Friday 18 January 2013

சமர் திரை விமர்சனம்


பறவைகள் பல விதம் ஓவ்வொன்றும் ஒரு விதம் அதே போல மனிதர்களும் பல விதம். ஒருத்தருக்கு பிடிகிறது இன்னொருவருக்கு பிடிக்காது. இத ஏன் சொல்றேனா சமர் படத்த பத்தி கலவையான விமர்சனம் வந்துகிட்டு இருந்துச்சு. அதனாலேயே படம் பார்க்கலாமா வேணாமா அப்டின்னு சிம்பு மாதிரி பாடிகிட்டே இருந்தேன்.ஒரு வழியா அந்த படத்த நேத்து பார்த்துட்டேன். படத்த பத்தின எதிர்மறையான விமர்சனம் தப்போ என தோன்றியது. ராஜேஷ் குமார் நாவல் படிச்சு இருப்போம்.அது மாறி ஒரு கதைய விஷுவலா பார்த்த மாதிரி இருந்துச்சு.

கதை;
எல்லாரும் கதைய எழுதி முடிச்சுட்டாங்க இருந்தாலும் நம்ம பங்குக்கு சொல்லணுமே அதான்.  ஒரு தாடி வில்லன் ஒரு பீடி வில்லன் இவங்க ரெண்டு பேரும் மத்தவங்க வாழ்க்கைல விளையாடுவதே கதை.

விஷால்;
எல்லா படத்துலயும் வர மாதிரி தான் வரார் சண்டை போடுறார் டான்ஸ் பன்றார். ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்ல. ஆனா நம்ம கார்த்திக்கு எவளவோ பரவா இல்ல. அதுக்கே பாராட்டலாம்.

திரிஷா;
இந்த அம்மா இன்னும் வி ஆர் எஸ் வாங்காம இன்னும் இருக்கு. முகம் முத்தி போச்சு சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகுற வழிய பாருங்க.

இசை;
பாடல்கள் எல்லாம் ஒன்னும் நல்லாவே இல்ல. பின்னணி இசை காத பொளக்குது. மொத்ததுல்ல சொல்லிக்கிற மாறி இல்ல.

படத்துல்ல பிடிச்சதுன்னா திரைக்கதை தான்.விஷால் பேங்காக் வந்து இறங்குனதுள்ள  இருந்து ஆரம்பிக்கிற சஸ்பென்ஸ் படம் இறுதி வரை கொண்டு போனது. படத்துல்ல ஏகப்பட்ட ட்விஸ்ட். அதற்காகவே இயக்குனர பாராட்டனும். திரு சார் சூப்பர்.வெல்டன் .

மொத்ததுல்ல த்ரில்லர் மூவி விரும்புவர்களுக்கு இந்த படம் ரொம்ப பிடிக்கும். எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. தஞ்சை ஜுபிடர்ல பார்த்தேன் சோனி 4k  அப்டின்னு புதுசா சவுண்ட் சிஸ்டம் கொண்டு வந்து இருகாங்க. நல்லா இருக்கு.

பொங்கல் பந்தயத்தில் அலெக்ஸ் பாண்டியன் மண்ணை கவ்வ முதல் இடத்தை நம்ம பவர் ஸ்டார் சந்தானம் பிடிக்க  இரண்டாம் இடத்தை விஷாலும்  திருவும் பெற்று இருக்கிறார்கள்.

நன்றி.

   

Thursday 17 January 2013

இளைய தளபதி விஜய்யின் டாப் 10


10.துள்ளாத மனமும் துள்ளு;
நம்ம தளபதி நடிச்ச சூப்பர் ஹிட் மூவில இந்த படமும் ஓன்று. இந்த படத்தில் இடையழகி சிம்ரன் ஜோடியா நடிச்சு இருப்பாங்க. எழில் இயக்கி இருப்பார். அவரு இயக்கிய படங்களிலேயே இது தான் சூப்பர் ஹிட் அடித்த படம். காமெடியும் பார்க்க ரொம்ப நல்லா இருக்கும்.
9.நினைத்தேன் வந்தாய்;
இந்த படத்துல்ல நம்ம நாயகன் கனவுள்ள ஒரு பெண்ணை காதலிப்பார் வீட்ல அவருக்கு வேற பொண்ண பார்த்து நிச்சயம் பண்ணுவாங்க. அந்த நேரத்துல்ல விஜய் தன்னோட கனவு காதலிய சந்திப்பார். இப்படியாக கதை செல்லும். நம்ம தளபதிக்கு இரண்டு நாயகிகள். தேவயாணி,ரம்பா இந்த படத்துல்ல பெரிய நடிகர் பட்டாளமே நடிச்சு இருப்பாங்க. படம் முழுக்க காமெடி யா இருக்கும்.

8.ப்ரண்ட்ஸ்;
இந்த படத்த பார்க்காதவங்க யாரும் இருக்க மாட்டாங்க அப்படி ஒரு காமெடி கலாட்டாவான படம். இதுல்ல நம்ம சூர்யா விஜய்  கூட சேர்ந்து நடிச்சு இருப்பார். அவங்க இரண்டு பேரும்  சேர்ந்து நடிச்ச கடைசி படமும் இது தான். படத்துல்ல கதாநாயகன் அப்படின்னு சொன்ன அது நம்ம வடிவேலு தான். செம்மையா காமெடி பண்ணி இருப்பாரு. விஜய் ,சூர்யா,ரமேஷ்கண்ணா, முன்று பேர்கிட்ட மாட்டிகிட்டு அவருபடுறபாடு இருக்கே. சூப்பர்.
7.குஷி;
காதலர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்ற படம்னா அது இது தான். விஜய் ஜோதிகா மிக சிறப்பாக நடிச்சு இருப்பாங்க. மும்தாஜ் கவர்ச்சி பதுமையா வந்து எல்லோரையும் கிறங்க அடிச்ச படம். பாடல்கல்லாம் அருமையா இருக்கும்.தேவா இசை அமைத்து இருப்பார். s .j.சூர்யா இயக்கிய வெற்றி படம் இது.

6.திருமலை;
காதல் நாயகனா வலம் வந்து கொண்டு இருந்த நம்ம இளைய தளபதிய ஆச்சன் அவதாரமா மாத்துன படம். ஆனா இந்த படம் வெற்றி படம் தான். ஜோதிகா ஹிரோஇன். கதை என்னமோ அறுத்த பழசான கதை தான். திரைக்கதை சுவாரசியமா பண்ணி இருப்பாங்க.அவரு பஞ்ச் பேசி நடிக்க ஆரம்பிச்சதும் இதுல இருந்து தான். இயக்கம் ரமணா இப்போ எங்க இருக்காருன்னே தெரியல்ல.
5.காவலன்;
விஜய் இனிமே அவ்ளோ தான் அப்படின்னு ஒரு நிலைமைல இருந்தப்ப அவர தூக்கி நிறுத்துன்ன படம். நான்கு படம் தோல்வியில் இருந்து மீட்டு கொண்டு வந்த படம். இந்த படத்த அவரு வெளிய கொண்டு வர பட்டபாடு நாடு அறிந்தது  நான் சொல்ல வேண்டியது இல்ல. இதும் அவரோட பெஸ்ட் படம் தான்.

4.கில்லி,போக்கிரி;
இரண்டுமே தெலுங்குல நம்ம மகேஷ் பாபு பண்ணுன படம். கில்லி விஜய் படதுல்லையே ரொம்ப ஸ்பீடா போற படம் ஒரு மைல் கல் என்று சொல்லலாம். திரிஷா ஜோடி. இயக்குனர்  தரணி திரைக்கதை அவ்வளவு அருமையா பண்ணி இருப்பாரு. 
போக்கிரி இதும் விஜய்க்கு வெற்றி படம். தெலுங்கோடு ஒப்பிட்டு பார்த்தல் தமிழ் சுமார் தான். அசின் கதாநாயகி வந்து அழுதுட்டு போவார் படம் முழுவதும். இயக்கம் நம்ம தாடிக்காரர் பிரபுதேவா.

3.காதலுக்கு மரியாதை ; 
 விஜய் ஷாலினி நடித்த படம்.உண்மையான காதலுக்கு மரியாதை கொடுத்த படம். இளையராஜா படத்திற்கு பெரிதாக தனது பங்களிப்பை அளித்து இருப்பார். இயக்கம் பாசில். விஜய ஷாலினி படத்துல்ல மட்டும் இல்லாம நிஜத்துலயும் இவங்க ஒண்ணு சேரணும்னு மக்கள் ஆசை பட்டாங்க. அவ்வளவு சூப்பரான ஜோடி பொருத்தம்.சூப்பர் ஹிட் மூவி 
2.நண்பன்;
இது விஜய் படமான்னு மக்கள் சந்தேகபடுற மாறி விஜய் நடிச்சு இருந்த படம். எல்லா படத்துலையும் விஜய் வில்லன்கள அடிப்பார். இந்த படத்துல்ல போற வர எல்லாரும் விஜையை அடிப்பாங்க. அதனால கூட படம் ஓடி இருக்கும்.
விஜய் இது மாறி படங்கள் இடை இடையே நடிக்க வேண்டும் என்பதே என் ஆசை. ஷங்கர் இயக்கம், ஜீவா ஸ்ரீகாந்த் சத்யராஜ் இலியானா எல்லாம் நடிச்சு இருப்பாங்க சூப்பர் மூவி.

1.பூவே உனக்காக;
விஜய்யை தமிழ் சினிமாவிற்கு ஒரு நடிகராக அடையாளம் காட்டிய படம் இந்த படம். இந்த படம் எத்தன தடவ பார்த்தாலும் சலிக்காத ஒரு படம் என்றால் அது பூவே உனக்காக மட்டுமே. விஜய் இனி எத்தனை படம் நடித்தாலும் இந்த ஒரு படத்திற்கு இடாகாது. என்றும் விஜய்யின் முதல் வெற்றி படமும் இதே.

இளைய தளபதி மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

Tuesday 15 January 2013

உங்களை நம்புங்கள் - வெற்றி நமதே !


தன்னம்பிக்கை என்பது தன்னை நம்புதலாகும், கடின உழைப்பு, விடா முயற்சி, திட்டமிடல் என்றெல்லாம் சொல்லுகிறோம் இவைகளையெல்லாம் சும்மா வெறுமனே பின்பற்ற முடியாது, தன்னம்பிக்கை இருந்தால்தான் அவைகளெல்லாம் கைகூடும். எனவே எல்லாவற்றிர்க்கும் அடிப்படை தன்னை நம்புதலாகும். ஒரு வாகனத்தை, ஒரு இரயில் வண்டியை ஏதோ ஒரு இயந்திர சக்தி உந்தி தள்ளி விடுகிறதல்லவா, அது போல தன்னம்பிக்கை என்னும் மனித சக்தி நம்மில் நிறைந்திருந்தால்தான் அது முன்னேற்ற பாதையை நோக்கி நம்மை உந்திச் செல்லும். 

சிறிதளவேனும் தன்னம்பிக்கை இல்லாதவர்கள் யாருமே இருக்க முடியாது, பிச்சைக்காரன் கூட நான் பிச்சையெடுத்தால் இவ்வளவு சம்பாதிப்பேன் என்ற தன்மீதுள்ள நம்பிக்கையில்தான் களத்தில் இறங்குகிறான், இயற்கையிலே நாம் நம்மீது நம்பிக்கை கொண்டவர்களாகவே இருக்கிறோம், ஆனால் அது போதுமான அளவு இருப்பதில்லை அதை வளர்த்துக் கொள்வதே நம் வளச்சிக்கான சரியான வழியாகும். சிறிதளவே நம்பிக்கையை வைத்துக்கொண்டு செயலில் இறங்கினால் இறுதியில் சோர்ந்து, துவண்டு போய் விடுவோம், முழுவதுமாக நிரம்பப்பெற்ற நம்பிக்கையே வெற்றியின் உச்சியில் நம்மை கொண்டுசெல்லும்.

உங்கள் பலகீனங்களை விட பலத்தை அதிகப்படுத்துங்கள், சோம்பல்களை விட உற்சாகத்தை அதிகப்படுத்துங்கள், அறியாமையை விட அறிவை அதிகப்படுத்துங்கள், எதிர்மறை சிந்தனைகளை விட நேர்மறை சிந்தனைகளை அதிகப்படுத்துங்கள் இப்படி உங்களிடமுள்ள அழிவு சக்திகளை விட ஆக்க சக்திகளை அதிகரிக்கச் செய்யும்போது தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அப்படி ஏற்படும் நம்பிக்கையை குறைக்கவிடாமல் தினந்தோறும் அவற்றை மதிப்பீடு செய்ய வேண்டும். நேற்றைவிட இன்று வளர்சியடைந்துள்ளேன், இன்றை விட நாளை வளர்ச்சியடைவேன் என்பதில் உறுதியாயிருங்கள்

தன்னம்பிக்கைக்கும் ஆழ்மனதிற்கும் நெருங்கிய தொடர்புண்டு, ஆழ் மனதின் வல்லமையை தட்டி எழுப்ப நம்பிக்கை தருகின்ற விஷயங்களை, வார்த்தைகளை அதற்கு கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். எத்தனை தோல்விகளை நீங்கள் சந்தித்திருந்தாலும் 'வீழ்வது இழிவல்ல வீழ்ந்தே கிடப்பதுதான் இழிவு' எனவே விழித்துக்கொள், வெற்றியை நோக்கி விரைந்திடு சற்றும் தாமதியாதே என்று ஆழ்மனதில் பதித்துக்கொள்ளுங்கள், உங்கள் லட்சியத்தையும் பெரிதாக வைத்துக்கொள்ளுங்கள்.

வெறுமனே ஒரு மொபைல் போன் வாங்குவதையோ, டிவி வாங்குவதையோ, கம்ப்யூட்டர், பைக், கார், அழகான வீடு போன்றவற்றை வாங்குவதையோ லட்சியமாக கொள்ளாதீர்கள் அவைகள் லட்சியத்தின் சிறு பகுதியாகவே இருக்கட்டும். , நீங்கள் இதைவிடவும் பெரிய லட்சியத்தை கொண்டிருங்கள், ஏனைனில் பெரும்பாலும் கார், பங்ளா போன்ற இவைகளெல்லாம் தன்னம்பிக்கையினால் கிடைப்பதாக இருக்காது அளவுகடந்த ஆசையின் வேகத்தினாலே கிடைப்பதாகவே இருக்கும், எனவே தன்னம்பிக்கை என்னும் உந்து சக்தியை உயர்ந்த குறிக்கோளை நோக்கி வைங்கள்.

இவனா! இவனுக்கு என்ன தெரியும், இவனுக்கு ஒன்றுமே தெரியாது, இவனிடம் அப்படி ஒன்றுமில்லை இப்படி உங்களைப் பற்றி பேசுகிறவர்களுக்கு நீங்கள் நிரூபிக்க வேண்டியது உங்களிடம் தன்னம்பிக்கை இருக்கிறது என்பதைதான். நீங்கள் யாராகவும் இருக்கலாம், படிக்காதவர்களாக இருக்கலாம் பரவாயில்லை தன்னம்பிக்கை கொள்ளுங்கள், உங்கள் ஆர்வத்தை, திறமையை சற்று கண்ணோட்டமிடுங்கள் அடுத்த கணமே களத்தில் இறங்குங்கள் எதையாவது சாதியுங்கள், திரும்பி பார்க்க வேண்டாம் உங்கள் கண்முன்னே தெரிவதெல்லாம் வெற்றி படிக்கட்டுகளாக இருக்கட்டும், வெற்றி படிகளில் பயணியுங்கள் மற்றவர்களுக்கு சிறந்த முன்னுதாரணியாகுங்கள் இனி நாளை காலம் என்றும் நம்மோடுதான்.

இது ஒரு மீள் பதிவு..

Sunday 13 January 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா திரை விமர்சனம்


கதை;
மூன்று பேர் ஒரு பெண்ணை காதலிக்கிறாங்க அந்த பொண்ண யாரு கை பிடிக்கிறார் என்பதே கதை.பழைய பாக்யராஜ் படமான இன்று போய் நாளை வா பட ரீமேக் தான் இந்த படம். கதை,திரைக்கதை அப்படியே எடுத்துகிட்டு கொஞ்சம் பட்டி பார்த்து டிங்கரிங் பண்ணி இருகாங்க. பழைய படத்தோட ஒப்பிட்டா கொஞ்சம் கம்மியா தான் இருக்கு படம். அதனால என்ன படத்த தாங்கி பிடிக்க தான் நம்ம பவர் ஸ்டார் இருக்காரே.

பவர் ஸ்டார்;
என்னாலே நம்மவே முடியல்ல பவர் ஸ்டாருக்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பாங்கனு நான் நினைத்து கூட பார்கல. எங்க ஊர்ல நான் மட்டும் தான் பவர் ஸ்டார் ரசிகன்னு நெனச்சுகிட்டு இருந்தேன் எவ்வளோ பெரிய தப்பு. நம்ம தல பைக் ல அறிமுகம் ஆகும் காட்சில தியேட்டர்ரே விசில் சத்தம் காத பொளக்குது. நம்ம தலைவர் சொல்ற மாதிரி சூப்பர் ஸ்டாருக்கு போட்டின அது நம்ம பவர் ஸ்டார் தான். நடிப்பு இன்னும் கொஞ்சம் இயல்பா வரணும். அடுத்தடுத்த படங்கள்ல இன்னும் பெட்டரா தலைவர் பண்ணுவார் என நம்புவோம். அவர திரையில பார்க்கும் போதே நமக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை. தலைவா கலக்குங்க.

சந்தானம்;
அடுத்து நம்ம காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் பிச்சு எடுத்து இருகாரு. அவர் பேசுற ஒவ்வொரு பஞ்ச்கும் விசில் பறக்குது. நம்ம தல பவர் ஸ்டார இவரு கலாய்கிரப்ப இந்த மாறி பேச அவரு எந்த அளவு யோசிச்சு இருப்பாரு. படம் முடிய போறப்ப ஒரு வசனம் சொல்லுவாரே கடைசில என்னையும் சண்டை போட வச்சிடின்களே அப்படின்னு. ஹா ஹா சந்தானம் சார் விடுங்க மத்தவங்க மாறி நூறு பேர அடிக்காம ஒரு ஆள தானே அடிச்சிங்க. படம் நெடுக அவரோட பஞ்ச் தான் நினைவு வச்சுக்க முடியல்ல. சந்தானம் சார் சூப்பர் வெல்டன். ஒரு தயாரிப்பாளரா கண்டிப்பா ஜெயிச்சுருவிங்க வாழ்த்துக்கள்.

விஷாகா;
நல்ல அழகா சூப்பரா இருக்காங்க. படத்துல்ல நடிக்க பெரிய வேலைலாம் இல்ல. அவங்க வேலைய படத்துல்ல சரியாய் செஞ்சு இருகாங்க.அடியே என் அன்னகிளியே பாட்டுல்ல சும்மா பட்டைய கிளப்பி இருக்காங்க செம்மையா இருந்துச்சு பார்க்க ஒரு மாதிரி ஆயிருச்சு. அடுத்த படம் சீக்கிரமே கிடைக்கணும்னு ஆண்டவன வேண்டிகிறேன்.

சேது;
நம்ம சந்தானம் சார்ரோட நண்பர் அவரும் அழகா இருக்காப்ல. இன்னும் பெட்டரா நடிக்க பயிற்சி எடுக்கணும். அவருக்கும் நல்ல பிரகாசமான எதிர்காலம் இருக்கு. ஆல் த பெஸ்ட் சேது சார்.

சந்தானம் பேசுற பஞ்ச் மட்டும் வச்சு ஒரு பதிவு போடலாம்.அந்த அளவு சூப்பரா இருக்கு நினைவு வைத்து கொள்ள தான் முடியவில்லை. லொள்ளு சபாவில் உள்ள அனைவர்க்கும் வாய்ப்பு தந்து இருக்கார்.கோவை சரளா கணேஷ் எல்லாமே அவங்க அவங்க பங்களிப்ப சிறப்பா பண்ணி இருகாங்க.

நட்புகாக சிம்பு சிம்புவாகவே வந்துட்டு நாலு பஞ்ச் பேசிவிட்டு செல்கிறார். நாளோட முடிஞ்சே சந்தோசம்.

இசை தமன் பாடல்கள் எல்லாம் சூப்பரா இருக்கு. கானா பாலா குரல்ல இரண்டு பாடல்கள் அருமையோ அருமை. சங்கீதத்த கத்து தந்தா பாடல் ஆடியோல கேக்கும் போது சூப்பரா இருந்துச்சு. விஷுவலா பார்குரப்ப உடனே முடிச்சுடுது அது கொஞ்சம் ஏமாற்ரமா இருந்தது.

டைரக்ட்டர் மணிகண்டன் என்ற புதியவர். விளம்பர படம் எடுத்து கொண்டு இருந்தவர்.சந்தானத்தின் நட்பால் டைரக்ட்டர ப்ரொமோட் செய்ய பட்டுள்ளார். ஆனா எனக்கு பாக்யராஜ் சார் தான் நினைவுக்கு வரார்.

மொத்ததுல்ல லட்டு நல்ல இனிப்பா இருக்கு. பார்த்த நமக்கு மனசெல்லாம் சந்தோசம் மட்டும் தான் இருக்கு. தஞ்சை ராணி அட்லாப்ஸ்ல பார்த்தேன் சவுண்ட் சிஸ்டம் சரி  இல்ல. இனிமே அந்த தியேட்டருக்கு போக கூடாது. மறுபடியும் பார்க்க வேண்டும்போல் உள்ளது. கண்டிப்பா பார்ப்பேன். இந்த வருடத்தின் முதல் ஹிட் கண்ணா லட்டு தின்ன ஆசையா.

Saturday 12 January 2013

விஜய்யை மிஞ்சினார் கார்த்தி

Alex Pandiyan Stills & Gallery
இளைய தளபதி விஜய்யை மிஞ்சினார் கார்த்தி எப்படின்னு கேக்குறிங்களா ஆதி முதல் சுறா வரை 40 அல்லது 50 பேரை அடித்து துவைத்து நடித்து கொண்டிருந்த விஜய் இனி அவ்வாறு அடித்தால் தமிழக மக்களால் தாக்கபடுவோம் என்பதை உணர்ந்து கடைசியாக காவலனில் இருந்து துப்பாக்கி வரை கதையின் தேவைக்கு ஏற்ப நடித்து மக்கள் மனதில் தன்னை இளைய தளபதியாக நிலை நிறுத்தி கொண்டார். இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி இந்திய ஸ்டன்ட் மாஸ்டர்களை நிலைகுலைய செய்தவர் நமது கார்த்தி அவர்கள் சமிபத்தில் அவர் அடித்து [நடித்து அல்ல] முடித்து இருக்கும் படம் தான் அலெக்ஸ் பாண்டியன்.

அலெக்ஸ் பாண்டியன் படத்தில் காமெடிக்கு என்று சந்தானம் இருக்கும் பொழுது அவரை மிஞ்சி இவர் செய்து இருக்கும் நகைச்சுவை காட்சிகள் மக்களுக்கு பீதியை உண்டாக்கி உள்ளது. [எனக்கு பேதியே உண்டாகிருச்சு] படம் முழுவதும் நகைச்சுவை இருப்பதால்

நகைச்சுவைக்கு எடுத்துகாட்டாக சில காட்சிகள்;
Alex Pandiyan Stills & Gallery
காட்சி .1
படம் ஆரம்பமே அவரது நகைச்சுவை காட்சி தான். நாமெல்லாம் ஓடும் பஸ்சில் ஏறவே சிரமப்படும் போது அவர் ஓடும் ட்ரெயினில் ஏறுவதற்காக மின்னல் வேகத்தில் ஓடி வருகிறார். ட்ரெயினில் இடம் பிடிக்க நாம் ஓடுவது போல. ஓடினால் மட்டும் போதாது 50 பேரை அடினாலும் அடி அம்மாடியோவ். இறுதியாக ட்ரைன் வருவதற்கு முன்பாக ஒரு பாலத்தின் மேல இருந்து குதித்து ட்ரெயினில் குதிக்கிறார். இந்த காட்சியை பார்த்த உடனே தியேட்டரில் பாதி பேரு ஓடிவிட்டார்கள்.
Alex Pandiyan Stills & Gallery
காட்சி 2;
வில்லன்கள் அனைவரும் துப்பாக்கியால் நேருக்கு நேர் நின்று சுடும் பொழுது இவர் அனுஷ்காவுடன் ஒரு குண்டு கூட மேல படாமல் ஓடும் பொழுது நான் நமது இந்திய அரசாங்கம் இவரை ஏன் போர்களத்திற்கு அனுப்ப கூடாது என்று நினைத்தேன். இவர் ஒருவரே போதும் நம்மை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க.
Alex Pandiyan Stills & Gallery
காட்சி 3.
பல லட்ச ரூபாய் காரில் வில்லன்கள் துரத்த இவர் ஓம்னி வேனில் தப்பி செல்லும் காட்சி இருகிறதே. அதும் இளநி வெட்டும் அருவாளால் இவர் கார்களை கொத்தி விடும் பொழுது ஒவ்வொரு காரும் பனை மர உயரத்திற்கு பறக்கும் காட்சி ஆனந்த கண்ணிரே வந்து விட்டது எனக்கு.
Alex Pandiyan Stills & Gallery
காட்சி 4.
தமிழக முதல்வரின் மகளை கடத்தும் காட்சி  காமெடியின் உச்ச கட்டம். பெட்டி கடையில் குச்சி மிட்டாய் திருடுவது போல. இறுதியில் அனுஷ்காவிற்கு இவர் மேல் வரும் காதல். இந்த படத்திற்கு நீ போவியா போவியான்னு தலையில் அடித்து கொண்டேன். [காக்கா பெல்டு அடிக்க சொல்லி கொடுத்த  காதல் வருதாம் அனுஷ்காவிற்கு]
Alex Pandiyan Stills & Gallery
காட்சி 5.
இறுதியாக நாயகன் கைகளை கட்டி வில்லன்கள் அடிக்க நாயகி கட்டை அவிழ்த்து விட்டு அடிங்கடா பொட்ட பசங்களா என காட்டு கத்து கத்த வழக்கமான சினிமா தான் மிச்சம் உள்ள 100 பேரை அடித்து நொறுக்கி நாயகன் நாயகி கட்டி பிடிக்க படம் சுபம் பார்த்த நமக்கு கோபம்.மொத்தத்தில் விஜய்யை மிஞ்சி விட்டார் நம்ம கார்த்தி. சத்தியமாக இனி தியேட்டரில் கார்த்தி படம் பார்பதில்லை என்று முடிவு செய்துள்ளேன்.

அண்ணா இனிமே இப்படி அடிக்காதிங்க முடியல்ல.

Friday 11 January 2013

அலெக்ஸ் பாண்டியன் விமர்சனம்


சுரா‌ஜின் முந்தையப் படங்களான படிக்காதவன், மாப்பிள்ள-யிலிருந்து எந்த மாறுதலும் இல்லாமல் வந்திருக்கிறது அலெக்ஸ் பாண்டியன். ஒரு சமூகத்தின் பொழுதுபோக்கிற்கு உத்தரவாதம் தருகிறது என்ற வகையில் கமர்ஷியல் சினிமா தவறில்லை என்பதுடன் முக்கியமானதும்கூட. அதேவேளை கதை தொடங்கி காட்சி, கதாபாத்திரம் உள்பட எதிலும் துளி லா‌ஜிக்கின்றி, சுவாரஸியத்தின் வாசனையே இல்லாமல் காமெடி என்றால் அழகான பெண்கள் எல்லாம் ூசுத்தனமாக ஹீரோவை சுற்றி வருவதும், ஆகசன் என்றால் ஹீரோ நூறு பேர் வந்தாலும் நொறுக்க்கித்தள்ளுவதுமாக ஒரு அரைவேக்காட்டு படைப்பு முன் வைக்கப்படும் போது நமது பொறுமையின் எல்லைகள் ஆவியாகிவிடுகின்றன. 

தமிழ் சினிமாவில் தவிர்க்கப்பட வேண்டிய அபத்தங்களை தொகுத்தால் அதுதான் அலெக்ஸ் பாண்டியன். இதன் கற்பனை வறட்சி கதையில் தொடங்குகிறது. அமெ‌ரிக்காவில் தடை செய்யப்பட்ட மருந்துகளை தமிழகத்தில் விற்பனை செய்ய முயலும் வில்லன் (மிலிந்த் சோமன்). அவனுக்கு உதவும் உள்ளூர் சாமியார், ஒரு மருத்துவர் (சுமன்). மருந்துகளை விநியோகிக்க சி.எம்.-மின் அனுமதி வேண்டும். அவர் அனுமதி மறுக்க, அவ‌ரின் மகளை (அனுஷ்கா) சில்லறை கி‌ரிமினல் (கார்த்தி) ஒருவனை வைத்து கடத்துகிறார்கள். கையெழுத்து போடாவிட்டால் மகள் காலி. சி.எம். சம்மதிக்கிறார்.

வெண்ணைய் திரண்டு வருகிற நேரத்தில் சி.எம்.மின் மகள் தன்னை கடத்தியவனிடம் ஐம்பது லட்சம் வாங்கித் தருகிறேன், வில்லன்களிடம் ஒப்படைப்பதற்குப் பதில் அப்பாவிடம் கொண்டுவிடு என்கிறாள். அவனும் சம்மதிக்கிறான். இப்போது இருவரையும் வில்லன்கள் கோஷ்டி விரட்டிப் பிடிக்க... கி‌ரிமினல் ஹீரோயினையும், நாட்டையும் காப்பாற்றுகிறார்.

மகளை கடத்தி சி.எம்.மின் கையெழுத்தை வாங்கினாலும் அடுத்த நாளே இன்னொரு கையெழுத்தில் அனுமதியை ரத்து செய்து அனைவரையும் கம்பிக்குப் பின்னால் தள்ள முடியும் எனும் போது இந்த வீக்கான பாயிண்டை இறுதிவரை இயக்குனர் பிடித்து தொங்குவது ஏன் என்று தெ‌ரியவில்லை.

ச‌ரிஇப்போது வருகிற படங்களில் அபத்தமில்லாத கதையேது, காட்சிகளாவது சுவாரஸியத்தை தருகிறதா என்றால் அந்த ஏ‌ரியாவிலும் ஒரே நாலாம்படைதான். மொத்த கதையில் வில்லன் கோஷ்டி இருவரையும் விரட்டுவதற்கும் பிடிப்பதற்கும் நடுவில் படத்தின் முதல்பாதி - ஏறக்குறைய ஒன்றேகால் மணிநேரம் ஓடிவிடுகிறது. சந்தானத்தின் வீட்டில் கார்த்தி தூரத்து சொந்தம் என்று அடைக்கலாமகி நடத்தும் ரவுசுகள்தான் முன்பாதி முழுக்க. சந்தானத்தின் அம்மா வயசுக்கு வந்த மூன்று மகள்களுடன் முன்பின் தெ‌ரியாத கார்த்திக்கு எண்ணைய் தேய்த்து குளிப்பாட்டுகிறார். காமெடியாம். தங்கைகளின் கர்ப்பப் பாத்திரத்தை கார்த்தி நிறைத்துவிடுவாரோ என்ற கவலையுடன் தி‌ரியும் கதாபாத்திரம் சந்தானத்துக்கு. இதுவே முன்பாதி முழுக்க வேறு வேறு காட்சியில் வேறு வேறு இடங்களில் ஒரேவித அலுப்புடன் அடைத்துக் கொள்கிறது. இப்படியே மூன்று படங்கள் நடித்தால் சந்தானத்துக்கு வையாபு‌ரியின் இடம் நிச்சயம்.

ரவுடி, கிரிமினல்களை ஹீரோவாக காண்பிக்கும் சமீபத்திய தமிழ் சினிமாவின் வார்ப்புதான் இதன் கதநாயகனும். அசட்டு சிரிப்பு, ஆக்ரோஷ முறைப்பு இந்த இரண்டு டெம்ப்ளேட் உணர்ச்சிகளுக்கு மேல் கார்த்தியிடம் ஏதுமில்லை. பணத்துக்காக எதுவும் செய்யும் இவர்பால் அனுஷ்காவுக்கு காதல் ஏற்படுவது அருவாளால் கார்களை பறக்க விடும்  தமாஷ் காட்சி.மொத்தத்தில் கார்த்தி 200 பேர அடிச்சு துவச்சு போடுறார். பாக்குற நமக்கே உடம்பெல்லாம் வலிக்குது.

கெட்ட சேதி சொன்ன தனது ஆளையே சுட்டுக் கொல்வது, இடுப்பில் கை வைத்து கெக்கே பிக்கே என்று சிரிப்பது, க்ளோசப்பில் சவால்விடுவது, சர் சர்ரென்று பாயும் டாடா சுமோக்கள், யூனிஃபார்ம் அடியாட்கள் என்று வில்லன் ஏ‌ரியா இன்றைய தெலுங்கு இயக்குனர்களே தொடக் கூச்சப்படும் எண்பதுகளின் சகதியிலிருந்து மீளவில்லை.

கேட்க முடியாத இசை,மொக்கையான பாட்டு, பார்க்க முடியாத கோ‌ரியோகிராஃப் என படத்துக்கேற்ற மூடிகள். காட்சிகள் மாறும் போது இமேஜை மட்டும் சர் சர்ரென்று வைத்து காட்சியை தொடர்வது எடிட்டிங் இம்சை. ஆக்சனை நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படத்தில் ஆகசன் காதுல பூ சமாச்சாரமாகவே கையாளப்பட்டிருக்கிறது. ஓடுகிற ரயிலுக்கு ஒரு கிலோ மீட்டர் பின்னால் அடியாட்களுடன் அரை மணிநேரம் குஸ்தி போட்ட பிறகு கார்த்தி ரயிலை தாவிப் பிடிக்கும் போதே படத்தின் திருமுகம் தெ‌ரிந்து விடுகிறது.

படத்தில் நல்லதாக எதுவுமே இல்லையா என்றால் உண்டு. கார்த்தியின் சட்டை மட்டும் அணிந்த அனுஷ்காவை பார்க்கையில் நெஞ்சுக்குள் பன்னீர் பாட்டில் சிலீரென வெடித்த இதம்.நம்ம மனோ பாலா கொஞ்ச நேரம் வந்தாலும் நல்ல சிரிக்க வச்சு இருக்கார்.

நாக‌ரிக வார்த்தைகளில் சொன்னால் இந்தப் படம் தமிழ் ரசனையின் துரதிர்ஷ்டம். மொத்ததுல்ல 150 நட்டம் எனக்கு இந்த படத்துக்கு செலவு பண்ற காச வச்சு பிட்சா நடுவுல்ல கொஞ்சம் பக்கத காணோம் அது மாறி புது சிந்தனை உள்ள இயக்குனர்களுக்கு வாய்ப்பு தரலாம். நமக்கு நல்ல படமாவது கிடைக்கும்.
நன்றி வெப் துனியா 

Monday 7 January 2013

எனக்கு பிடித்த அரசியல் தலைவர்

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் விருதுநகரிலே ஒரு வியாபாரக் குடும்பத்திலே பிறந்தவர் ஆவார். அந்தக் காலத்தில் அந்த ஊருக்குப் பெயர் விருதுப்பட்டி.
காமராஜர் தாயார் பெயர் சிவகாமி அம்மாள். தந்தையின் பெயர் குமாரசாமி நாடார். அவர் விருதுப்பட்டியிலே தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்தார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். – இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.
1903- ஆம் வருடம், ஜுலை மாதம் 15-ஆம் தேதி, காமராஜர் பிறந்தார். அவருக்கு குல தெய்வமான காமாட்சியம்மாளின் பெயரையே முதலில் சூட்டினார்கள்.
கண்ணனைப் பாரதி ”கண்ணம்மா” ஆக்கி அழைத்துப் பாடிப் பரவசப்பட்டதுபோல் ஆணாகப் பிறந்த காமராஜரை ”காமாட்சி” ஆக்கி அனைவரும் அழைத்து மகிழ்ந்தார்கள்.
தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், தன் செல்லக் குழைந்தையை ”ராஜா” என்றே அழைத்து வந்தாள். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராஜ்’ என்று ஆனது.
காமராஜருக்குப் பின்னர், சிவகாமி அம்மாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.நாகம்மாள் என்று அந்தக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். காமராஜரும் தங்கையிடம், அன்பும் பாசமும் கொண்டிருந்தார்.
காமராஜர் தனது பள்ளிப் படிப்புக்காலங்களிலேயே, இளம் வயதிலேயே, விருதுப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டங்களுக்குப் போகலானார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த காலம் அது. காமராஜர் இளம் வயதில் கேட்ட பொதுக் கூட்டங்களே அவரைப் பிற்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரராகக் மாற்றியது.
”தந்தையொடு கல்விபோம்” – என்பதற்கு ஒப்ப, காமராஜரின் தந்தை குமாரசாமி நாடாரின் மறைவிற்குப் பின் காமராஜரின் பள்ளிப்படிப்பு முற்றுப்பெற்றது. வியாபாரங்களில் ஈடுபட்டார். முதலில் துணிக்கடையிலும், பின்னர் திருவனந்தபுரத்தில் மரக்கடை வைத்து நடத்திய காசியாராயண நாடார் மரக்கடையிலும் சிறிது காலம் வியாபாரத்தில் ஈடுபட்டார். அவரது கவனமெல்லாம் தேச விடுதலையிலேயே இருந்தது. வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றார்.
காலப்போக்கில் காமராஜர், சத்தியமூர்த்தி தொண்டனாகி, காங்கிரஸ் பேரியக்க உறுப்பினராகி முழு நேரத் தேசப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிகள் பகிஷ்காரம், கொடிப் போராட்டம், உப்பு சத்தியாக்கிரகம், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆகியவற்றில் காமராஜர் பங்கேற்றுச் சிறை தண்டனை பெற்றார்.. அடுத்தடுத்துப் போராட்டங்கள் அனைத்திலும் ஈடுபட்டு பலமுறை சிறை தண்டனைகளை அனுபவித்தார் காமராஜர்..
தமிழ்நாடு காங்கிரஸில், ”காமராஜர் காங்கிரஸ்” என்ற நிலை உருவாகியது. காமராஜர் தனது தியாகத்தாலும், சலியாத உழைப்பாலும், தொண்டுகளினாலும் உயர்ந்த நிலையை அடைந்தார்.
1952-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காமராஜர் சாத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். சுமார் பன்னிரண்டு ஆண்டுகாலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து தமிழ்நாட்டிலே காங்கிரஸ் பேரியக்கத்திற்குப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தித் தந்தார்.
1954- ஆம் ஆண்டு காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆனார். தலைவர் பதவியைத் துறந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறந்தார். குடியாத்தம் தொகுதியில் சட்டசபைக்குத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். மேல்சபை உறுப்பினராகி அவர் முதல் அமைச்சர் பதவியை வகித்திருக்கலாம். குறுக்கு வழியில் உள்ளே புகுந்து கொள்ள என்றும் விரும்பாத பெருந்தலைவரே கு. காமராஜர்.
இங்கே நான் காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகிச் செய்த சாதனைகளையே பட்டியலிட்டு காட்ட முன் வந்திருக்கிறேன். அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராஜர் கல்விக்குச் செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவைகளாகும். ஏழை, எளியவர், உயர்ந்தவர், தாழ்ந்தோர், ஆக எல்லோருக்கும் கல்வி-இலவசக் கல்வி – பட்டி, தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்கள் – இலவச மதிய உணவுச் சீருடைகள், இப்படிப் பலதிட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தினார் காமராஜர். தமிழகத்தில் கல்விச் செல்வம் பெருகியது. கிராமங்கள் தோறும் ஓராசியர் பள்ளிகள் திறக்கப்பட்டன.
கல்விக் கேள்விகளில் மட்டும் சிறந்து விளங்கினால் போதுமா? நாட்டிலே பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டங்கள் விலகி விடுமா? சிந்தித்தார் காமராஜர். திட்டங்கள் தீட்டினார். நாட்டிலே புதுப் புதுத் தொழிற்சாலைகளை நிறுவச்செய்தார். தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
காமராஜரின் திட்டங்களால் தமிழ்நாடு முன்னணியில் நின்றது. காமராஜரின் கல்வித் திட்டங்கள் நிறைவேற உடனிருந்து பாடுபட்டவர் அந்நாள் பள்ளிக் கல்வி இயக்குனர் திரு.நெ.து. சுந்தரவடிவேலு ஆவார்.
அதேபோல், காமராஜரின் தொழிற்திட்டங்கள் நிறைவேறக் காரணகர்த்தாவாக இருந்தவர் அன்றைய தொழில் அமைச்சர் திரு. ஆர். வெங்கட்ராமன் ஆவார்.
1957 – ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அமோக வெற்றிப்பெற்றது. பெருந்தலைவர் காமராஜரே மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.
ஒன்பது ஆண்டுகாலம் தமழக முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர், தான் கொண்டு வந்த கே. பிளான் மூலம் தானே முதலமைச்சர் பதவியைத் துறந்தார். அகில இந்திய காங்கிஸ் தலைவரானார்.
பெருந்தலைவர் காமராஜர் ஆண்ட காலத்தைத் தமிழ்நாட்டின் பொற்காலம் என்பார்கள். அந்தக் காலத்தை உங்கள் பார்வைக்கும், படிப்புக்கும் கொண்டு வருவதற்காகவே இந்த பதிவு வெளியிடப்படுகிறது.
”காமராஜரின் சாதனைகள்” என்னும்  நூலினைக் காமராஜர் நூற்றாண்டு விழா, ஆண்டிலே வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதும், பெருமைக்கு உரியதுமாகும்.
பெருந்தலைவர் காமராஜர் சாதனைகளைப் பிள்ளைகள் மட்டுமின்றிப் பெரியவர்களும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.
முதலமைச்சராகக் காமராஜர் தமிழகத்தில் ஒன்பது ஆண்டுகாலம் நல்லாட்சி புரிந்தார். கல்விக்கும், தொழிலுக்கும்,காங்கிரஸ் கட்சிக்கும் அவர் செய்த சாதனைகள் கணக்கில் அடங்காதவைகளாகும்.
விருதுநகரிலே ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, போதிய கல்வி கற்கவும் வசதியற்ற சூழ்நிலையிலே வளர்ந்து, வாழ்ந்து, பின்னர் அரசியலிலே தொண்டராக ஒரு மாபெரும் கட்சியிலே இணைந்து, தனது உழைப்பால், தொண்டால் படிப்படியாக உயர்ந்தவர் தான் பெருந்தலைவர் காமராஜர். அவரது சாதனைகள் யாவுமே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவைகள்.




Wednesday 2 January 2013

என் தொழிலை செய்யவிடாமல் தடுப்பது சட்டப்படி குற்றம்! : கமல் எச்சரிக்கை


தமிழகத்தில் திரையரங்குகளை நம்பி சுமார் 30 இலட்சம் குடும்பங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும், 3,000 திரையரங்குகள் இருந்த இடத்தில் இப்போது வெறும் 1,500 திரையரங்குகள் தான் உள்ளன.
இந்த நிலை நீடித்தால் விரைவில் தமிழகத்தில் திரையரங்குகளே இல்லாமல் போகும்!, என்பது திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் வாதம்.

விஸ்வரூபம் படத்தை டி.டி.ஹெச். மூலம் வெளியிடும் தனது முடிவை நடிகர் கமல்ஹாசன் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் டி.டி.ஹெச். மூலம் வெளியிட்டால் இனிமேல் தமிழகத்தில் எந்த திரையரங்கிலும் கமல்ஹாசன் திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம். இதை மீறி விஸ்வரூபத்தை ஏதாவது திரையரங்கு வெளியிட்டால் சம்பந்தப்பட்ட உரிமையாளர் மீது தொழில் ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என இப்போது அவர்கள் உறுதியாக கூறிவருகின்றனர்.

ஆனால் கமல்ஹாசனும் விடுவதாய் இல்லை. தனது தரப்பு நியாயத்தை மிகத் தெளிவாகவே பல தடவை எடுத்துரைக்கிறார். இதோ தற்போதும் பத்திரிகையாளர்களை சந்தித்த கமல், டி.டி.ஹெச்களில் ஒளிபரப்புவது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

இதன் போது கமல் கூறியவை :
இந்த முயற்சியைப் பற்றிச் சொல்லும்பொழுது இது நிகழும் என்பது பல பேருக்குத் தெரியும். என்னவோ நான் தான் கண்டுபிடித்தவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது டி.டிஹெச்சையே நான் தான் கண்டு பிடித்தேன் என்று நினைக்கிறார்கள்.

அப்படி கிடையாது. இது இருக்கு. செல்போன் வந்தது, அதில் பேசலாம் என்று தெரியும், அதை கையில் எடுத்து பேசினால் சுட்டுடும் என்று பல பேர் பயந்தார்கள், நான் தைரியமாக எடுத்துப் பேசினேன். எனக்கு எதிர்முனையில் ஒருவர் பேசினார் அதனால் நான் பேசினேன் அவ்வளவு தான்.

இது இதற்கு முன்பாக ஒரு வடநாட்டு நண்பர் ஒருவர் முயற்சி செய்து தோற்றுப்போன ஒன்று. அவர் என்ன பண்ணிட்டார்னா.. கூழுக்கும் மீசைக்கும் ஒரே நேரத்தில் ஆசைப்பட்டு விட்டார். அதாவது இதில் என்ன பிழை என்றால்  தியேட்டர்காரர்களிடமும் எம்ஜி வாங்கிவிட்டு டி.டி.ஹெச்சிலும் கொடுத்து விட்டார். அதனால் தியேட்டர்காரர்கள் அவருக்கு எதிராக திரும்பி விட்டார்கள். அது நியாயமான ஒன்றுதான். அவர்களுக்கு எதிரான ஒரு விஷயம் என்றால் அவர்கள் எதிர்க்கத்தான் செய்வார்கள்.

ஆனால் நான் அப்படி இல்லை என்னை வாழவைத்த இந்தச் சூழலை கெடுத்துக்கொண்டு நான் எந்த வேலையையும் செய்ய விரும்புவனில்லை. ஒரு விவசாயி வயலில் வேலை செய்வான். ஆனால் அதை புத்திசாலித்தனமாக செய்ய வேண்டும். அதைத்தான் நான் செய்கிறேன்.

சாட்டிலைட் சேனல்கள் வந்தபொழுது அதற்கு நான் ஆதரவாக குரல்கொடுத்தேன், இது விஞ்ஞானம் வரத்தான் செய்யும் என்று சொன்னேன் என்பதற்காக என்னை மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள். ஆனால் நான் தைரியமாக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொன்னேன். அந்த தைரியம் தான் இன்று உங்கள் முன்னால் என்னை நிற்க வைத்திருக்கிறது.

அதேபோலத்தான் சொல்கிறேன் இது பிழையல்ல, குற்றமல்ல அதனால் செய்கிறேன்.

தியேட்டர்காரர்களுக்கு அது அந்த தியேட்டர் ஒரு சொத்து, ஆனால் இந்தப்படம் எனக்கு செலவு. இந்த சந்தர்ப்பத்தை விட்டால் என்னால் செலவு செய்ததை எடுக்க முடியாது. ஸோ யார் அந்த பொருளுக்கு சொந்தக்காரனோ அவன்தான் அந்தப்பொருளை பயன்படுத்த வேண்டும்.

இது கசப்பு மருந்து தான். கசப்பு என்று தெரிந்து தான் சாப்பிடுகிறோம். ஆனால் இந்த கசப்பு மருந்து உடம்புக்கு நல்லது. வேம்பு கசக்கும் ஆனால் பாம்பு கடிக்கு போட்டால் சரியாகிவிடும். உங்களை கடித்திருக்கும் பாம்பு திருட்டு வி.சி.டி, அதற்கு கசப்பு மருந்தாக வந்திருப்பது தான் இந்த சிஸ்டம். இந்தக் கசப்பு மருந்து எந்தளவுக்கு குணமாக்கும் என்பது போக போகத்தான் தெரியும்.

தியேட்டர்களை மூடி விட வேண்டியது தான் என்று சொல்கிறார்கள். ஆமாம், பராமரிப்பில்லாத தியேட்டர்களை மூடித்தான் ஆக வேண்டும். தியேட்டர்களுக்கு வருகிறவர்களுக்கு படம் பார்க்கக்கூடிய நல்ல சூழல் இல்லாத தியேட்டர்களை கண்டிப்பாக மூடிவிடுவார்கள். ஆனால் அதற்கு இதை ஒரு காரணமாக சொல்லாதீர்கள்.

தொழில் செய்யும் உரிமையை இந்த அரசாங்கம் எனக்கு கொடுத்திருக்கிறது. இதைத் தடுப்பது சட்டப்படி குற்றமாகும்.

இந்தப்படத்தை சன் டி.டி.ஹெச், டிஸ் டிவி, வீடியோகான், ரிலையன்ஸ், ஏர்டெல் ஆகியோருடன் இன்னொரு புதிய டி.டி.ஹெச் ஆபரேட்டரும் சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் டாடா ஸ்கை நிறுவனத்தினர் தான். அவர்கள் முதலில் வருவதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

அதற்கு காரணம் DVR என்று சொல்லக்கூடிய டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டரில் இந்தப்படத்தை ரெக்கார்டிங் செய்யும் தொழில்நுட்பத்தை தடை செய்ய வேண்டும் இல்லையென்றால் உங்களுடன் நான் வியாபாரத்துக்கு வர மாட்டேன் என்று சொன்னேன்.

அதேபோல இதை கமர்ஷியலாக இல்லாமல் ஒரு தனி சேனலாக காட்ட வேண்டும் என்று சொன்னேன். மேலே உள்ள அந்த இரண்டு கண்டிஷன்களுக்கும் டாடாஸ்கை முதலில் ஒப்புக்கொள்ளவில்லை.

அதனால் வராமல் இருந்தார்கள் ஆனால் மற்றவர்கள் வந்து விட்டார்கள். இப்போது சுமார் 1 மணி நேரத்துக்கு முன்னதாக அவர்களும் இந்த கண்டிஷன்களுக்கு ஒப்புக்கொண்டு நாங்களும் வருகிறோம் என்று வந்துவிட்டார்கள். ஆக இப்போது இந்தியாவில் இருக்கும் ஆறு டி.டி.ஹெச்சிலும் இந்தப்படம் ரிலீஸாகிறது.

இதையெல்லாம் தியேட்டர்களை பாதுகாப்பதற்காகத்தான் நான் செய்தேன். இதைப்புரிந்து கொண்டு என் பின்னால் வருபவர்களுக்கு நான் வரவேற்பு செய்கிறேன். வராதவர்களைப் பற்றி எனக்கு கவலையில்லை.

‘இழப்பதற்கு ஒன்றுமில்லை, நடப்பதற்கு ஒரு தங்கப்பாதை’ என்று சொன்னார்கள். இதை கம்யூனிஸ்டு தோழர்கள் சொல்லியிருந்தார்கள். அது இப்போது வியாபாரத்துக்கும் பயன்படுகிறது.

இந்த தங்கப்பாதைக்கு வாருங்கள் என்று நான் கூப்பிடுகிறேன், ஆனால் நீங்கள் செருப்பு தேய்ந்து விடும் என்று கவலைப்படுகிறீங்கள். இது தான் என்னுடைய வேண்டுகோள். வந்தவர்கள் வரைக்கும் எனக்கு சந்தோஷம்; வராதவர்கள் இருந்தாலும் ரொம்ப சந்தோஷம் இவ்வாறு நடிகர் கமல் கூறினார்.

Tuesday 1 January 2013

சிறந்த நடிகர் நடிகை 2012


சிறந்த புதுமுக நாயகன்;
என்னை கவர்ந்த 2012 புதுமுக நாயகன். வழக்கு எண் படத்துல்ல அப்டியே பிளாட்பார கடைல வேலை பார்க்குற பையன் மாறி செம்மையா பண்ணி இருப்பாப்ல. அது நம்ம பாலாஜி சக்திவேல் தான் காரணம்னாலும் அவரு சொல்றத அப்டியே கொண்டு வரணுமே. நமலாலா முடியுமா. க்ளைமேக்ஸ்ல என்னைய அழ வட்சுடாப்ள. இவருக்கு மிகப் பெரிய எதிர்காலம் அமைய வாழ்த்துகிறோம்.

சிறந்த புதுமுக நாயகி;
சுந்தர பாண்டியன்ல அறிமுகம் ஆனவங்க. இவங்க நடிச்ச 2 படமும் ஹிட். அப்புறம் என்ன நடிக்கவும் நல்ல வருது. போன வருடதுள்ள மனம் கவர்ந்த நாயகி இவங்க தான்.
 











சிறந்த வில்லன்;
நான் ஈ படத்துல்ல கலக்குன நம்ம சுதீப் தான் சிறந்த வில்லனா தேர்தெடுக்கபடுகிறார். நம்ம சூப்பர் ஸ்டாரே பாராட்டுன ஆளாச்சே. செம்ம நடிப்பு. ஈ ட்ட மாட்டிகிட்டு அவஸ்தை படுகிற காட்சி காமெடி ஆகவும் இருக்கும். நல்ல ஆக்டிங். சூப்பர் சார்.
சிறந்த அறிமுக இயக்குனர்;

நம்ம அமுல் பேபி கார்த்திக் சுப்புராஜ். பிட்சா பட இயக்குனர். ஒரு டார்ச் லைட் ஒரு வீடு ரெண்டையும் வச்சு நம்மள பயமுருதுனவரு. நான் பயபடல. தியேட்டர்ல குஜிளிஸ்லாம் பயந்து போயி இருந்தாங்க. அதுலயே படத்தோட வெற்றி தெரிஞ்சுருச்சு. வாழ்த்துக்கள் சார். 
சிறந்த பாடாலாசிரியர்;

மதன் கார்கி இந்த ஆண்டு நெறைய ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். அப்பாவை போலவே இவருக்கும் பிரகாசமான எதிர்காலம் உண்டு. குறுகிய காலத்தில் நெறைய பாடல்கள் எழுதியுள்ளார். அவரையும் வாழ்த்துவோம்.
சிறந்த பாடகி;


ஸ்ரேயா கோஷல் என்ன குரல் பா கேட்டுகிட்டே இருக்கலாம். இவங்க பாடுன மாற்றான்,கும்கி,சாட்டை எல்லா பாட்டும் சூப்பர்.
சிறந்த பாடகர்;
எப்பவுமே கானா பாட்டுக்கு இருக்குற வரவேற்பே தனி. போன வருஷம் இவரு பாடுன அட்டைகத்தி படத்துல்ல வர ஆடி போன ஆவணி சூப்பர் டுப்பர் ஹிட் சாங். மற்றொரு பாடலான நடுகடலுல பாடும் ஹிட். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துல்ல பாடி இருக்கும் பாட்டும் ஹிட் தாங்க. வாழ்த்துக்கள் சார்.

சிறந்த இசை;
போன வருடம் நண்பன் ஒகே ஒகே மாற்றான் துப்பாக்கி போன்ற படங்கள் இவர் இசை அமைப்பில் வெளி வந்த படங்கள் இதில் மாற்றனை தவிர மற்ற அனைத்து படங்களும் ஹிட். ஒரே மாதிரியான இசையை தருகிறார் என்ற சர்ச்சை இருந்தாலும் இவர் இசையில் வெளி வரும் பாடல்கள் மிக பெரிய வெற்றி பெறுகின்றன. எனவே  இவர் வெற்றி பெற்றே இருகின்ற்றர் என்றே கூற வேண்டும்.
சிறந்த இயக்குனர்;

பாலாஜி சக்திவேல். வழக்கு எண் 18/19 பட இயக்குனர். இந்த ஆண்டு விமர்சகர்களால் அதிகம் பாராட்டு பெற்ற படம். கதைக்கு தேவையென்ன என்பதை அறிந்து அதை மட்டுமே செய்து இருப்பார். சூப்பர் இயக்குனர். இந்த ஆண்டு அனைவர் மனதிலும் இடம் பிடித்த இயக்குனர். வெல்டன் சார்.
சிறந்த காமெடியன்;

நம்ம சந்தானம் தான் வேற யாரா இருக்க முடியும். ஸ்க்ரீன் ல இவரு வந்தாலே சிரிப்பு தான். போன வருசம் முக்காவாசி படத்துல்ல இவரு தான் காமெடி. வடிவேலு வாய கொடுத்து சூவ புண்ணாக்கி கிட்டாரு. விவேக் காமெடிக்கு யாருமே இப்ப சிரிகிறது இல்ல. அப்புறம் என்ன கலக்குங்க சார் கலக்குங்க.  
சிறந்த நடிகை;
மெழுகு சிலை சமந்தா. இவங்க நடிச்ச 2 படத்துல்ல நான் ஈ மிக பெரிய வெற்றி படமா அமைஞ்சது. கடைசியா இவர் நடிப்பில் வெளியான நீதானே என் பொன்வசந்தம் படம் வெற்றி பெறா விட்டாலும் இவரது நடிப்பு பேசபட்டது. எனவே இவர் சிறந்த நடிகையாக தேர்தேடுக்கபடுகிறார்.

சிறந்த நடிகர்;
இளைய தளபதி விஜய் எல்லோராலும் அதிகம் நேசிக்க படும் மற்றும் விமர்சிக்கப்படும் ஒரு நடிகர். இந்த வருடம் முன்னணி கதாநாயகர்களில் இவர் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான நண்பன் மற்றும் துப்பாக்கி மிக பெரிய வெற்றி அடைந்து இருக்கிறது. வருட ஆரம்பத்தில் வெற்றியோடு ஆரம்பித்த இவரது பயணம் துப்பாக்கி எனும் வெற்றியோடு இவ் வருடம் முடிகிறது. வாழ்த்துக்கள் தளபதி.

[கோப்பைய பிடிங்கப்பா]
 வெற்றி பெற்ற அனைவருக்கும் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வழங்கபடும் என்பதை தெரிவித்து  சக்கர கட்டி வலை பூ சார்பாக வாழ்த்துக்களை கூறி விடை பெறுகிறோம். மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

அனைவர்க்கும் எங்கள் பதிஉலகம் சார்பாக புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் புத்தாண்டில் புன்னகை பூக்கட்டும்............