Tuesday 27 August 2013

விஜய்யிடம் போனில் பேசினார் ரஜினி


உர்ர்ரென இருக்கிறாராம் விஜய். இது தலைவா படத்திற்கு தமிழகம் முழுக்க கிடைத்திருக்கும் விமர்சனங்களால் அல்ல. தனக்கென்று ஒரு பிரச்சனை வந்தபோது இந்த சினிமாவுலகம் கைகழுவி விட்டுவிட்டதே என்கிற கவலையால். இதே மாதிரி ஒரு சூழ்நிலை கமலுக்கு வந்த போது ஒட்டுமொத்த சினிமா கலைஞர்களும் கூடிவிட்டார்கள்.

கமல், என்னால யாருக்கும் தர்மசங்கடம் வேண்டாம். என் பிரச்சனையை நான் மீடியாகிட்ட சொல்லிக்கிறேன் என்று சொல்லியும் கூட அவருக்கு ஆதரவு கரம் பெருகி கொண்டேயிருந்தது. ஆனால் தன் விஷயத்தில்?

அஜீத் போனில் பேசினார். சிம்பு மட்டுமேதான் தில்லோடு ட்விட்டரில் தனது கருத்தை பகிர்ந்து கொண்டார். தனுஷ் போட்ட ட்விட்டுக்கு மறுநாளே வேறு மாதிரி மழுப்பல் கருத்தை அவரே வெளியிட்டார்.

இப்படி ஆளாளுக்கு தன் விஷயத்தில் நடந்து கொண்டது விஜய்யை கவலை அடைய வைத்திருக்கிறது.

இந்த நேரத்திலும் விஜய்க்கு ஆறுதலாக நடந்த ஒரே விஷயம் இதுதான். ரஜினி போனில் பேசினாராம். தைரியமா இருங்க. லைஃப்ல இது மாதிரி நிறைய பார்க்கணும். உங்களுக்கு என்னோட சப்போர்ட் எப்பவும் உண்டு என்றாராம். இவ்வளவு பெரிய ஸ்டாரே கை கொடுக்க முன் வந்த பின்பு எதற்காக கவலை?

அவரும் ரகசியமாக போனில் பேசிவிட்டு அமைதியாகிவிட்டாரே என்பதால் இருக்குமோ?

6 comments:

கோவை நேரம் said...

தலைவரோட ஆசி இருக்கா...

'பரிவை' சே.குமார் said...

யார் போனில் பேசினாலும் ஆறுதல் சொன்னாலும் பத்து நாட்களுக்கு மேல் காக்க வைத்து டைம் டூ லீட் என்பதை எடுக்க வைத்து அரசியல் அராஜகம் செய்ததை எப்படி மறக்க முடியும்...

இனி வரும் விஜய் படங்களெல்லாம் அரசியல் நெடி இல்லாமலே வரும் பாருங்கள்...

திராவிட கட்சிகள் இருவரும் தங்களுக்கு எதிராக கிளம்பும் எல்லாத்தையும் வைகோ, மருத்துவர், கேப்டன் என நொறுக்கி அடியிலேயே கிள்ளும் போது டாக்டர் விஜய் வாலாட்டினா விடுவானுங்களா என்ன...

பட்டது போதும் இனி அவர் அப்பனுக்கு புத்தி வரட்டும்...

rajamelaiyur said...

தல.. தளபதி ரசிகர்கள் தான் அடித்து கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒத்துமையாகதான் இருக்கின்றனர்.

rajamelaiyur said...

http://rajamelaiyur.blogspot.com/2013/08/just-for-
fun.html

பாலா said...

எறி வந்த ஏணியை எட்டி உதைக்கும் ஒவ்வொருவருக்கும் குறிப்பாக திருவாளர் விஜய்க்கு மிகப்பெரிய பாடம் இது. தேவையான நேரத்தில் மட்டும் கூடி குலாவுவது, மற்ற நேரங்களில் காலை வாரி விடுவது என்பது விஜய்க்கும் அவரது தந்தைக்கும் கைவந்த கலை. அதன் பலனையே இப்போது அனுபவித்துள்ளார்கள்.

மற்றபடி இந்த விஷயத்தில் நடந்திருப்பது மிகப்பெரிய அராஜகம் என்பதையும் சொல்ல வேண்டும்.

கவிதை வானம் said...

எல்லா நடிகர்கள் போன்றும் அவர் அரசியலுக்கு வர ஆசை படுவதில் தவறு இல்லை...ஆனால் எதையும் இழக்காமல் இன்னொன்று கிடைக்காது...இக்கட இக்கட...அக்கட அக்கட