Thursday 2 May 2013

மூன்று பேர் மூன்று காதல்


வசந்தின் முந்தைய படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் அவருக்காக இந்த படத்தை பார்க்கலாம் என்று சென்றேன். நம்பி போன என்னை இப்படி போட்டாயா வறுத்து எடுபிங்க.

கதை;

இந்த படத்துல்ல மூன்று விதமான காதலை நமக்கு வசந்த் காட்டுகிறார்.
வருண் ஆக விமல் அவர் இந்த கதையை சொல்வது போல படம் ஆரம்பிகிறது. 

மலையும் மலை சார்ந்த இடமும் இங்க இருந்து தான் படம் ஆரம்பிக்குது. பெரிய சொப்ட்வேர் கம்பெனி ஒவ்னெர் மகன் விமல். ஒரு பொண்ண சந்திக்கிறார். பார்த்ததும் காதல் அவருக்கு மொக்க பீசு அத காட்றதுக்கு அவ்ளோ பில்டப்பா. அவரின் தந்தையை சந்தித்து பெண் கேட்கிறார். அவர் தந்தையோ அவளுக்கு நிச்சயம் ஆகி விட்டது காதல் திருமணம் தான் என கூறுகிறார். உடனே விமல் சோகமாக ஒரு பாட்டு பாடுகிறார். பாடல் முடிந்தவுடன் அந்த பெண்ணின் நிச்சயம் நின்று விடுவதாக அவருக்கு தெரிய வருகிறது. அந்த பெண் தன் காதலனுடன் ப்ரேக் அப் என சொல்கிறாள். அப்பறம் என்ன நானே உன்னை கல்யாணம் பண்ணிகிறதா சொல்றாரு கல்யாணம் பண்ணிக்க போறாங்க அப்படின்னு பார்த்த விமல் கல்யாணத்த நிருத்திட்டதா சொல்றாரு ஏன் அதுக்கு ஒரு பிளாஷ் பேக்.

கடலும் கடல் சார்ந்த இடமும் மலைல சொன்ன கதைல விமல் பொண்ணு பின்னாடி சுத்துனதா காட்டியாச்சு இங்கயும் அப்படி காட்ட கூடாது. அதனால ஒரு பொண்ணு ஒரு பையன் பின்னாடி சுத்துறா காட்றாங்க அவரு தான் நம்ம சேரன். இந்த பொண்ணுக்கு சேரன் மேல காதல் வர ஒரு கதை சொல்றாங்க மொக்கையா இருக்கு. ஆனா சேரன் ரொம்ப பொறுப்பானவர் தவறு செய்து சிறைக்கு சென்ற கைதிகளை எல்லாம் ஒன்றிணைத்து மறுவாழ்வு தருகிறார் அவரை காதலிக்கும் நாயகி இது ஒரு காதல் கதை.

நிலமும் நிலம் சார்ந்த இடமும் இங்கே அர்ஜுன் ஒரு நீச்சல் பயிற்சியாளர். அவரிடம் நீச்சல் பயிலும் மாணவியை உசார் பண்ணி விடுகிறார். ஆனால் அவரை ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வாங்க வைப்பதே தனது லட்சியமாக கொண்டுள்ளார். ஒலிம்பிக் தேர்வின் போது அர்ஜுன் விபத்தில் சிக்க அவரது லட்சியம் என்ன ஆனது இது ஒரு கதை.

3 பாடல்கள் அருமை. வசனங்கள் ஒரு சில நன்றாகவும் மொக்கையகவும் உள்ளது.படத்தில் ஒரு பாடலில் வசந்தின் மகன் அறிமுகம். அவரோட அடுத்த படம் அவங்க அப்பா இயக்கம இருந்தா நடிக்கலாம். அழகாக தான் இருக்கிறார்.

அர்ஜுன்,சேரன்,விமல்,இதுல்ல வசந்தின் மகன் வேறு ஒரு பாடல் வழியாக அறிமுகம் ஆகிறார். மூன்று நாயகன் இருந்தா மூன்று நாயகி இருக்கணுமே அதுக்காக மூன்று பேர். பணம் போட இளிச்ச வாய் தயரிப்பாளர் கிடைச்சாச்சு. படத்த ஆரம்பிச்சுர வேண்டியது தான்னு ஆரம்பிச்சு எங்கயோ போயி என்னமோ சொல்லி ஒரு வழிய படத்த முடிச்சுட்டாறு. வசந்த் அய்யா சரக்கு இருந்தா படம் எடுங்க இல்ல வி ஆர் எஸ் வாங்கிட்டு ஓடி போயிருங்க. இப்படி வம்பா படம் எடுத்து எங்கள கஷ்ட படுதாதிங்க. இருக்குற கொஞ்ச நஞ்ச பேரையாவது காப்பாதிக்கங்க.

தஞ்சை ஜி வி ஸ்டுடியோல  படம் பார்த்தேன். நெறைய பேரு தூங்கிட்டாங்க இதுல்ல இருந்தே தெரியும் படத்தின் வொர்த் நான் வேற சொல்லனும்மா.  

12 comments:

ம.தி.சுதா said...

ஒரு காதலை ஒழுங்காகக் காட்டினாலே ஓடுமா என்றிருக்கும் போது ????

நன்றி சகோ

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மதியோடை

தினகரன் said...

எவ்வளவு ரசிச்சோமோ அந்தளவு வெறுக்கவும் வைச்சிடுறாங்கப்பா . .

rajamelaiyur said...

ரொம்ப பாதிக்கபட்டு இருக்கிங்க போல??? எங்களை காப்பாத்திட்டிங்க. . .

Unknown said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ ம.தி சுதா

Unknown said...

ஆமா தினகரன் சார் இவரின் பழைய படங்கள் எவ்வளவு நன்றாக இருக்கும் அந்த நம்பிக்கையில் தான் சென்று மாட்டிகொண்டேன்

Unknown said...

ராஜா சார் உங்கள காபத்துன்ன மாதிரி நீங்க எதிர் நீச்சல் பார்த்து எங்கள காபத்துங்க

Anonymous said...

வசந்தின் படத்தில் எப்பவுமே பாடல்கள் அருமையாக இருக்குமே..அதுவும் வேஸ்டா..

Unknown said...

கலிய பெருமாள் சார் 3 பாடல்கள் தேறும்

Anonymous said...

I am escape.

Unknown said...

சிவா அண்ணே வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

Dino LA said...

அருமை

Unknown said...

வருகைக்கு நன்றி மாற்றுபார்வை சகோ