Wednesday 17 April 2013

சந்தானம்- விடிவி கணேஷின் 'இங்கே என்ன சொல்லுது'



வின்சென்ட் செல்வா தன் பெயரை வி.செல்வா என்று மாற்றிவிட்டார். ப்ரியமுடன், யூத், ஜித்தன், வாட்டாக்குடி இரணியன் போன்ற படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வா, ஒளிப்பதிவாளர் வின்சென்ட் மீதிருக்கும் மரியாதை காரணமாக இப்பெயரை வைத்துக் கொண்டதாக ஆரம்ப காலங்களில் கூறி வந்தார்.
இப்போது அந்த மரியாதை குறைந்துவிட்டதா என்று கேட்காதீர்கள், இது காலத்தின் கட்டாயம்.

தற்போது ஒரு படத்தை இயக்கி அது இன்னும் வெளிவராத நிலையில் அதிரடியாக தன் பெயரையும் மாற்றி தனது யூஷுவலான ஸ்டைலையும் மாற்றி வேறொரு படத்தை இயக்கப் போகிறார் வி.செல்வா. படத்தின் பெயர் 'இங்க என்ன சொல்லுது?'

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் விடிவி கணேஷ், சிம்புவின் நெஞ்சை தொட்டு கூறும் 'இங்க என்ன சொல்லுது' என்கிற வசனத்தையே படத்தின் தலைப்பாக்கி இருக்கிறார்கள்.
இப்படத்தில் வி.டி.வி கணேஷ்தான் ஹீரோ. இவரது பேவரைட்டான சந்தானம் இன்னொரு ஹீரோ. ஏற்கனவே இருவரும் 'வானம்', 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' ஆகிய படங்களை இணைந்து கொமெடியில் ஒரு கலக்கு கலக்கியவர்கள்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் பவர் ஸ்டாரை எவ்வாறு கலாயாத்தாரோ அது போல இந்தப் படத்திலும் விடிவி கணேஷை சந்தானம் கலாய்க்க இருக்கிறார்

இந்த விடிவி கணேஷுக்கு ஜோடி யாரென்று நினைக்கிறீர்கள்? சாட்சாத் மீரா ஜாஸ்மினேதான். இப்படத்தை இந்த யூத்களும் விரும்புகிற அளவுக்கு கலகல மசாலாவாக அரைக்க முடிவு செய்திருக்கிறார் வி.செல்வா.

முதலில் இந்த கதையை சினேகாவுக்குதான் சொன்னாராம். அவரும் ஆஹா ஓஹோவென புகழ்ந்தாராம். அவ்வளவு புகழ்ச்சியும் சில நாட்களில் அந்தர் தியானமாகிவிட்டது. காரணம், உங்களுக்கு ஜோடியாக நடிப்பவர் வி.டி.வி கணேஷ்தான் என்று சினேகாவிடம் செல்வா கூற, வெடுக்கென முகத்தை திருப்பிக்கொண்டாராம் அவர். வேற ஆன பாருங்க என்றும் உறுதியாக கூறிவிட்டாராம். இத்தனைக்கும் கொழுத்த சம்பளத்தை தர தயாராக இருந்தது படத்தை தயாரிக்கும் வி.டி.வி நிறுவனம். அதாவது கணேஷின் சொந்த நிறுவனம்.

கடைசியாக சினேகா அளவுக்கு அழகும், புகழும் இருக்கிற நடிகையாக வேறொருவரை தேட, இனி சினிமாவே வேணாம் என்று விரக்தியில் இருந்த மீரா ஜாஸ்மின் சிக்கியிருக்கிறார். அவருக்கும் இந்த அழைப்பு புத்துணர்ச்சியை கொடுத்திருப்பதால், வேக வேகமாக படப்பிடிப்புக்கு கிளம்பிவிட்டார்கள்.
பிரசாந்துடனேயே நடிச்சாச்சு. இனி கணேஷாவது காக்கா கோபாலாவது. பொளந்து கட்டுங்க மீரா..
நன்றி;சினி உலகம் .

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

படம் தேறுமான்னு பார்ப்போம்... தகவலுக்கு நன்றி...

Unknown said...

தனபாலன் அண்ணே எனக்கு இந்த படம் போஸ்டர் பார்க்கும் போதே தேறும்னு தோணுது