Thursday 5 September 2013

வருத்தப்படாத வாலிபர் சங்கம் - கிளம்பிட்டான் டா கைப்புள்ள


அதிர்ஷ்டம் ஒரு மனுஷனுக்கு வந்தா கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டுமாம் அது யாருக்கு பொருந்துதோ இல்லையோ நம்ம விஜய் சேதுபதிக்கும் சிவ கார்த்திகேயனுக்கும் நன்றாக பொருந்தும். தமிழ் சினிமாவின் தற்போதைய தவிர்க்க முடியாததாக நடிகர்களாக இருவரும் உள்ளனர்.

மிமிக்ரி ஆர்டிஸ்டா டிவில நுழைந்து பின்பு தொகுப்பாளராக வந்து நடிகராக அறிமுகம் ஆகி இப்போ கலக்கி கொண்டு இருக்கிறாரு நம்ம சிவா. அவருக்கு அடுத்தடுத்து வரிசையா வந்து படங்கள் குவிக்கிறது. இவரோட நடிப்பில் நாளை வெளியாகும் படம் வருத்தபடாத வாலிபர் சங்கம்.

படத்தை வாங்கியவர்களும் எந்த வருத்தமும் இல்லாமல் ரிலாக்சாக இருக்கிறார்கள். காரணம் சிவ கார்த்திகேயன். இவரின் காமெடிப் படங்கள் வெற்றி பெற்றதால் இளைஞர்கள் மத்தியில் சிவ கார்த்திகேயன் என்றால் வரவேற்பு இருக்கிறது. முக்கியமான இன்னொரு காரணம், படத்தின் டீம்.

படத்தை இயக்கியிருக்கும் பொன்ராம் ராஜேஷ் எம். மின் பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்தவர். தன்னுடைய சிஷ்யன் கேட்டு கொண்டதற்காக இந்தப் படத்துக்கு ராஜேஷ் எம். தான் வசனம் எழுதியுள்ளார்.


தேசிங்குராஜாவில் காமெடி என்ற பெயரில் நம்மை எல்லாம் அடித்து துவைத்து தொங்க விட்ட பரோட்டா சூரிதான் இதிலும் காமெடி செய்கிறார். இந்த படத்திலாவது பேசியே சாவ அடிக்காம சிரிக்க வைக்கிறாரா என்று பார்ப்போம். எல்லாவற்றுக்கும் மேல் புரட்சி தமிழன் சத்யராஜ் இருக்கிறார்.

சிவ கார்த்திகேயனுக்கும், சத்யராஜுக்குமான மோதல்தான் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்கிறார்கள். ஹீரோயினாக நடித்திருப்பவர் ஸ்ரீ திவ்யா. இவருக்கும் சிவாவிற்கும் கெமிஸ்ட்ரி, ஹிஸ்டரி, பிசிக்ஸ் எல்லாம் நன்றாக இருக்கிறதா என்று நாளை பார்த்து விடுவோம்.


டி.இமானின் இசையில் ஏற்கனவே பாடல்கள் ஹிட். ஊதா கலரு ரிப்பன் இப்போ என்னோட பேவரிட் பாட்டு. சுப்பிரமணியெம் ஒளிப்பதிவு. சிவ கார்த்திகேயனும் ஒரு பாடலை பாடியிருக்கிறார். 30 லட்சம் பேர் அதை பார்த்திருக்காங்க என்ற பூரிப்பு சிவ கார்த்திகேயனுக்கு. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் படத்தை தயாரித்திருக்கிறார்.

வாலிபர் சங்கத்தில் இம்ப்ரசான திருப்பதி பிரதர்ஸ் சிவ கார்த்திகேயனை இயக்கும் பொறுப்பை பூபதி பாண்டியனிடமிருந்து பொன்ராமிடம் தந்திருக்கிறது. படத்தின் வெற்றிக்கு இதைவிட கட்டியம் கட்டி கூற முடியுமா என்ன. ஆனால் படம் ஊத்தி கொண்டால் அது லிங்குசாமி க்கே வெளிச்சம்.



1 comment:

aavee said...

படம் நல்லா இருக்குங்க.. நன்றி..