Wednesday 1 May 2013

சூது கவ்வும் திரை விமர்சனம்


இன்று உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு மூன்று படங்கள் வெளி வந்து உள்ளன. விமர்சனத்திற்கு போகும் முன் சக்கரகட்டி வலை தளம் சார்பாக உலகெங்கும் உள்ள உழைப்பாளர்கள் அனைவர்க்கும் வாழ்த்துக்கள் கூறி கொள்கிறேன்.

1.வசந்தின் இயக்கத்தில் அர்ஜுன்,சேரன்,விமல் நடிப்பில்  மூன்று பேர் மூன்று காதல்.
2.தனுஷ் தயாரிப்பில் அனிருத் இசை அமைப்பில் நம்ம பழம் சிவகார்த்திகேயன் நடிப்பில் எதிர் நீச்சல்.

3.பிட்சா, நடுவுல்ல கொஞ்சம் பக்கத காணோம் என இரண்டு தொடர் ஹிட் படம் கொடுத்த விஜய் சேதுபதியின் சூது கவ்வும் படம்.

இதுல்ல நான் ரொம்ப எதிர் பார்த்த படம் சூது கவ்வும் தான். ட்ரைலர் மங்காத்தா படத்தினை போல இருந்த காரணத்தினால் முதலில் அதையே பார்ப்போம் என்று முடிவு செய்து கிளம்பினேன்.


கதை;

இந்த படத்தோட முழு கதையையும் நான் சொல்ல போறது இல்லை. பார்க்க போற உங்களுக்கு சுவாரசியம் குறைந்து விட கூடாது என்பதற்காகவே சிம்பிளா சொல்றேன். வேலை இல்லாத 3 பசங்க 40 வயது பெரியவர் ஒரு பார் மோதலில் சந்தித்து கொள்கிறார்கள். அவர்கள் சேர்ந்து சிறு சிறு கடத்தல்கள் புரிகின்றனர். அப்போது மந்திரி மகனை கடத்த வேண்டும் என்ற அசைன்மெண்ட் வருகிறது முதலில் தயங்கி பின்னர் ஏற்று கொள்கிறார்கள். கடத்தலில் மந்திரி மகனே அவர்களுக்கு உதவி செய்து கிடைக்கும் பணத்தில் பாதி பாதி பிரித்து கொள்வது என முடிவு ஆகிறது. டீலிங் வெற்றிகரமாக முடிந்து பணம் கைக்கு கிடைத்தவுடன் பணத்துடன் மந்திரி மகன் எஸ்கேப் ஆகி விடுகிறார். இதற்க்கு இடையே அந்த மந்திரி கடத்தல் கும்பலை பிடிக்க ஒரு டெர்ரெர் போலீஸ் ஆபிசரை நியமிக்கிறார்.

பணம் இவர்களுக்கு கிடைத்ததா ?

போலீசிடம் சிக்கினர்களா?

மந்திரியின் மகனின் நாடகம் மந்திரிக்கு தெரிந்ததா?

இவர்கள் அனைவருக்கும் நடக்கும் கண்ணாமுச்சி ஆட்டமே  படத்தின் பரபர த்ரில்லிங் திரைக்கதை.

இந்த படத்த பார்த்து முடிச்சதும் எனக்கு முதல்ல பாராட்டணும்னு தோணுனது. இந்த படத்தின் இயக்குனர் நலன் அவர்களை தான். இவரோட குறும் படங்களின் ரசிகன் நான். படத்திலும் அதிகமாக குறும் படங்களில் நடித்தவர்களே நடித்து உள்ளனர் என்பதை விட அந்த கதா பாத்திரங்களாகவே மாறி இருகிறாக்கள். கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே படமாக்கி உள்ளார். தேவை இல்லாத பாடல்கள் சண்டைகள் இல்லவே இல்லை. கடத்தல் எனபது எவ்வளவு சீரீஎஸ் ஆனா விஷயம் அந்த சீரீஎஸ் குறையாமல் அதை நகைச்சுவையாக சொன்னதற்கே இவரை பாராட்டனும் நலன் சூப்பர் கலக்கிடிங்க. இது மாதிரி அடுத்த அடுத்த வித்தியாசமான படங்களை நீங்க தரனும் குட் ஜாப்.

அடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளர் திரு குமரன் இவரின் தயாரிப்பில் வெளி வந்த முந்தைய இரு படங்களான அட்டகத்தி பிட்சா இரண்டுமே ஹிட். அந்த வரிசையில் இதும் சூப்பர் ஹிட் தான். பெரிய நடிகர்களை நம்பி மொக்கை படமா எடுத்து தானும் கைய சுட்டுகிட்டு எங்க கழுத்தையும் அறுக்காம இந்த மாதிரி திறமை உள்ள இளம் இயக்குனர்களுக்கு வாய்பளித்து வரும் இந்த தயாரிப்பாளரையும் நாம் பாராட்ட வேண்டும்.

பின்பு விஜய் சேதுபதி முதலில் இந்த படத்தில் இவரை நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணமே இயக்குனர்க்கு இல்லை இவராக சென்று இந்த கதா  பாத்திரத்தை தானே செய்வதாக இயக்குனரிடம் கேட்டு விரும்பி வாங்கி உள்ளார். நாற்பது வயது உள்ள சராசரி மனிதனாக மட்டும் இல்லாமல் மன நல பாதிக்கபட்டவராகவும் நடித்து அசத்தி உள்ளார்.நடித்து இருக்கிறார். படத்துக்கு படம் இவரின் வளர்ச்சி உயர்ந்து கொண்டே உள்ளது. இது மாதிரி அவரும் வித்தியாசமான கதைகளில் நடிக்க வேண்டும். இவரின் அடுத்த படத்தினை இப்போதே என்னை எதிர் பார்க்க வைத்து விட்டார்.

நாயகி சஞ்சிதா ஷெட்டி இவரடோட கதாபத்திரம் செம்ம இன்ட்ரெஸ்டிங்க். அது நமக்கு தெரிய வரும் போது அட அப்படின்னு நெனைக்க தோணுது.
இவரும் அவருக்கு உரிய வேலையை சரியாக செய்து இருக்கிறார். விஜய் சேதுபதியின் கை ஆட்களாக நடித்துள்ள மூன்று பேருமே நல்ல தேர்வு. நல்லா பெர்போர்மேன்ஸ் பண்ணி இருகாங்க.

மந்திரியின் மகன் அருமை பிரகாசமாக நடித்துள்ள கருணாகரன். குறும்படங்களில் நாயகனாக நடித்தவர். இப்ப வர படங்களில் எல்லாம் காமெடியன்களுக்கு பாடல்கள் வைக்க ஆரம்பிச்சுட்டாங்க. இவருக்கும் படத்துல்ல சாங் இருக்கு. அது ரொம்ப சரியாகவும் இருக்கு.  கருணா சூப்பர்.

படத்தில் டெரெர் போலீஸ் அதிகாரியாக வருபவர் அஜித்தின் பில்லா படத்தில் அவரின் வலது கையாக நடித்து இருப்பவர் பில்லா ஜெகன் உற என்று முகத்தை வைத்து கொண்டு டெரெரகா நடித்துள்ளார். இவரிடம் அவர்கள் என்ன அவர்களோ என்று நாம் பயப்படும் அளவிற்கு உள்ளது.

படத்தில் தேவை இல்லாத பாடல்கள் இல்லை. கதை ஓட்டத்துடன் கூடிய சிறு சிறு பாடல்கள் மட்டுமே அனைத்தும் ரசிக்கும் படி தந்துள்ளார் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். பின்னணி இசையும் அருமையாக உள்ளது. கலக்கலான கான பாலாவின் பாடல் படத்தில் உள்ளது. அதை படமாக்கிய விதம் இன்னும் சூப்பர்.

நானும் விமர்சனம் எழுதும் போதெலாம் கஷ்டப்பட்டு படம் எடுக்குறாங்க நாம ஈஸி யா நல்ல இல்லைன்னு எழுதுறோமே என்று வருத்தமாக இருக்கும் அதை இந்த படம் மாத்திருச்சு. படத்தில் குறைகளே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம் எனக்கு படத்தில் ஒன்றும் குறையாக தெரியவில்லை. ஒரு சினிமா ரசிகனாக படத்தை நல்ல என்ஜாய் பண்ணினேன். எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது மறுபடி பார்க்கலாம் என்று இருக்கிறேன். முடிந்தால் நீங்கள் அனைவரும் சென்று தியேட்டரில் பாருங்கள். முழமையான பொழுது போக்கு சினிமா உங்களுக்காக காத்து இருக்கிறது என்று மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும். கும்பகோணம் காசியில் படத்தை பார்த்தேன் 80 ரூபாய் டிக்கெட் விலை சவுண்ட் சிஸ்டம் சூப்பர்.

கில்லி+மங்கத்தா= சூது கவ்வும்

நன்றி


12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிம்பிளா சொன்னதற்கு நன்றி...

கி+ம=சூக... புரிந்து விட்டது...

rajamelaiyur said...

படம் உங்கள் விமர்சனம் போலவே அருமை. . . தொடர்ந்து கலக்குங்கள். . .

Unknown said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தனபாலன் அண்ணே

Unknown said...

நன்றி ராஜா சார் படமும் கண்டிப்பா கலக்கும்

முத்துசிவா said...

நல்ல விமர்சனம் நண்பரே!!

Unknown said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பா முத்து சிவா

பால கணேஷ் said...

என்னங்கயயா இது.. எந்தப் பக்கம் திரும்பினாலும் ‘சூ.க.’ விமர்சனம்! எல்லாத்தையும் படிச்சதுலருந்தும் நீஙக சொல்லியிருக்கறதுலருந்தும் என்ன தெரிஞ்சுக்கிட்டேன்னா, ஏமாத்தாத படம்! அதிக எதிர்பார்ப்புகளோட போனவங்க மட்டுமே கொஞ்சம் அப்ஸெட்டாகியிருக்காங்க. மத்தவங்களுக்கு சூப்பரு! சரிதானே!

Unknown said...

பாலா கணேஷ் அண்ணே எனக்கும் ஒரே ஆச்சரியம் தான் நம்ம பதிவர்களின் ஒட்டு மொத்த கவனமும் இந்த படத்தின் மேல் தான் இருந்துருக்கு ஹாஹா

Anonymous said...


//கஷ்டப்பட்டு படம் எடுக்குறாங்க நாம ஈஸி யா நல்ல இல்லைன்னு எழுதுறோமே என்று வருத்தமாக இருக்கும்//

லட்சம், கோடின்னு காசு வாங்கிட்டுதான் படம் எடுக்கறாங்க. நம்மளும் காசு கொடுத்துதான் பாக்கறோம். நோ பீலிங் சக்கர.

Unknown said...

சிவகுமார் அண்ணே நீங்க சொல்றதும் சரி தான் நான் அந்த ஆங்கிள்ள யோசிக்கவே இல்ல

Anonymous said...

uzhaippal uyanthavargalin padam uzhaippalar dinathil release avathu parattukkuriya vishayam

Unknown said...

காசு பணம் துட்டு மணி மணி

படம் + பாடல்கள் சூப்பர்!!