அறிந்துகொள்வோம்;
வெங்காயம், பூண்டின் தோல் உரித்தப்பின் கைகளில் வெங்காய வாசனை போகவில்லையா? ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்பூனில் கைகளை நன்றாக தடவுங்கள்.
உங்கள் வீட்டில் எறும்பு தொல்லை அதிகமாக உள்ளதா, அவை எந்த வழியாக வருகின்றன என்பதை பார்த்து, அங்கு பெட்ரோலியம் ஜெல்லியை பூசிவிடுங்கள்
மீன் தொட்டியை நீங்கள் சுத்தம் செய்து வேறு நீர் மாற்றும் போது, பழைய நீரை கீழே ஊற்றுவதற்கு பதிலாக உங்கள் வீட்டு செடிகளுக்கு ஊற்றலாம்.
வெள்ளி பாத்திரங்கள் கருப்பாகிவிட்டதா, உங்கள் டூத்பேஸ்டை வைத்து தேய்த்தால், அந்த நிறம் மறைந்துவிடும்
பிஸ்கெட்டுகள் நமுத்துப்போகாமல் இருக்க, அவற்றை வைக்கும் பாட்டிலுக்கு அடியில் டிஷ்யூ பேப்பரை வைத்துவிடுங்கள்.
உப்பு ஜாடியில், உப்பு கட்டியாக மாறியிருந்தால், அந்த ஜாடியில் சிறிதளவு அரிசியை சேர்த்துவிட்டால் போதும்.
வீட்டில் எலி தொல்லையா...?
வீட்டை என்னதான் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருந்தாலும், பலரது வீட்டில் எலித் தொல்லையால் பெரும் பிரச்சனை ஏற்படுவதுண்டு.
எலிகளின் மீது ஒரு விதமான வெறுப்பு ஏற்படுவதற்கு காரணமே, அவை வீடு மற்றும் தோட்டத்தை நொடிப் பொழுதில் அசிங்கமாக்கிவிடுவதுதான். எலிப் பிரச்சனையின்றி வீடு மற்றும் தோட்டத்தை வைத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்யலாம் எனத் தெரிந்துக்கொள்ளுங்கள்.
எலிகளுக்கு புதினாவின் வாசனை சுத்தமாக பிடிக்காது. வீட்டில் எலி நடமாடும் பகுதிகளில் புதினா இலைகள் அல்லது புதினாவின் வாசனை உடைய திரவியம் ஆகியவற்றை வைத்தால் எலி தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.
குப்பைகளை கொட்டியப்பிறகு குப்பைத்தொட்டிகளை சுத்தமாக கழுவி வையுங்கள். முக்கியமாக, ஈரமாக இருக்கும் குப்பைகளை போடும் போது, மறக்காமல் அதனை மூடி வைக்க வேண்டும்.
தோட்டத்தின் கழிவுகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்.
வீட்டில் ஏதேனும் ஓட்டை இருந்தால், அதனை உடனடியாக சிமென்ட் அல்லது மண் வைத்து அடைத்து விடுங்கள்.
இப்போது விற்கப்படும் எலிகளுக்கான விஷ மருந்துகளை உண்டப்பின் எலிகள் வீட்டுக்குள்ளேயே இறந்துபோவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே, இவ்வகை மருந்துகளை உபயோகிக்கும் போது கவனம் தேவை.
இவை அனைத்தயும் விட எளிமையானது. வீட்டில் ஆங்காங்கே நாஃப்தலின் (ரசகற்பூரம்) பால்ஸ் வைப்பதுதான். நாஃப்தலின் பால்ஸ் இருப்பது தெரிந்தால் எலிகள் அப்பக்கமே வராது.
|
|
Tweet |
4 comments:
நாஃப்தலின் பால்ஸ் - நல்ல தகவல்...
பயனுள்ள குறிப்புகள்
பயனுள்ள குறிப்புகள். பகிர்விற்கு நன்றி.
பயனுள்ள குறிப்புகள்.... நன்றி சக்கரகட்டி.
Post a Comment