Saturday 26 October 2013

சுட்ட கதை - திரை விமர்சனம்


ரொம்ப நாட்களாக எதிர் பார்த்த படம் காரணம் அந்த படத்தோட தலைப்பு. தலைவா படத்தின் வெளியிடு காரணமாக தள்ளி போயி பின்பு வேந்தர் மூவிஸால் கைவிடப்பட்ட படம். இந்த படத்தை வெளி கொண்டு வருவதற்குள் இந்த படத்தின் தயாரிப்பாளர் நொந்து நூலா ஆயிருப்பார்.

இது வழக்கமா வர போலீஸ் படம் இல்லை. ஓங்கி அடிச்சா ஒன்னரை டன் வெயிட் டா அப்படி பஞ்ச் வசனமெல்லாம் இல்லை. அதுக்காகவே இந்த படத்த எடுத்த இயக்குனரை பாராட்டலாம்.

படத்தின் கதை என்ன? கோரமலை என்ற மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமம். அங்கு இருக்கும் காவல் நிலையத்தில் புதிதாக வேலைக்கு சேரும்  இரண்டு கான்ஸ்டபில் போலீஸ் அதிகாரிகள் பாலாஜி&வெங்கி.

அந்த கிராமத்தின் மலைவாழ் மக்கள் தலைவரான m.s பாஸ்கர் சுட்டு கொல்லப்பட அவரை சுட்டது யார் என கண்டறிவதே இந்த சுட்ட கதை.

படத்தில் நிறைய நட்சத்திர பட்டாளம் உயர் அதிகாரியாக நாசர், சயின்டிஸ்டாக ஜெயபிரகாஷ், ஜமினாக லட்சுமி ராமகிருஷ்ணன், டிவி தொகுப்பாளர் பாலாஜி அறிமுக நடிகர் வெங்கி என  எல்லாம் இருந்தும் திரைக்கதை அவ்ளோ சுவாரசியமாக இல்லாததால் படம் சப் என இருக்கிறது.

படமே ஒன்னே முக்கால் மணி நேரம் தான் அதை இன்னும் சிறப்பாக சொல்லி இருக்கலாம். படத்தின் ட்ரைலர் பார்த்த போது செம்ம காமெடியா
இருக்கும்ன்னு நினைத்தேன் ஆனா அங்கங்க மட்டுமே சிரிப்பு வருகிறது.

படத்தின் ஒளிப்பதிவு சூப்பர் அந்த மலை பிரதேசமெல்லாம் பார்க்க அவ்ளோ அழகா இருக்கு. இசை மேட்லி ப்ருஸ் பின்னணி இசை நல்ல இருக்கு m.s விஸ்வநாதன் குரலில் ஒரு பாடல் சூப்பர்.

படத்தை இயக்கி இருப்பவர் அறிமுக இயகுனர் சுபு. எல்லாம் நல்ல இருக்கு படத்தின் திரைக்கதை இன்னும் நல்ல பண்ணி இருந்தா படம் சூப்பர் ன்னு சொல்லலாம் என்ன பன்றது. அடுத்த தடவ இன்னும் பேட்டர ட்ரை பண்ணுங்க சுபு. 

தஞ்சை ஜூபிடரில் படம் பார்த்தேன் மொத்தமே 15 பேர் தான். டிக்கெட் விலை 60 மட்டுமே. 

சுட்ட கதை - வெடிக்கவில்லை 
 

5 comments:

'பரிவை' சே.குமார் said...

சுட்டகதை தயாரிப்பாளரின் கையை சுட்டுவிட்டது என்பதை எல்லாருடைய விமர்சனத்திலும் தெரிகிறது நண்பரே...

வெங்கட் நாகராஜ் said...

படம் சீக்கிரமே தொலைக்காட்சியில் வந்துடும்னு சொல்லுங்க!

திண்டுக்கல் தனபாலன் said...

வெங்கட் நாகராஜ் ஐயா சொன்னது விரைவில் நடக்கலாம்...!

கரந்தை ஜெயக்குமார் said...

தஞ்சை ஜுபிடரில் படம் பார்த்தீர்களா? நீங்கள் தஞ்சாவூரைச் சார்ந்தவரா? விவரம் அறிய ஆவல் நண்பரே.

Unknown said...

ஜெயகுமார் அண்ணே நான் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை தானே