Friday 20 December 2013

2013 - சூப்பர் பொழுது போக்கு படங்கள்

இந்த வருடம் வெளியாகி நல்ல படம் & சூப்பர் ஹிட் அடித்த படங்களின் பட்டியலில் என்னை கவர்ந்த டாப் டென் படங்களை பார்ப்போம்.


10.மூடர் கூடம்;

இந்த படம் கொரியன் படத்தின் காப்பி என்று விமர்சகர்கள் கூறினாலும் கொரியன் படமெல்லாம் பார்த்திராத {பார்த்தாலும் எனக்கு புரியாது} என்னை போன்ற சிலருக்கு இந்த படம் ரொம்பவே பிடித்தமான ஒன்றாகி போனது. வெறும் அடிதடி சண்டை என பார்த்து வெறுத்து போன ரசிகர்களுக்கு இது ஒரு வித்தியாசமான முயற்சியாக இருந்தது. கோடி கணக்கில் கொள்ளை அடிக்கும் அரசியல் வியாதிகளையே மன்னித்து விடும் நாம் இந்த படத்தின் இயக்குனர் நவீனை மன்னித்து விட்டு விடுவோம். இந்த படம் காப்பி இல்லாமல் இருந்தால் முதல் இடம் கொடுத்து இருப்பேன். அடுத்த படமாவது ஒரிஜினல்லா  கொடுங்க மிஸ்டர் நவீன்.


9.கண்ணா லட்டு தின்ன ஆசையா;

நம்ம சந்தானம் நகைச்சுவை நடிகரில் இருந்து தயாரிப்பாளர் ஆக உயர்ந்து அதில் வெற்றியும் பெற்ற படம். இந்த படம் வெற்றி அடைய பெரிய காரணம் வேற என்ன நம்ம பவர் ஸ்டார் தான். குறைந்த முதலிட்டில் பெரிய லாபம் பெற்ற படம். மேல சொன்ன படமாவது கொரியன் படத்தை சுட்டு எடுத்தாங்க ஆனா நம்மாளு சந்தானம் இயக்குனர் பாக்யராஜ் படத்தையே சுட்டுட்டார் என்ன நான் சொல்றது.


8.வருத்தபடதா வாலிபர் சங்கம்;

இந்த படம் எதுக்கு இப்படி ஒடுசுன்னே தெரியல படமும் அவ்ளோ பெரிய காமெடி எல்லாம் இல்ல பாடல்கள் வேணும்னா கேக்க ரொம்ப நல்லா இருந்துச்சு. ஹரிதாஸ் மாதிரி நல்ல படமெல்லாம் நம்ம இந்திய ரூபாய்
மாதிரி தள்ளாடும் போது இந்த மாதிரி படங்கள் நல்லா கல்லா கட்டும் போது வருத்தமாகவே உள்ளது.



7.உதயம் NH 4;

சித்தார்த் நடிப்பில் வெளிவந்த படம் இந்த படத்தின் கதையை ஆரம்பம் முதல் சுவாரசியமாக கொண்டு சென்று இருந்தார்கள். இதில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து இருந்த கே.கே.மேனன் என்னை மிக கவர்ந்தார். இந்த படமும் முதலுக்கு மோசம் இல்லை.


6.எதிர் நீச்சல்;

நடிகர் தனுஷ் தயாரிப்பில் வெளி வந்து சக்கை போடு போட்ட படம். சிவா இந்த படத்தில் இருந்தே முழு வெற்றி பட நாயகனனார். பாடல்கள் எல்லாம் செம்மையா இருந்துச்சு. படம் முன் பாதி செம்ம காமெடி இடைவேளை பின்பு சுமார தான் இருந்துச்சு. ஆனா படம் வெற்றி படமே அதுல சந்தேகம் இல்லை.


5.ராஜா ராணி;

அறிமுக இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளி வந்து சூப்பர் ஹிட் அடித்த ஒரு லவ் ஸ்டோரி. இந்த படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் எல்லோரையும் ஓரம் கட்டி விட்டார் நம்ம ஜெய். சந்தானம் காமெடியும் நல்லா தான் இருந்துச்சு. ஆர்யா,நயன்தாரா,நஸ்ரியா என அனைவரும் நன்றாக தங்கள் வேலையை செய்து இருந்தனர். இந்த வெற்றியை அடுத்த படத்திலும் தொடர்வார இயக்குனர் அட்லி பொருத்து இருந்து பார்ப்போம்.


4.பாண்டிய நாடு;

ரொம்ப நாளா வெற்றி படமே கொடுக்க முடியாமல் இருந்த விஷாலை நடிகராக வெற்றி பெற வைத்தது மட்டும் இல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் வெற்றி பெற வைத்த ஒரு படம். படம் எந்த இடத்திலும் போரடிக்காமல் அழகாக விறு விறுப்பாக கொண்டு சென்று இருந்தார் இயக்குனர் சுசிந்திரன்.


3.சூது கவ்வும்;

விஜய் சேதுபதி யின் வித்தியாசமான முயற்சிகளில் மிக பெரிய வெற்றி பெற்ற படம். குறும் பட இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் சக்கை போடு போட்டது. குறும்பட நடிகர்கள் அனைவரும் கலக்கி இருந்தார்கள் பாடல்கள் பின்னணி இசை என எல்லாம் கலகலாக அமைந்து வசூலும் கலக்கல். இந்த வருடத்தின் மிக பெரிய ஹிட்களில் இதும் ஓன்று.


2.சிங்கம் 2;

சூர்யாவின் தொடர் தோல்விகளுக்கு பின்பு வெளிவந்து அவரை நிமிர்ந்து உட்கார வைத்த படம். சும்மா சொல்ல கூடாது படம் ஆரம்பித்ததில் இருந்து செம்ம ஸ்பீட். அதும் சண்டைகள் எல்லாம் சும்மா ஜிவ்ன்னு இருந்துச்சு.
ஹரி சும்மா பரபர ன்னு இயக்கி இருந்தார். ஆனா இந்த வருஷம் வித்தியாசமான முயற்சிகள் செய்து வெற்றி பெற்ற இயக்குனர்கள் இந்த படத்தின் வெற்றியை வைத்து மீண்டும் தமிழ் சினிமாவை மசாலாவில் இழுத்து விட்டு விடுவார்களோ என்ற பயம் வேறு உள்ளது.


1.விஸ்வரூபம்;

படம் வெளி ஆக விடாமல் எவ்வளவு போராட்டம் அதை வெளி கொண்டு வர எம்புட்டு கஷ்டம் நம்ம உலக நாயகனுக்கு. மிக பெரும் எதிர்ப்பை சமாளித்து மிக பெரிய வசூலை வாரி குவித்த படம். இன்றும் நடிப்பில் கமலை மிஞ்ச ஆள் இல்லை அந்த முதல் பாடலிலேயே ஒரு பெண்ணுக்கு உரிய நளினமான அசைவுகளை கண் முன் நிறுத்தி ஆடி இருப்பார். ஆனா இந்த படம் பார்க்க என் கூட வந்த என் சித்தப்பா தூங்கி விட்டார். எல்லோருக்கும் பிடித்த படமா என தெரியவில்லை. எனக்கு பிடித்து இருந்தது.

இது தவிர கேடி பில்லா கில்லாடி ரங்கா, ஆதலால் காதல் செய்வீர், சென்னையில் ஒரு நாள், ஹரிதாஸ், ஆரம்பம், நேரம், தீயா வேலை செய்யணும் குமாரு, ஒநாயும் ஆட்டுக்குட்டியும், என சுமாரான படங்களும் வெற்றி படங்களே... 

4 comments:

nivesh said...

arrambam sumara hit a? haha... nallavela tholaiva b.buster endu sollela.....

nivesh said...

intha year da no 1 hit e arrambam than.... next time better luck for vijay ...

Unknown said...

நிவேஷ் எனக்கு பிடிச்ச படங்கள் வரிசை தான்

எப்போ பாரு விஜய் அஜித் பிரச்னை தானா விடுங்க பாஸ்

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது... உங்கள் விருப்பம்... பாராட்டுக்கள்...

வாழ்த்துக்கள்...