இளைய தளபதி விஜய்யை மிஞ்சினார் கார்த்தி எப்படின்னு கேக்குறிங்களா ஆதி முதல் சுறா வரை 40 அல்லது 50 பேரை அடித்து துவைத்து நடித்து கொண்டிருந்த விஜய் இனி அவ்வாறு அடித்தால் தமிழக மக்களால் தாக்கபடுவோம் என்பதை உணர்ந்து கடைசியாக காவலனில் இருந்து துப்பாக்கி வரை கதையின் தேவைக்கு ஏற்ப நடித்து மக்கள் மனதில் தன்னை இளைய தளபதியாக நிலை நிறுத்தி கொண்டார். இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி இந்திய ஸ்டன்ட் மாஸ்டர்களை நிலைகுலைய செய்தவர் நமது கார்த்தி அவர்கள் சமிபத்தில் அவர் அடித்து [நடித்து அல்ல] முடித்து இருக்கும் படம் தான் அலெக்ஸ் பாண்டியன்.
அலெக்ஸ் பாண்டியன் படத்தில் காமெடிக்கு என்று சந்தானம் இருக்கும் பொழுது அவரை மிஞ்சி இவர் செய்து இருக்கும் நகைச்சுவை காட்சிகள் மக்களுக்கு பீதியை உண்டாக்கி உள்ளது. [எனக்கு பேதியே உண்டாகிருச்சு] படம் முழுவதும் நகைச்சுவை இருப்பதால்
நகைச்சுவைக்கு எடுத்துகாட்டாக சில காட்சிகள்;
காட்சி .1
படம் ஆரம்பமே அவரது நகைச்சுவை காட்சி தான். நாமெல்லாம் ஓடும் பஸ்சில் ஏறவே சிரமப்படும் போது அவர் ஓடும் ட்ரெயினில் ஏறுவதற்காக மின்னல் வேகத்தில் ஓடி வருகிறார். ட்ரெயினில் இடம் பிடிக்க நாம் ஓடுவது போல. ஓடினால் மட்டும் போதாது 50 பேரை அடினாலும் அடி அம்மாடியோவ். இறுதியாக ட்ரைன் வருவதற்கு முன்பாக ஒரு பாலத்தின் மேல இருந்து குதித்து ட்ரெயினில் குதிக்கிறார். இந்த காட்சியை பார்த்த உடனே தியேட்டரில் பாதி பேரு ஓடிவிட்டார்கள்.
காட்சி 2;
வில்லன்கள் அனைவரும் துப்பாக்கியால் நேருக்கு நேர் நின்று சுடும் பொழுது இவர் அனுஷ்காவுடன் ஒரு குண்டு கூட மேல படாமல் ஓடும் பொழுது நான் நமது இந்திய அரசாங்கம் இவரை ஏன் போர்களத்திற்கு அனுப்ப கூடாது என்று நினைத்தேன். இவர் ஒருவரே போதும் நம்மை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க.
காட்சி 3.
பல லட்ச ரூபாய் காரில் வில்லன்கள் துரத்த இவர் ஓம்னி வேனில் தப்பி செல்லும் காட்சி இருகிறதே. அதும் இளநி வெட்டும் அருவாளால் இவர் கார்களை கொத்தி விடும் பொழுது ஒவ்வொரு காரும் பனை மர உயரத்திற்கு பறக்கும் காட்சி ஆனந்த கண்ணிரே வந்து விட்டது எனக்கு.
காட்சி 4.
தமிழக முதல்வரின் மகளை கடத்தும் காட்சி காமெடியின் உச்ச கட்டம். பெட்டி கடையில் குச்சி மிட்டாய் திருடுவது போல. இறுதியில் அனுஷ்காவிற்கு இவர் மேல் வரும் காதல். இந்த படத்திற்கு நீ போவியா போவியான்னு தலையில் அடித்து கொண்டேன். [காக்கா பெல்டு அடிக்க சொல்லி கொடுத்த காதல் வருதாம் அனுஷ்காவிற்கு]
காட்சி 5.
இறுதியாக நாயகன் கைகளை கட்டி வில்லன்கள் அடிக்க நாயகி கட்டை அவிழ்த்து விட்டு அடிங்கடா பொட்ட பசங்களா என காட்டு கத்து கத்த வழக்கமான சினிமா தான் மிச்சம் உள்ள 100 பேரை அடித்து நொறுக்கி நாயகன் நாயகி கட்டி பிடிக்க படம் சுபம் பார்த்த நமக்கு கோபம்.மொத்தத்தில் விஜய்யை மிஞ்சி விட்டார் நம்ம கார்த்தி. சத்தியமாக இனி தியேட்டரில் கார்த்தி படம் பார்பதில்லை என்று முடிவு செய்துள்ளேன்.
அண்ணா இனிமே இப்படி அடிக்காதிங்க முடியல்ல.
|
|
Tweet |
4 comments:
உண்மை தான் பாஸ், இந்த படத்துக்கு சுறா பரவாயில்லை..!!
கார்த்தி அடிக்கும் அடியை விட உங்க அடி சரவெடியாக இருக்கிறதே அடுத்தடுத்து போஸ்ட் போட்டு கலக்குகிறீர்கள்...
ஆமா தல ராஜ் மொக்க படம்
தம்பி எல்லாம் உங்க ஆசீர்வாதம்
Post a Comment