண்பர்களே! அதான் கடைசி இரண்டு வரிகள் நம்ம  பிட்டு எப்புடி?

நன்றி!!!!!!!!!! 

Sunday, 7 April 2013

ஒரு கையெழுத்து மாறியது தமிழனின் தலை எழுத்து?

விளம்பரம் ரொம்ப அவசியமான ஓன்று. ஒவ்வொரு நிறுவனமும் தங்களது உற்பத்தி பொருள்களை மக்களிடம் கொண்டு செல்ல இது உதவும். அதுக்கு மட்டும் இல்லாம மக்களிடம் எதையும் கொண்டு போகணும்னா விளம்பரம் மிக இன்றி அமையாதது. ஒரு ப்ரோக்ராம் டி .வி ல பார்க்கணும்னு உட்காந்த விளம்பரத போட்டு நம்மள ஒரு வழி பண்ணிருவாங்க. பார்க்க சகிக்க முடியாத விளம்பரமா இருக்கும். 

அதும் இந்த பாடி ஸ்ப்ரே விளம்பரம் இருக்கு பாருங்க. அந்த ப்ரண்ட் யூஸ் பண்ணுனா பக்கத்துக்கு வீட்டு ஆன்டி, அடுத்தவன் பொண்டாட்டி, எல்லாம் நம்ம பக்கம் ஓடி வந்துருவாங்கலாம். ஏன்டா நாயிங்களா உங்களுக்குலாம் அறிவே கிடையாதா. 

நாம சினிமா பார்க்க போகும் போது விளம்பரமா போட்டு நம்மள கொலையா கொல்லுவாங்க. அதும் இப்ப புகை பிடித்தலுக்கு எதிரா கட்டாயம் அந்த விளம்பரத்த போட்டு ஆகணும்னு தமிழக அரசு சொல்லிட்டதால நம்ம முகேஷு விளம்பரத படம் ஆரம்பிக்குரப்பவும், இடைவேளை அப்பவும் போட்டுறாங்க. நம்ம ஆளுங்க அதையும் பார்த்துட்டு போயி தான் ஊதி தள்ளுறாங்க. என்னமோ இவங்க சொல்லி அவங்க கேட்க போறது மாதிரி.

அப்பறம் மது இவங்களே விப்பாங்களாம் இவங்களே குடிக்க வேணான்னு விளம்பரமும் பண்ணுவாங்களாம் என்ன கன்றாவிடா.

இப்ப ஒரு விளம்பரம் படம் இடைவேளை அப்ப பார்த்திங்களா. ஒரு கையெழுத்து! மாறியது தலை எழுத்து. அப்படின்னு சொல்லி நம்ம புரட்சி தலைவி, பாரத தாய், வருங்கால பிரதமர், அகிலாண்டேஸ்வரி, அம்மா தமிழக மக்கள் அனைவருக்கும் ஆடு, மாடு, மிக்சி, கிரைண்டர், வீடு, மாணவ மாணவிகளுக்கு சைக்கிள், லேப்டாப், எல்லாம் கொடுக்குறாங்க. தமிழக மக்கள் தலை எழுத்து மாரிபோச்சமாம். ஆமா இதெல்லாம் எங்க ஊருக்கு கொடுக்கவே இல்லையே. அப்ப நாங்க தமிழ் நாட்டுள்ள இல்லையா? 

நல்ல ரோடு, குடி நீர் வசதி, சிறப்பான கல்வி, படித்த அனைவருக்கும் வேலை வாய்ப்பு, அரசு அலுவலகத்தில் மக்களுக்கு தரமான சேவை, விலைவாசிய குறைக்க குறைந்த விலை உணவகம் ஆரம்பிகிறான்கலாம் நாலு இடத்துல்ல இவங்க ஆரம்பிச்சுட்டா  மத்த  ஊர்ல உள்ளவன்லாம் மண்ணையா தின்பாங்க.இவங்க அரசு ஆஸ்பத்திரி நிலைமை நமக்கு தெரியாதா? முக்கியமா மிக பெரிய பிரச்சனையான மின்சாரம், இதுக்கு வழி என்னடானு பார்காம சும்மா 40 பேருக்கு இதெல்லாம் கொடுத்துட்டு மிச்சத இவங்க பங்கு போட்டு கிட்டு மக்கள் ரொம்ப சந்தோசமா இருக்குற மாதிரி இவங்களே நினச்சுகுறாங்க. 

ஒரு பதினைந்து நாட்களுக்கு முன்பு மாணவர்கள் போராட்டம் பெரிய அளவு பேச பட்டது. அவங்க அந்த அளவு போராடி என்ன மாற்றம் வந்தது என்று எனக்கு தெரியல்ல. பழைய மாதிரி கிரிக்கெட் போட்டதும் மொத்த பேரும் போயி அங்க நிக்குரானுங்க. உலகத்துள்ள எங்க போனாலும் தமிழன் தான்யா மிதி வாங்குறான். மிதி வாங்குநதையும் மறந்துறான். 

ஒரு நாட்டுள்ள தமிழ் இனத்தையே அழிகிறாங்க. நமக்கு தர வேண்டிய தண்ணிய பக்கத்துக்கு மாநிலகாரன்  தர மாட்றான். எல்லா பிரச்சனைக்கும் முடிவு எடுக்க வேண்டிய நம்ம ஊரு அரசியல்வாதிங்க எல்லாத்தையும் அரசியல் ஆக்குரான்களே தவிர பிரச்சனைய தீர்க்க மாட்டேன்கிறான்.

தமிழனா பிறந்தாலே தர்ம அடித்தானா? எப்ப தான் மாற போகுதோ..?

Tuesday, 15 January 2013