இவர் மட்டும் அல்ல விஜய், அஜித், சூர்யா,விக்ரம் என அனைத்து நடிகர்களும் ஆரம்பத்தில் இழி சொல்லுக்கு ஆளானபட்டவர்கள் தான். அந்த இழி சொல்லே இவர்களை உயரத்திற்கு வர காரணமாய் அமைந்தது.
அந்த வரிசையில் தற்பொழுது இருப்பவர் விஜய் சேதுபதி. நான் சிறிது காலம் சென்னை பெரம்பூரில் உள்ள S2 திரை அரங்கில் வேலை செய்து கொண்டு இருந்தேன். அப்போ சுந்தர பாண்டியன் ரிலிஸ் சமயம் அப்ப வேறு ஏதோ படம் பார்க்க வந்து இருந்தார் விஜய் சேதுபதி. திரை அரங்கில் படம் பார்க்க வரும் பார்வையாளர்கள் ஆன்லைனில் உணவு ஆர்டர் பண்ணி இருந்தால் மட்டுமே அவர்களின் இருக்கைக்கு சென்று கொடுப்பார்கள்.
அவ்வாறு கொடுக்கும் பொழுது விஜய் சேதுபதி தனக்கும் கொண்டு வந்து தருமாறு என்னுடன் பணி புரிந்த நண்பனிடம் கேட்டு கொள்ள அவனும் கொண்டு வர சென்றான். இதை கண்ட உடன் நான் அவன் என்ன பெரிய இவனா? அவனையே போயி வாங்க சொல்லு ரசிகர்கள் யாரும் ஆட்டோகிராப் கேட்டு தொல்ல பண்ண மாட்டாங்க என்று நண்பனிடம் கூறினேன். என் நண்பனோ சிரித்து கொண்டு விடுப்பா போயிட்டு போறான் என்று கூறி அவனிடம் சென்று அவனது ஆர்டர்ரை கொடுத்து விட்டு என்னிடம் வந்தான். பெரிய பிச்சகாரனாய் இருப்பான் போல பத்து பத்து ரூபாயாய் வச்சு இருக்கான் என்று என்னிடம் கூறினான்.
இது நடந்து ஆறு மாதத்தில் இன்று தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் வசூல் நாயகனாக விஜய் சேதுபதி மாறி இருகின்றார். பிட்சா, நடுவுல்ல கொஞ்சம் பக்கத காணோம் என்ற இரண்டு பெரிய படங்கள் ஹிட். கோடி ருபாய் சம்பளம் கொடுக்க தயார். அவரது கால்ஷிட் கிடைக்க தயாரிப்பாளர்கள் காத்து கிடக்கின்றனர். நான் யாரை பெரிய ஆளா? அப்படி என்று நினைத்தேனோ அவர் இன்னைக்கு தயாரிப்பளர்கலின் வசூல் ஹீரோ. இனி யாரையும் மட்டமா நினைக்க கூடாது என்று என்னிடம் நானே கூறி கொண்டேன். இறைவன் யாரை எப்போது எங்கு கொண்டு செல்வான் என்பதை அறிந்தவன் அவன் மட்டுமே.
அவரின் சூது கவ்வும் என்னுடைய அடுத்த எதிர்பார்ப்பு மிக்க திரைப்படம்.
|
|
Tweet |
10 comments:
அழகு மட்டும் இருந்தால் போதாது..திறமையும் இருந்தால்தான் திரையுலகில் நீடிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர்..
சரியாய் சொன்னிங்க கலியபெருமாள் வருக்கைக்கு கருதிடமைகும் நன்றி
இவர் மிகவும் திறமைசாலி... இவர் நடித்த துரு என்ற குறும்படமே சாட்சி....
வருகைக்கும் கருதிடமைகும் நன்றி ஸ்கூல் பையன் நானும் அந்த குறும் படம் பாரதி இருக்கிறேன்
எளிய நடையில் அருமையான பதிவு
வருகைக்கு நன்றி மாற்றுப்பாதை சகோ
//பல சமயங்களில் நாம் நினைப்பது தவறாய் போய் விடுவதுண்டு//
மிக உண்மைதான்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மதுரை தமிழன் அண்ணே
இன்றைய சூழலில் எவரையும் குறைத்து முதிப்பிட முடிவதில்லை என்பதே நிஜம்! இவரின் வளர்ச்சி நானும் எதிர்பாராததுதான்!
வருகைக்கும் கருத்திடமைகும் நன்றி பாலா கணேஷ் ஐயா
தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
Post a Comment