Tuesday 3 September 2013

சும்மா நச்சுன்னு இருக்கு - அப்படி ஒன்னும் மோசம் இல்லை


ஆக்ஷன் மசாலாக்களை மட்டுமே எடுத்து வந்த ஏ.வெங்கடேஷ், மசாலாவுக்கு இப்போது மரியாதை குறைவு என்பதை உணர்ந்து, மக்கள் ரசனைப்படி திறந்திருக்கும் காமெடி கடைதான் இந்த சும்மா நச்சுன்னு இருக்கு.

பி.விமல் படத்தை தயாரித்திருக்கிறார். பவர் ஸ்டார் திகாரில் நடிப்பு பயிற்சி பெறுவதற்கு முன் நடித்த படங்களில் இதுவும் ஒன்று. படத்தின் கதை, காட்சி, ஹைலைட் என்று எதைக்கேட்டாலும் ஏ.வெங்கடேஷ் பவர் ஸ்டாரிலிருந்துதான் தொடங்குகிறார். அவரு ஒரு டான்சில் சிம்பு, விஜய் மாதிரி ஆடியிருக்கிறார். சில சீன்ஸ்ல முன்னணி ஹீரோக்களை இமிடேட் செய்திருக்கிறார்.... இந்த மாதிரி.

தமன்குமார், தம்பி ராமையா, அர்ச்சனா ஆகியோருடன் ஏ.வெங்கடேஷும் நடித்துள்ளார். அச்சு என்பவர் இசையமைக்க, சி.ஜே.ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்கள் நா.முத்துக்குமார், வி.டி.விஜயன் எடிட்டிங்.

பவர் ஸ்டாரின் இம்சைகளை சுகமான சுமைகளாக எடுத்துக் கொள்கிறவர்களுக்கான படம்.


கதை;
கதையின் நாயகன் தமன் குமார் ஊரில் இருந்து 25 லட்சம் சம்பாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு சென்னைக்கு வந்து அவரது நண்பர்களான தம்பி ராமையா, ஈரோடு மகேஷ் ஆகியோருடன் ஆட்டோ ஒட்டி கொண்டு இருக்கிறார். நாயகி விபா காதலனை கரம் பிடிக்க மலேசியாவில் இருந்து இந்தியா வர ஒரு இரவில் ரௌடி கும்பலால் விரட்ட படுகிறார். அப்போது நமது நாயகன் அவரை காப்பாற்ற ரௌடி ஒருவன் வீசிய கல் நாயகியின் தலையில் அடிக்க அவர் கோமாவில் விழுகிறார்.

நாயகியை காண அவர் குடும்பம் இந்தியா வர அவர்கள் தமனை விபாவின் காதலன் என தப்பாக நினைக்க பணத்திற்காக தமனும் நாயகியின் காதலனாய் மலேசியா தனது நண்பர்களோடு பயணமாகிறார்.

அங்கு நாயகியின் அப்பாவின்{எ.வெங்கடேஷ்} தம்பி{பவர் ஸ்டார்} தனது அண்ணன் சொத்தில் பங்கு தராததால் அவரை பழிவாங்க சந்தர்பம் எதிர்பார்த்து காத்து இருக்கிறார். தமனை கடத்தி தன் அண்ணனை மிரட்டி சொத்தில் பங்கு வாங்கலாம் என நினைக்கிறார்.

தமன் ஆள் மாறாட்டம் செய்ததில் மாட்டி கொண்டாரா ?
நாயகியின் காதல் என்ன ஆனது ?
பவர் ஸ்டார் சொத்தை கை பற்றினரா ?

என காமெடி ஆக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஏ.வெங்கடேஷ்.


தமன்குமார் நல்ல நடிச்சு இருக்கார் குறை சொல்ல ஒன்னும் இல்லை. நாயகியாக விபா,அர்ச்சனா இதுல விபா முக்கால்வாசி படத்துல்ல கோமள படுத்துராங்க அதனால சொல்ல ஒன்னும் இல்ல. அர்ச்சனா நாயகியின் தங்கை தமனின் நல்ல குணத்தை பார்த்து லவ் பண்றாங்க ஓகே.

படத்தில் என்னை கவர்ந்தது தம்பி ராமையா,ஈரோடு மகேஷ் அப்பறம் நம்ம தமிழகத்தின் பொக்கிஷம் பவர் ஸ்டார் தான்.

படம் வழக்கம் போல நம்ம பவர் ஸ்டார் என்ட்ரி ஆனதும் செம்மையா கீது. தம்பி ராமையாவின் காமெடி சூப்பர். படத்துல்ல குறையே இல்லையான்னு கேட்டா நிறைய இருக்கு பாட்டெல்லாம் ஒண்ணுமே நல்லா இல்ல. ஆனாலும் பெரிய ஹிரோ பெரிய பட்ஜெட் அப்படின்னு நம்மகிட்ட 150 ரூபாய் கொள்ளை அடிக்காம வெறும் 60 ரூபாய்க்கு நம்மள நல்லா சிரிக்க வச்சு அனுப்புறாங்க.

சும்மா நச்சுன்னு இருக்கு ஜாலி யா ஒரு தடவ போயி பார்க்கலாம் பாஸ்.


5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சும்மா நச்சுன்னு இருக்கு...! பார்த்திடுவோம்...



தனிமரம் said...

ஆஹா அப்படியா பார்த்துவிட்டாள் போச்சு :)))பதிவில் இசை அமைப்பாள் சரியா இல்லை பாடல் ஆசிரியர் சரியா கொஞ்சம் பாருங்க குழப்பம் தருகின்றது !நான் படிக்காதவன் ஐயா:)))

Unknown said...

கண்டிப்பா பாருங்க dd அண்ணே

Unknown said...

திருத்திட்டேன் நேசன் அண்ணே

கவிதை வானம் said...

பவர் ஸ்டாரின் இம்சைகளை சுகமான சுமைகளாக எடுத்துக் கொள்கிறவர்களுக்கான படம்...
அதுதான் என்னவோ நம்ம கோல்மால் தியேட்டருக்கு வரவே இல்லை...