Wednesday 3 July 2013

தோரணம் 03/07/2013

பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா….? 
உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா….? அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்…!!! எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள்.
பெட்ரோல் வணிகத்தில் வெப்ப அளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பார்க்கப்படுவதில்லை. அதேபோல உங்கள் வாகனத்தின் பெட்ரோல் தொட்டியை எப்பொழுதும் முழுமையாக நிரப்பாதீர்கள். அதனால் உங்களுக்கு நஷ்டமே ஏற்படும். பாதி மட்டுமே நிரப்புங்கள். அதிக எரிபொருள் இருந்தால், அந்தத் தொட்டியில் காற்று குறைவாகவே இருக்கும். நாம் நினைப்பதைவிட வேகமாக பெட்ரோல் ஆவியாகக் கூடியது. பங்கின் பெட்ரோல் சேமிப்புத் தொட்டிகளில் மிதக்கும் கூரைகள் இருக்கும். இதன் காரணமாக உள்ளே பெட்ரோலுக்கும் காற்றுமண்டலத்துக்கும் இடையே இடைவெளி இருக்காது. எனவே, ஆவியாதல் குறையும். வாகன பெட்ரோல் தொட்டியில் பாதி நிரப்பினால், பெட்ரோல் ஆவியாவதை ஓரளவு குறைக்க முடியும்.
அதேபோல நீங்கள் பெட்ரோல் நிரப்பப் போகும் போது தான், அந்த பங்கில் லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கப்படுகிறது என்றால், அப்போது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள். கிடங்கின் அடியில் தேங்கியிருந்த கசடுகள் அப்போது கலங்கி இருக்கும். இது எஞ்சினை பாதிக்கும்.
தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் பசுபதிகோவில் என்ற இடத்தில இயங்கும் பாரத் பெட்ரோல் பங்கில் மட்டும் யாரும் போயி பெட்ரோல் போட்டுறாதிங்க. அங்கு 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டல்  50 ரூபாய்க்கு பெட்ரோல் போடுறானா என்பதே சந்தேகம் தான். அந்த அளவு திருட்டு நடைபெறுகிறது அந்த பங்கிற்க்கு உள்ளூர் காரர்கள் யாரும் செல்வது இல்லை. இப்போது அங்கு அவ்வளாவாக விற்பனை இல்லை என்றாலும் வெளியூரில் இருந்து வருபவர்கள் ஏமாந்து அங்கு சென்று விடுகின்றனர். 

யார் பிரபல ஒளிவட்ட பதிவர்;
நம்ம பதிஉலகில் யாரு பிரபலமான பதிவர்ன்னு கண்டுபிடிப்பது ரொம்ப சுலபம்ன்னே. நிறைய பயனுள்ள தகவல்கள் அட்டகாசமான நகைச்சுவையான எழுத்துநடை அதிகமான வாசகர்களை கவர்வது அப்படின்னு நான் நெனச்சுக்கிட்டு இருந்தேன் அப்படில்லாம் இல்லையாம் பின்ன எப்படி?

1.தான வந்து பேச மாட்டாராம்? {மனசுள்ள பெரிய பாலான்னு நினைப்போ}

2.நம்ம அவரோட முக புத்தகத்தில் ரிக்வெஸ்ட் கொடுத்த அச்செப்ட் பண்ணிக்க மாட்டாராம். {இவரு பெரிய அனுஷ்கா ஷெட்டி}

3.எந்த ஒரு புது முக பதிவர் நல்லாவே எழுதுனாலும் பாராட்ட மாட்டாராம். {நீயே ஒரு காலத்துள்ள புதுமுகம் தான்}

4.தப்பி தவறி கூட மத்தவனுக்கு கமெண்ட் போட மாட்டாராம். {போட டேய்} 

5.பெரிய பெரிய பிரபலம்லாம் இவங்களோட ரசிகர்களாம். {பவர் ஸ்ட்ரா இருப்பாரோ}

6. எல்லோரும் பிரபல பதிவர் ஆயிட்டதால இப்போ இவங்க எல்லாம் ஒளிவட்ட பதிவராம். {ஏன் பதிவு எழுதும் போது சுத்தி மெழுகுவத்தி ஏத்தி வச்சுப்பான்களோ}

7.ஒருத்தவனையும் பாராட்ட மாட்டானுங்க ஆனா இவங்கள மட்டும் நாம பாராட்ட வேண்டும் என்று நினைப்பானுங்க {இந்த பொழப்புக்கு}


இந்த வார நகைச்சுவை;
ஆபிசுல சின்சியரா வேலை செஞ்சிட்டு இருந்தப்போ..

போன் வந்துச்சி ... பார்த்தா புது நம்பர்...
யாருன்னு தெரியல .. ஆனாலும் பேசினேன்...

" Helo... யாரு? ! "ன்னேன்.

" நான் யாருங்குறது இருக்கட்டும் ... உங்க ஆபிசுல A.C Work பண்ணுதா.? "ன்னு கேட்டான்.

" பண்ணுதே.. ! "ன்னேன் நான்

" Computer Work பண்ணுதா.? "ன்னு திரும்பவும் கேட்டான் அவன்.

" அதுவும் Work பண்ணுதே..! "ன்னேன் நான்.

அதுக்கு அந்த நாதாரி சொல்லுது,

" அப்ப நீங்க மட்டும் ஏன் சார் வெட்டியா Phone பேசிட்டு இருக்கீங்க..? ... நீங்களும் போயி Work பண்ண வேண்டியதுதானெ ...! " அப்படிங்குறான்....

வரதட்சணை;

நிறைமாத கர்பிணியான அவள் அக்கம்பக்கத்தினரால் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டாள்.

அவளின்கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.வேலையை முடித்துவிட்டு வேகவேகமாக ஓடினான் கோவிலுக்கு,இறைவனிடம் கைகூப்பி வேண்டினான்.

இறைவன் அவன் முன் தோன்றி உன்பிரார்த்தனைஎன்னவென்று என்னிடம்சொல் நான் நிறைவேற்றி வைக்கிறேன்.அதற்க்கு கைமாறாக நீ நான்சொல்வதை கேட்க வேண்டும் என்றான்இறைவன்.இறைவனின்கட்டளையை ஏற்றுக்கொண்டு அவன்வேண்டுதலை இறைவனிடம் கூறினான்.

எந்த வேண்டுதல் என்னவென்றால் " என்மனைவிக்கு ஆண் குழந்தை தான் பிறக்கவேண்டும் பின் குழந்தை வேண்டாம் "என்று வேண்டிக்கொண்டான். இறைவனும் அவனின்வேண்டுகோளை நிறைவேற்றினான்.

உங்களது வேண்டுகோள் என்னவென்று கூறுங்கள்இறைவா என்று அவன் கேட்டான்.

எனது வேண்டுகோளை காலம்வரும்பொழுது கேட்கிறேன் என்றான்இறைவன்.சுமார் இருபத்து ஐந்து வருடங்கள்கழித்து அவனின் கனவில் இறைவன்தோன்றி தன வேண்டுகோளை வைத்தான்.

அவன் மகன் திருமணத்தின் பொழுது பெண்வீட்டாரிடம் இருந்து எந்த வரதட்சனையும்கேட்கக் கூடாது அந்த பெண்ணுக்கு நீவரதட்சணை கொடுத்து உன் மருமகளாகஏற்றுகொள்ள வேண்டும் என்றான்இறைவன்.

இதை கேட்டு அதிர்ந்து போனான் அவன்.பெண் பிள்ளை பிறந்தால்வரதட்சணை தரவேண்டுமே என்று தான்உன்னிடம் ஆண் பிள்ளை கேட்டேன், கேட்டது போல் ஆண்பிள்ளையை கொடுத்து விட்டு இப்படி ஒருதலையில்சுமத்துகிறாயே இறைவா என்று கதறினான்."

நீ வணங்க பெண் தெய்வம் வேண்டும்.

உன்னை சுமக்க ஒரு பெண் வேண்டும்.

திருமணம் செய்துகொள்ள ஒரு பெண்வேண்டும்

உன்னை அரவணைக்க ஒரு பெண்வேண்டும்

உன்னை நினைத்தே உனக்காக உருக ஒரு பெண் வேண்டும்

உன் மகனுக்கு திருமணம் செய்து வைக்கஒரு பெண் வேண்டும்

"உன் வாழ்க்கையில் பங்கு கொண்டஇத்தனை பெண்களும் உனக்கு பாரமாகதெரியவில்லை

ஆனால் ஒன்றும் அறியா அந்த பெண் சிசு மட்டும் எப்படி பாரமானது ?

நீ எவளவு வரதட்சணை கேட்டாலும்பெண்ணை பெற்றவர்கள் தரவேண்டும் ஆனால் உன்னிடம் யாரும் கேட்கக்கூடாது என்று நீ நினைப்பது எந்தவிதத்தில் நியாயம் ?"வரதட்சணை கேட்பதை நிறுத்தினாலே போதும் பெண் பிள்ளை பாரமாகத்தேரியாது "என்று புத்தியில்உறைக்கும்படி சொன்னான் இறைவன்.




இந்த வார கவிதை;

ஹைக்கூ; 

பூமி தாயின் 

அசுர தாலாட்டு 

நில நடுக்கம்!

எழுதியவர் சா. அக்பர் - கந்தசாமி பாளையம்.

வேண்டுதல்;

முதியோர் இல்லத்தில் இருந்த அம்மா 

இறைவனிடம் இப்படி பிராத்தனை செய்தால்..

"ஆண்டவனே , ஏன் மகன் மாதிரி 

என் பேரனும் இருந்து விட கூடாது "

எஸ்.ஸ்ரீதேவி ரோஜா- காரமடை 
{மனதை தொட்ட வரிகள்}

மனதை தொட்ட வரிகள்;
வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்---


நல்லோர் மனதை நடுங்க செய்யாதே!

தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே!

மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே!

ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே!

பொருளை இச்சித்து பொய் சொல்லாதே!

பசித்தோர் முகத்தைப் பாராதிராதே!

இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே!

குருவை வணங்கக் கூசி நிற்காதே!

வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே!

தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே!


நன்றி!

22 comments:

கே.முருகபூபதி இலக்கியவட்டம் said...

அதிகாலையில் பெட்ரோல் நிரப்ப வேண்டும் என்பது எனக்கு புதிய செய்தி இனி கடைபிடிக்கிறேன்.

ராஜி said...

தோரணம் நல்லாவே இருக்கு,, பெண் சிசு பற்றிய கதை அருமை. பகிர்வுக்கு நன்றி!

Unknown said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பூபதி சார்

Unknown said...

நன்றி ராஜி சகோதரி

'பரிவை' சே.குமார் said...

சக்கரக்கட்டி இனிக்கிறது...
வாழ்த்துக்கள் நண்பரே...

Unknown said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி குமார் நண்பரே

திண்டுக்கல் தனபாலன் said...

நகைச்சுவை கலக்கல்...

வரதட்சணை கேட்பதை முழுவதும் தவிர்க்க சொன்ன கதை பிரமாதம்... பாராட்டுக்கள்...

மனதை தொட்ட வரிகள் உட்பட கவிதை அழகு... தொடர வாழ்த்துக்கள்...

(ஏன் மகன் மாதிரி --> என் மகன் மாதிரி)

Unknown said...

ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் தனபாலன் அண்ணனிற்கு நன்றி

Unknown said...

மிகவும் பயனுள்ள தகவல் . . நன்றி

Unknown said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தினகரன்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

Rightu....

Unknown said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சௌந்தர் சார்

வெற்றிவேல் said...

பயனுள்ள பதிவு!!!

Unknown said...

வருகைக்கு நன்றி இரவின் புன்னகை

பால கணேஷ் said...

பெட்ரோல் நிரப்புகிற விஷயத்தில் நான் ஏற்கனவே இதிலுள்ளவைகளை கடைப்பிடித்து வருகிறேன் என்பதில் சந்தோஷம். அனாதை இல்லத்தில் இருக்கும் அம்மாவின் பிரார்த்தனை மனதைத் தொட்டது. அப்புறம்...இல்ல... இல்ல... நான் நிச்சயம் ஒளிவட்டப் பதிவரு இல்லீ்ங்கோ...! ஹா... ஹா...!

Unknown said...

ஹாஹா பாலகணேஷ் அண்ணே ரொம்ப நன்றி பெட்ரோல் விக்கிற விலைக்கு நாம தான் உஷாரா இருக்கனும் நீங்க ரொம்ப உஷர்ன்னு எனக்கு தெரியும் ன்னே ஹி ஹி

cheena (சீனா) said...

அன்பின் சக்கரகட்டி - தோரணம் அருமை - இரசித்தேன் - இறைவன் நம்மை விட கெட்டிக்காரன் - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

நான் பொறந்தது தஞ்சாவூர் தான் சக்கர கட்டி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Unknown said...

வருகைக்கு நன்றி சீனா ஐயா நானும் தஞ்சை பக்கம் அய்யம்பேட்டை தான்

cheena (சீனா) said...

அன்பின் சக்கர கட்டி - வலைச்சரம் மூலமாக வந்தேன் - படித்தேன் - படித்த மாதிரியே இருக்க மறுமொழிகளூக்கு வந்தால் அங்கே என்னுடைய இரண்டு மறுமொழிகள். பரவாய் இல்லை என்று இம்மறுமொழியும்... நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Avargal Unmaigal said...

நானும் தஞ்சாவூர்காரந்தான் அதாவது தஞ்சாவூருல இருந்து எட்டிப்பார்க்கும் தூரத்தில் இருக்கும் மதுரைதானப்பா அதனால நானும் தஞ்சாவூர்காரந்தானப்பா.

யார் பிரபல ஒளிவட்ட பதிவர்; பற்றி படித்து ரசித்து சிரித்தேன்.சூப்பர் அது போல நீங்கள் நகைச்சுவையாக எழுதிவாருங்கள் சீக்கிரம் நீங்கள் பிரபல பதிவாளர் ஆகி யாருக்கும் கருத்துகள் இட வேண்டியதில்லை

ezhil said...

கவிதைகள் அருமை...