Tuesday, 9 April 2013

என்னை கவர்ந்த அடால்ப் ஹிட்லர் பாகம்.3


ஹிட்லரின் இராணுவ பிரவேசமும் வெற்றியும்;

ஹிட்லர் 16 வது பவேரியன் ரிசர்வ் படைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கே அவருக்கு ரன்னெர் பணி தரப்பட்டது. முன்னணியில் போரிடும் வீரர்களுக்கு தகவல்களையும் கட்டளைகளையும் சுமந்து ஓடி சென்று தருவது தன ரன்னெர் பணி. துப்பாக்கி குண்டுகள் பொழிய வெடி குண்டுகள் முழங்கிடும் போர்களத்தில் தனது வீரத்தை வெளி காட்ட இது தான் சமயம் என ஹிட்லர் வெறி பிடித்ததை போல ஓடினார்.ஆச்சர்யம் என்னவென்றால் ஒரு குண்டு கூட அவர் மேல் படவில்லை என்பது தான். பல ஆபத்தான சவால்களை சமாளித்து தப்பிக்கும் சாதுர்யம்படைத்தவராக மேற்கு முன்னணியிருக்காக தாக்குதல் புரிந்தார். பல நேரங்களில் எதிரித்தாக்குதலுக்குள்ளாகி படுகாயம் அடையவும் நேரிட்டது.

1914 ஒய்பெர்ஸ் (Ypers) சண்டையில் மிகவும் முக்கியமான பங்கு வகித்தார். இந்த போரில் கிட்டத்தட்ட 40000 குழந்தைகள் கொல்லப்பட்டனர். இந்த போர் பைபிளில் கூறப்படும் வாசகமான குழந்தைகளின் கொடூரக்கொலை (Massacre of Innocents) என்று விமர்சிக்கப்பட்டது. இந்த கொடூரக்கொலை 9 காலாட்படையினர் ஹிட்லருடன் சேர்ந்து 20 நாளில் நடத்தி முடித்தனர். இதன் மூலம் ஹிட்லர் விமர்சித்து பேசப்பட்டார் ஆகையால் தொடர்ந்து வந்த போர்களில் ஈடுபடவில்லை. என்று ஜான் கீகன் எனும் பிரித்தானிய வரலாற்றியலாளர் குறிப்பிட்டுள்ளார். இரண்டுமுறை ஹிட்லர் இராணுவத்தின் சிறப்பான பணி மேற்கொண்டமைக்காக எஃகு சிலுவை இரண்டாம் வகுப்பு (Iron Cross II Class), எஃகு சிலுவை முதலாம் வகுப்பு (Iron Cross I Class) பதக்கங்களைப் பெற்றார்.

15 அக்டோபர் 1918 ஹிட்லர் நச்சுக்காற்றுக் குண்டு மஸ்டர்ட் வாயு தாக்கியதில் தற்காலிகமாக பார்வையிழந்த நிலையில் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் இந்த பார்வையிழப்பின் பக்கவிளைவாக ஒழுங்குலைந்த மனநிலை (பின்னாளில் இது இஸ்டிரியா எனப்பெயர்) ஏற்படும் என்று தெரிவித்தார். அந்த சூழ்நிலையிலும் அதைரியப்படாமல் ஜெர்மனியை காப்பாற்றுவதற்காக என் உயிர் போனாலும் கவலையில்லை என்று அவரே சமாதனம் செய்துகொண்டார். அவர் மனது முழுக்க யூதர்களை ஒழிப்பதிலேயேயிருந்த்து என்று ஆய்வியலாளர் லூசி தாவிட்ஸ் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர். இட்லர் ஜெர்மன் நாட்டையும், தேசபற்றையும் அதிகம் நேசித்தார் இத்தனைக்கும் 1932 வரை ஜெர்மன் குடிமகனாக மாறவில்லை. (பிறப்பால் ஆஸ்டிரியன்) அதனாலேயே சில பதவிகள் கைவிட்டுப்போயின.

ஹிட்லர் 1918 ம் ஆண்டு ஜெர்மனி சரணைடைந்தது என்ற செய்தி கண்டு அதிர்ச்சியடைந்தார்.மருத்துவ மனையில் இருந்த ஹிட்லர் துரோகம் இது என்று ஓலமிட்டவாறு கதறி அழுதார்.கம்யுனிஸ்ட்களும் யூதர்களுமே ஜெர்மனியின் தோல்விக்கு இரகசியமாக வேலை செய்தார்கள்.அவர்களை அழிக்காமல் விட மாட்டேன் என்று கர்ஜித்தார் ஹிட்லர். ஜெர்மனி இன்னும் போர்முனையில் இருக்கும் நிலையில் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டது ஏன் என்ற பின்னணியில் மார்க்சிய கொள்கையாளர்களும், மக்கள் தலைவர்களும் ஹோம் பிரண்ட் (Home Front) அணியினருக்கு ஆதரவாக உள்ளனர் என்ற உண்மையை தெளிவு படுத்தினார். இந்த செயல் புரிந்த அமைப்பினரை பின்னாளில் நவம்பர் குற்றவாளிகள் (November Criminals) என அழைத்தனர். இந்த ஒப்பந்தத்தால் ஜெர்மனி அதன் தரமிழந்தது. ஜெர்மனியின் படைக்குறைப்பையும் படை விலக்கலையும் வலியுறுத்தியது. ரைன்லேன்ட் நகரில் நிறுத்தப்பட்டிருந்த ஜெர்மனியப் படைகள் திரும்பப் பெறப்பட்டன.

ஜெர்மானியர்களால் பாதிக்கப்பட்ட போலந்தை புணரமைக்க வலியுறுத்தப்பட்டது. இவ்வளவு பேரிழப்பும் ஜெர்மனியின் போரினாலேயே ஏற்பட்டது இதற்கு ஜெர்மானியர்களே காரணம் என்று நிர்பந்திப்பதை பிரித்தானிய வரலாற்று இயலாளர் ஜான் கீகன் (John Keegan) மறுத்தார். ஐராப்பிய நாடுகள் அனைத்துமே நாடு பிடிக்கும் ஆசையால் படைக்கலன்களை பெருக்கி இப்போரில் இறங்கின, ஜெர்மனியின் பங்கு சிறிதளவே என்று தெளிவு படுத்தினார். இருப்பினும் வஞ்சகமாக இதை ஆரம்பித்தது ஜெர்மனிதான் என்று ஹோம் பிரன்ட் அணியினர் குற்றஞ்சாட்டினர். போரினால் ஏற்பட்ட இழப்பீடுகளை ஒப்பந்தத்தில் பிரிவு 231 ல் ஜெர்மனியின் நிலைப்பாட்டைச் சுட்டிக்காட்டியுள்ளபடி ஜெர்மனிதான் ஈடுசெய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தம் ஜெர்மனி எவ்வளவு படைக்கலன்கள் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை குறிப்பிட்டு அதன்படி அனுமதிக்கப்பட்ட படைக்கலன்களின் எண்ணிக்கைப்படி ஜெர்மனியின் முழுபடைப்பிரிவும் படைக்குறைப்புக்கு ஆளாகியது.

ஹிட்லர் பின்வரும் இரண்டு காரணங்களால் மட்டுமே ஜெர்மனியில் நாசிசத்தை உருவாக்கவும் ஆட்சியில் அமரவும் காரணமாயிற்று. ஹிட்லரும் அவரது கட்சினரையும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட தேவையில்லாமல் நவம்பர் குற்றவாளிகளினால் அழைக்கப்பட்டனர். ஜெர்மனியின் வளர்ச்சியில் ஹிட்லர் அதிக அக்கறை காட்டுவதால் அதை தடுக்கவும், பாரிஸ் அமைதி பேச்சுவார்த்தையில் இவரை நவம்பர் கிரிமினல்கள் பலியாடாக ஆக்கி கையொப்பமிட வைத்தனர். முதலாம் உலகப்போரின் முடிவில் வெர்செயில் ஒப்பந்தம் நிறைவேறியது.

என்னை கவர்ந்த அடால்ப் ஹிட்லர் பாகம்.2
http://chakkarakatti.blogspot.in/2013/04/2.html

என்னை கவர்ந்த அடால்ப் ஹிட்லர் பாகம்.1
http://chakkarakatti.blogspot.in/2013/03/1.html

2 comments:

முத்தரசு said...

தெரிந்து கொண்டேன்

மற்ற இரு பதிவுகள் பொறுமையாக வாசிக்கனும்

பகிர்வுக்கு நன்றி

kasi said...

so nice write more. i wnat know about hitler