இன்னைக்கு சொல்லிக்கிற மாதிரி இரண்டு தமிழ் படம் ரிலிஸ் ஓன்று நான் ராஜாவாக போகின்றேன் இரண்டு யாருடா மகேஷ். மதியம் வரைக்கும் யாருடா மகேஷ் என்ற படத்த தான் பாக்குற ஐடியா தான் இருந்துச்சு. ஆனா முக நூலில் ஆரூர் மூனா செந்தில் அண்ணன் யாருடா மகேஷ் படம் பார்த்திக்கிட்டு இடைவேளை அப்பவே படம் சுமாரா போயிகிட்டு இருக்குறதா ஸ்டேடஸ் போட்டாரு. அத பார்த்ததுக்கு அப்பறம் நாம அங்க போயி சிக்குவோமா. அதான் பைக்க திருப்பி நான் ராஜாவாக போகிறேனுக்கு விட்டேன்.முதல் நாள் படம் மாதிரியே இல்ல காலியா இருந்துச்சு.டிக்கெட் எடுத்து கொண்டு உள்ளே சென்றேன்.
கதை;
படம் தொடங்கியவுடன் 16 மாதங்களுக்கு முன்பு என்று போட்டாங்க நகுல் ரௌடிகளை துவைத்து எடுத்து கொண்டு இருக்கும் பொழுது ஒரு லாரி அவரை இடிக்க மருத்துவமையில் ஸ்டேச்சாரில் தள்ளி கொண்டு போகிறார்கள். அங்கு கட் பண்ணினா 26 மாதங்களுக்கு முன்பு என்று மணிவண்ணனின் மரணத்தை காட்டுகிறார்கள். அதை கட் பண்ணி அழகான மலை பிரதேசம் அந்த ரோட்டில் நகுல் நடந்து சென்று கொண்டு இருக்கிறார்.
நகுளின் அம்மா சீதாவொடு மேகாலயாவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.நகுளிற்கு அவங்க அம்மா திருமணம் செய்து வைக்க பெண் பார்க்கிறார். ஆனால் நகுலோ சிறுவர்களுடன் ஜாலி யா ஊர சுத்திகிட்டு இருக்கார். ஒரு நாள் நகுல் தவறுதலாய் அங்கு இருக்கும் மிலிட்டரி கேம்பில் நுழைந்து விடுகிறார். அங்கு ஒரு ராணுவ வீரனை சந்திக்கிறார். அந்த ராணுவ வீரன் நம்ம நகுலை ராஜா என்று அழைக்க நான் ராஜா இல்ல சார் ஏன் பேரு ஜீவா என்று கூறுகிறார். ராணுவ வீரருக்கு ஒரே ஆச்சரியம் நீ என்னுடன் கல்லூரியில் படித்த என் நண்பனை போன்றே இருக்கிறாய் என்று கூறி ஒரு விடியோவை காட்ட நகுல் ஆச்சரியப் படுகிறார்.
தன்ன மாதிரியே உருவ ஒற்றுமை உள்ள அந்த நகுலை காண இங்கு இருந்து சென்னைக்கு புறப்டுகிறார். அங்கு சென்ற பிறகு அவர் சந்திக்கும் பிரச்சனைகளே நான் ராஜாவாக போகின்றேன் கதை. கிளைமாக்ஸ் நம்ம தமிழ் படத்துல்ல வரது தான் ஆனா நம்ம யூகிக்க முடியாத ஒரு ட்விஸ்ட் இருக்கு படத்துல்ல சூப்பர்.
நடிகர்&நடிகைகள்;
ரொம்ப நாளைக்கு பிறகு வந்து இருக்கும் நகுல் படம். இவர் கடைசியா நடிச்ச படம் மண்ணை கவ்வ ஆளையே கொஞ்ச நாளா காணோம். தற்பொழுது இந்த படத்தின் மூலம் திரும்பி வந்தி இருக்கார். இவர் அறிமுகம் ஆனா பாய்ஸ் படத்தில் இருந்தே இவரை எனக்கு பிடிக்கும். இந்த படத்தில் சிறப்பாகவே நடித்து இருக்கிறார். இரண்டு கதாபாத்திரங்கள் கமல் மாதிரி வித்தியாசம் எல்லாம் காட்டவில்லை. ஆனால் நன்றாக இருக்கிறது.
இந்த ஸ்டில் பார்த்து தான் நான் ஏமாந்துட்டேன் |
கதாநாயகியாக இரண்டு பேர். ஒருவர் பாக்யராஜ் அவர்களால் அறிமுகம் செய்ய பட்ட சாந்தினி. இவர் படத்திற்குள் என்டர் ஆனா பின்பே கதையில் வேகம் பிறக்கிறது. சட்ட கல்லுரி மாணவியாக இயல்பாக நடித்து இருக்கிறார். ஆனா பார்க்க ரொம்ப சுமாரா இருக்கிறார்.
இன்னொரு அறிமுக கதாநாயகி அவானி. நகுல் நண்பியாகவும் அவரை ஒரு தலையாய் காதலிப்பதாகவும் அவருக்கு கொடுத்த பாத்திரத்தை குறை இல்லாமல் செய்து இருக்கிறார். அழகில்ஷந்தினிக்கு எவ்ளவோ தேவலாம்.
அம்மாவாக சீதா, குண்டு ஆர்த்தி, வனிதா விஜயகுமார், சேத்தன் இன்னும் நிறைய பேரு இருகாங்க.
இந்த படத்தில் இசை எல்லாம் பெரிதாக தெரியவில்லை. பாடல்கள் சொல்லிக்கிற மாதிரி இல்ல. ஒரு குத்து பாடலில் ஆடும் நடிகை பார்க்க கேத்ரின கைப் மாதிரி இருகார்.நான் கூட அவர்தன்னோன்னு நினைத்து விட்டேன்.பிரகாஷ் சார் என்ன ஆச்சு.
சண்டை காட்சிகள் இயல்பாய் உள்ளது.
வசனம் வெற்றி மாறன். படத்தை இயக்கி இருப்பவர் ப்ரித்வி ராஜ்குமார்.
மத்த எல்லாம் ஓகே. மொக்கை படம் ன்னு சொல்ல முடியல்ல. சூப்பர் படம்னு சொல்ல முடியாது. சுமாரா இருக்கு.
தஞ்சை விஜயாவில் படம் பார்த்தேன். 80ருபாய் டிக்கெட் விலை. கொடுத்த காசுக்கு ஓகே தான்.
|
|
Tweet |
2 comments:
நான் ராஜாவை பார்க்கப் போகிறேன்..நடுநிரையான விமர்சனம்.
வருகைக்கும் கருத்திடமைகும் நன்றி நண்பா கலியபெருமாள்
Post a Comment