நம்ம தமிழ் சினிமால ஒரு படம் ஹிட் ஆனால் அதன் இரண்டாம் பாகம் தயாரிப்பது தற்போதைய ட்ரென்ட். அந்த வரிசையில் முன்பு சத்யராஜ் நடிப்பில் வெளியாகி மணிவண்ணனின் இயக்கத்தில் வெளியாகி சூப்பர்
டூப்பர் ஹிட் ஆனா அரசியல் கலக்கலான ஹிட் படம் அமைதி படை. இந்த
படத்தோட இரண்டாம் பாகம் அப்படின்னு சொன்னதும் கேக்கனும்மா அரசியல் ஆர்வலர்கள் எல்லோருக்கும் இந்த படத்தின் மீது மிக பெரிய எதிர் பார்ப்பு வந்து விட்டது.
சத்யராஜ் மணிவண்ணன் இரண்டு பேருமே லொள்ளு பார்ட்டிகள் இவர்களிடம் நாம எதிர்பார்ப்பதும் அதுவே. இவர்களின் முந்தைய படங்களும் 100% லொள்ளாகவே இருக்கும் இந்த படமும் அது போலவே இருக்கும்னு நமக்கு தெரியாதா? இவங்க இரண்டு பேரிடமும் மாட்டி கொண்டு யாரு யாரு எல்லாம் நாற போகிறார்கள் என்று எண்ணினேன் அதனால் இந்த படத்தை பார்க்க வேண்டும் என நினைத்தேன்.
இன்றைக்கு வெள்ளி கிழமை அதனால 11 மணி காட்சிக்கு போனால் 1.30 மணிக்கு தொழுக போக முடியாது. அப்ப மேட்னி போகலாம் என்று பார்த்தால் 2.00 மணிக்கு படம் நான் இங்க இருந்து கிளம்பி தியேட்டரை சென்று அடைய முப்பது நிமிடம் ஆகும் நான் போறதுகுள்ள படம் ஆரம்பம் ஆகி விடும். என்ன செய்யலாம் சரி சாப்பிட்டு விட்டு சாயங்காலம் செல்லலாம் என்று முடிவு செய்தேன்.
போன முறை 3 பேர் 3 காதல் படத்திற்கு விமர்சனம் படிக்காமல் சென்று மாட்டி கொண்டோம் இந்த தடவை யாராச்சும் காலையில் படத்தை பார்த்து விட்டு விமர்சனம் போட்டு இருப்பாங்க அதை படிச்சு பார்த்து விட்டு செல்லலாம் என முடிவு பண்ணி அலசி பார்த்தேன். நம்ம அட்ராசக்க சிபி விமர்சனம் பண்ணி இருந்தாரு படிச்சேன் படம் ஒன்னும் வொர்தா தெரியல்ல வெறும் வசனத்திற்காக மட்டும் போயி பார்க்க வேண்டுமா என முடிவு செய்து கிரிக்கெட் விளையாட சென்று விட்டேன். 250 ரூபாய் மிச்ச படுத்தி கொடுத்த அண்ணன் செந்தில் குமார் வாழ்க.
விமர்சனம் படிக்க வந்தா இப்படி ஏமாத்திட்டேன் என்று யாரும் சாபம் விட வேண்டாம் கிழே உள்ள லிங்கில் சென்று படித்து கொள்ளவும் ஹாஹா...
http://www.adrasaka.com/2013/05/blog-post_7352.html
நன்றி வணக்கம்.
விமர்சனம் படிக்க வந்தா இப்படி ஏமாத்திட்டேன் என்று யாரும் சாபம் விட வேண்டாம் கிழே உள்ள லிங்கில் சென்று படித்து கொள்ளவும் ஹாஹா...
http://www.adrasaka.com/2013/05/blog-post_7352.html
நன்றி வணக்கம்.
|
|
Tweet |
9 comments:
அப்போ இனி படத்தை பார்க்க மாட்டீங்க...?
இந்த படத்த பார்க்க மாட்டேன் தனபாலன் அண்ணே
நான் பார்ப்பேன் சக்கரைக் கட்டி அண்ணே
பிச்சை சகோ பாருங்க பார்த்துட்டு சொல்லுங்க
நானும் பார்ப்பேன் டவ்ன்லோடிங்ல
எலே.....
ஏலே கீச்சான் வந்தாச்சு என்னன்னே சாங் கா
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி..
அஸ்ஸலாமு அலைக்கும்,
//1.30 மணிக்கு தொழுக போக முடியாது// - இதுவும் //சும்மா ஒரு கிளுகிளுப்புக்கு ஹிஹி// - இதுவும் நேரடி முரண்பாடாக இருக்கின்றதே சகோ. தொழுகை என்பது மனதை ஒருநிலைப்படுத்தி, தவறான விசயங்களில் இருந்து நம்மை செம்மைப்படுத்தும் ஒரு வழிமுறை என்றே நான் எண்ணியிருந்தேன். இப்படி கிளுகிளுப்பான படத்தை போடுவதில் இருந்து அது உங்களை காக்கவில்லை என்றால் அந்த தொழுகை என்பது வெறுமனே சடங்கு, பத்தோடு பதினொன்றாக நாமும் செய்துவைப்போமே என்ற கடமை மட்டுமே என்பதாகவே புரியமுடிகின்றது.
தவறாக இருந்தால் மன்னிக்கவும்
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
http://www.ethirkkural.com/
வலைக்கும் சலாம் தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி சகோ ஆஷிக் படத்தை நீக்கி விட்டேன் வருகைக்கு நன்றி
Post a Comment