இந்த படத்தோட ட்ரைலர் பார்க்கும் பொழுது அம்சமான க்ரைம் ஸ்டோரி ன்னு நெனச்சேன். ஆனா எதிர் பார்த்த த்ரில் இல்லை.
கதை;
பெருசா என்ன இருக்க போகுது வழக்கமான அரத பழசான அதே கதை தான். கர்நாடகாவின் மிக பெரிய அரசியல்வாதி அவருக்கு ஒரே பொண்ணு. அவ படிக்கிற காலேஜ்ல சென்னையில் இருந்து வந்து சேரும் நாயகன். இருவருக்கும் காதல் வருகிறது. உடனே அரசியல்வாதி என்ன பண்ணுவாரு மகளை வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சி பண்ணுறாரு. அரசியல்வாதியின் எதிர்ப்பை சமாளித்து நண்பர்களின் உதவியோடு நாயகியை மீட்டு நாயகன் காதலில் வெற்றி பெறுவதே கதை.
நாயகனாக சித்தார்த். கல்லூரி மாணவராக வருகிறார். அவருக்கு ஏத்த கதாபாத்திரம் தான். இந்த படத்துல்ல பெருசா சொல்லிக்கிற மாதிரி நடிபெல்லாம் இல்ல. காலேஜ் போறாரு தம் அடிக்கிறார், சரக்கடிகிறார். ஆனா படிக்கிற மாதிரி படத்துல்ல காட்சியே இல்ல. காதலியை அவரது மாநிலத்தில் இருந்து தன்னோட மாநிலத்துக்கு கொண்டு போய்விட்டால் பிரச்னை இல்லைன்னு பிளான் பண்ணுறாரு. எல்லாம் மட்டமான பிளான்பா. இது மட்டும் இல்லாம படத்தோட இறுதி காட்சில்ல உதடோட உதடு வச்சு ஒரு பச்சக் அடிக்கிறார். அது மட்டும் தான் படத்துல்ல அவர் நடிச்சதுள்ள எனக்கு பிடிச்சது. அதோட அவருக்கு முடிஞ்சு வேலை.
நாயகியாக அஷ்ரிதா ஜட்டி சாரி ஷெட்டி. பாப்பா பார்க்குறதுக்கு ஓகே பரவா இல்ல. ஆனா தமிழ் பேசுறத பார்க்கும் பொழுது நமக்கு அழுகையே வந்துரும் போல. யாருய்யா டப்பிங் பேசுனது. எரிச்சல்லா இருந்துச்சு பார்க்க. படத்துல்ல நாயகனுக்கே வேலை இல்ல. பின்ன இவங்களுக்கு மட்டும் என்ன இருக்க போகுது ஓகே.
(ஆளு சூப்பரா இருக்காருல்ல) |
(+)
படத்துல்ல எனக்கு மிகவும் பிடிச்சதுன்னு சொன்ன அந்த அசிஸ்டென்ட் கமிஷ்னராக வரும் கே.கே.மேனன். மலையாளத்தில் இருந்து வந்து இருக்கிறார். அட்டகாசமாக நடிச்சு இருகார். அந்த போலீஸ்கே உள்ள மிடுக்கு சூப்பர். ஆனா நிஜத்துள்ள அப்படி போலீஸ்காரங்க யாரையும் பார்கள பா.
இவர தான் படத்துல்ல எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது. தமிழ் சினிமாவிற்கு நல்ல நடிகர் கிடைத்து உள்ளார்.
இந்த குறும் படங்களினால் தமிழ் சினிமாவிற்கு நிறைய நல்லது நடந்து இருக்கு. திறமையான இயகுனர்கள் ஆனா பிட்சா பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், காதலில் சொதப்புவது எப்படி தந்த பாலாஜி மோகன், நடுவுல்ல கொஞ்சம் பக்கத்த காணோம் இயக்குனரான பாலாஜி பரணிதரன் போன்றோர். மற்றும் குறும் படத்தில் இருந்து வந்த நடிகர் விஜய் சேதுபதி. பிட்சா படத்தில் நடித்த கண்ணாடி அணிந்த அந்த நபர் அவரு பேரு தெரில்ல. அந்த வரிசையில் ஒரு மேலும் நடிகர் கிடைத்து உள்ளார். இவரு பேரும் தெரில்ல இவரு நடிச்ச குறும் படங்களை நான் பார்த்து இருக்கிறேன்.படத்துல்ல இவரு ஒரு காமெடி பண்ணி இருக்காறு பாருங்க அத நினைத்து நான் வீடுக்கு வர வரைக்கும் சிரிச்சுகிட்டே இருந்தேன். இது மாதிரி திறமை உள்ளவங்களுக்கு வாய்ப்பு கொடுங்கப்பா.
படத்துக்கு நான் போனதுக்கு முக்கிய காரணம் கான பாலா பாடிய ஒரே கண்ணாலே அந்த பாடல் தான். கானா பாலாவே அந்த பாடலை படத்தில் பாடுகிறார்.அந்த பாட்டு பாதி தான் படத்துல்ல வருது. அந்த பாடலை படமாக்கிய விதம் சுத்தமா நல்லாவே இல்ல. பாடல் கேட்க மட்டும் நன்றாய் உள்ளது.
(-)
நண்பனின் காதலை ஜெயிக்க வைக்க நண்பர்கள் அனைவரும் பைக், கார் என அனைத்து உதவிகளும் செய்கின்றனர். ஆனா நமக்கு உள்ள நண்பர்கள்ட பைக் கேட்டா மச்சான் பெட்ரோல் இல்லடா அப்ப்டிம்பானுங்க. இதெல்லாம் படத்துல்ல தான் நடக்கும்.
இந்த காலத்துள்ள யாருங்க இந்த அளவு சீரியசா காதலிகிரங்க. 50 ரூபாய்க்கு டாப் அப் பன்னலனாலே கோயிந்தா இப்ப போயி இந்த மாதிரி படம் எடுத்துக்கிட்டு உஸ்ஸ்ஸ்.
இசை ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்ல. சித்தார்த் நடித்த 180 படம் விஷுவலாய் பார்க்க அவ்வளவு ரம்மியமாக இருக்கும். இந்த படம் என்னமோ அந்த அளவு கிளியறாய் இல்ல. பார்க்க ஏதோ பழைய படம் பார்க்குற மாதிரியே ஒரு பீலிங்.
நான் இதுவரைக்கும் எத்தனையோ படம் பார்த்து இருக்கேன். எல்லா படத்துக்கும் ஒரு இடைவேளை தான் விடுவாங்க. ஆனா இந்த படத்துக்கு மட்டும் மூன்று இடைவேளை விட்டாங்க. ஏன்னு கேக்குறிங்களா! பவர் கட் தான். படம் ஆரம்பிச்சு ஒரு மணி நேரம் கழிச்சு பவர் கட் ஆச்சு அப்பறம் இருட்டுள்ள சும்மா 30 நிமிஷம் உக்கார வச்சுட்டானுங்க. மறுபடி படம் ஆரம்பத்துல்ல இருந்து போடுறானுங்க. அப்பறம் நிறுத்திட்டு 10 நிமிடம் கழித்து ஆரம்பம் ஆகியது. ஏண்டா டேய் தியேட்டர் கட்டுன்ன மட்டும் போதுமா அத ஒழுங்கா உருபுட்டியா செய்ய மாட்டிங்களா. இந்த லட்சனத்துள்ள இவனுகளுக்கு 5 ஸ்க்ரீன் வேற விளங்கிரும்.
கதை வசனம் வெற்றி மாறன் இத நீங்க எழுதாமலே இருந்து இருக்கலாம்.
இயக்கம் மணிமாறன். சாரி அடுத்த படம் நல்ல பண்ணுங்க பாஸ்.
மொத்ததுல்ல இந்த படத்துக்கு போயி ஏன்டா போனேன்னு ஆயிருச்சு.
|
|
Tweet |
3 comments:
இதயம் தொடாத உதயம் ! ?:-)
நல்லா சொன்னிங்க தினகரன் இதே கடைசியா போட்டு இருக்கலாம் ஹா ஹா
சார், நீங்க டைரடக்கு பண்ணுன படத்துக்கு ஏன் சார் அஞ்சு ஆஸ்காரு மட்டும் தான் கெடச்சது?? எட்டுக்கு ஆப்பிளு பண்ணாங்க, கடிசியா அஞ்ச அவுத்துருகாங்க... பெரிய டைரக்டர் சாரு நீங்க..
Post a Comment