ரஜினி நடிப்பில் இந்தியாவின் முதல் முழுநீள மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் தயாரான கோச்சடையான் படம் ட்ராப் என்றால் எப்படி இருக்கும்?
பணம் போட்ட தயாhpப்பாளர்கள், வேலை செய்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், படத்தில் நடித்தவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் முக்கியமாக ரஜினியின் லட்சக்கணக்கான ரசிகர்கள்... எல்லோருக்கும் எவ்வளவு பெரிய அதிர்ச்சி.
ஆனால்,
படம் வெளிவரப் போவதில்லை, அதுதான் உண்மை என கோச்சடையான் உள்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோச்சடையான் பிரமாண்டமாகவும், ஆர்ப்பாட்டமாகவும் ஆரம்பிக்கப்பட்டது. லண்டன் சென்று படப்பிடிப்பு நடத்தினர். அங்கு எடுத்தக் காட்சிகள் சரிவராமல் கேரளாவில் உள்ள மோகன்லாலின் ஸ்டுடியோவில் சில காட்சிகளை படமாக்கினர். மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்துக்கான வசதிகள் மோகன்லாலின் ஸ்டுடியோவில்தான் உள்ளது, தமிழகத்தில் இல்லை.
சென்ற வருடம் தீபாவளிக்கு படம் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். படத்தின் ஆரம்ப விறுவிறுப்பை பார்த்த ரஜினி, தீபாவளிக்கு முன்பே படம் வெளியாகும் என்றார் ஆனால் எதுவும் நடக்கவில்லை. அடுத்த தீபாவளியும் வரப்போகிறது. ரஜினி டப்பிங் பேசினார், கடலில் டால்பின்களுடன் சண்டை போடுகிறார் என சில துணுக்கு செய்திகளுக்கு அப்பால் கோச்சடையான் நிலவரம் யாருக்கும் தெரியவில்லை.
இந்த வருட தொடக்கத்தில்...
கான் படவிழாவில் கோச்சடையான் ட்ரெய்லர் வெளியிடப்படும் என்றனர். ட்ரெய்லரும் தயாரானது ட்ரெய்லரைப் பார்த்த ரஜினி கடும் அப்செட். அவர் எதிர்பார்த்த குவாலிட்டியுடன் ட்ரெய்லர் இல்லை. சர்வதேச திரைப்பட விழாவில் அதனை வெளியிடுவது சரியல்ல என்று ட்ரெய்லரை மேம்படுத்த கூறிவிட்டார்.
இதுவரை எடுத்தக் காட்சிகள் ரஜினியை திருப்திப்படுத்தவில்லை. இதே தரத்துடன் படத்தை வெளியிட அவருக்கு விருப்பமும் இல்லை என கூறப்படுகிறது. அதனால் படம் யாருக்கும் சொல்லாமல் ட்ராப் செய்யப்பட்டதாக கிசுகிசுக்கிறார்கள்.
கோச்சடையானுக்கு ஒரு ரஜினி படத்துக்கான கோடிகள் கொட்டப்பட்டிருக்கிறது, ரஜினி, சௌந்தர்யா போன்றவர்களின் கனவு, ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த படம். கோச்சடையான் வெளியாக வேண்டும் என்பதுதான் நாம் உள்ளிட்ட அனைவரின் விருப்பமும் எதிர்பார்ப்பும். ஆனால் கோச்சடையானின் இன்றைய நிலை அதற்கு மாறாக இருப்பதுதான் உண்மை என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
சென்னையில் செப்டம்பர் 1 அன்று இரண்டாம் ஆண்டு பதிவர் சந்திப்பு திருவிழா நடைபெறுகிறது. அதில் அனைத்து பதிவர்களும் முடிந்தவரை கலந்து கொண்டு மாநாடு சிறப்பாக நடைபெற உதவுமாறு கேட்டு கொள்ளபடுகிறார்கள்.
இந்த மாநாட்டிற்காக ஆகும் செலவுகளை சமாளிக்க விருப்பமுள்ள பதிவர்களிடம் அன்பளிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. ஏதோ ஒரு வகையில் அன்பளிப்பு குடுக்க இயலாமல் இருக்கும் பதிவர்கள், தங்களின் வருகையையே அன்பளிப்பாக தருமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
கடந்த வருடம் வருகைதந்த பதிவர்கள் அனைவருக்கும் பண உதவி கேட்டு மின்னஞ்சலாகவும் ஏனைய பதிவர்களுக்கு இந்த மாதிரி வெளிப்படையான பதிவுகளின் மூலமும் அன்பளிப்பு கோர உத்தேசிக்கபட்டுள்ளது. அன்பளிப்பு அளிப்பது என்பது கட்டாயம் அல்ல, என்பதனை இங்கே தெரியபடுத்தப்படுகிறது.
இந்த சந்திப்பிற்கு வருகைதர விரும்பும் பதிவர்கள் மற்றும் அன்பளிப்பு அளிக்க விரும்பும் பதிவர்கள் கீழ் கண்ட பதிவர்களை மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டு தங்கள் பெயர், வலைதளமுகவரி, எந்த ஊரிலிருந்து/நாட்டிலிருந்து வருகிறீர்கள் போன்ற தகவல்களை குடுக்கவும். இந்த தகவல்கள், உணவு மற்றும் தங்கும் இடம் ஏற்பாடு செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.
பதிவர் மாநாட்டிற்கான தங்களது வருகையை தெரிவிக்க, தொடர்புகொள்ள வேண்டிய பதிவர்கள் :
மதுமதி – kavimadhumathi@gmail.com
பட்டிகாட்டான் ஜெய் – pattikattaan@gmail.com
சிவக்குமார் – madrasminnal@gmail.com
ஆரூர் மூனா செந்தில் – senthilkkum@gmail.com
அஞ்சாசிங்கம் செல்வின் – selwin76@gmail.com
பாலகணேஷ் – bganesh55@gmail.com
சசிகலா - sasikala2010eni@gmail.com
உங்களது பெயர், உங்கள் வலைதளமுகவரி, ஊர்/நாடு, தொலைபேசி எண்(optinal) தெரிவித்தால், உணவு தயார் செய்ய, வெளியூர் எனில் தங்கும் இட வசதி செய்து குடுக்க மிகவும் உதவியாக இருக்கும்.
வரவேற்புக்குழுவில் சென்னையில் தங்குமிடம் ஏற்பாடு செய்தல், வாகன ஏற்பாடு செய்தல், டிக்கெட் முன்பதிவு செய்ய உதவுதல் போன்ற பணிகளை ஆரூர் மூனா செந்தில், அஞ்சாசிங்கம் செல்வின், மெட்ராஸ் பவன் சிவக்குமார், பிலாசபி பிரபாகரன் ஆகியோர் பொறுப்பேற்று செய்கின்றனர்.
சென்னை தவிர ஏனைய பகுதிகளில் உள்ள உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் மின்னஞ்சலில் அனுப்பியும் அலைபேசியில் அழைத்தும் விழாவுக்கு அழைத்து வரும் பொறுப்பை தமிழ்வாசி பிரகாஷ், சதீஷ் சங்கவி, வீடு சுரேஷ், பாண்டிச்சேரி கோகுல், திண்டுக்கல் தனபாலன் ஆகியோர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
பெண் பதிவர்களின் வரவேற்பு பொறுப்பை மின்னல் வரிகள் கணேஷ், தென்றல் சசிகலா ஆகியோர் ஏற்கின்றனர்.
மற்ற பதிவர்கள் இவர்களை தொடர்பு கொண்டு தங்களது வருகை, தங்குமிடம், வாகன வசதி பொன்றவற்றை உறுதி செய்து கொள்ளவும்.
நன்றி
அடுத்த பதிவு;
புரூஸ் லீ : உலகத்தைக் கவர்ந்த அதிரடி நாயகன்!
|
|
Tweet |
9 comments:
இப்படியும் ஒரு விளம்பர யுக்தி...?
http://kavithaiveedhi.blogspot.com/2013/07/blog-post_703.html
தனபாலன் அண்ணே உங்க கிட்ட இருந்து தப்பிக்க முடியுமா ?
ஹாஹா
ரொம்ப முக்கியமான தவலை பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி
ஹாஹா ரொம்ப முக்கியம் அப்படிங்குறது போல இருக்கு நீங்க சொல்றது சகோதரி ராஜி
சரி சரி
நடத்துங்க... சௌந்தரும் விளம்பரம் பண்ணியிருக்காங்க....
என்ன குமார் பன்றது 4 புக் படிச்சு அதுல 4 விசயத்த பொருக்கி எடுத்து பதிவு போட்ட 4 பேரு தான் படிகிராங்க ரஜினி விஜய் அஜித் அப்ப்டின்ன 400 பேர் படிக்கிறாங்க அப்படி வரும் பொது 4 நல்ல பதிவையும் படிப்பாங்க அப்படிங்குற நம்பிக்கை தான்
எத்தனை கோடிகள் இப்படி வீணாக்கப்படுகின்றன திரையுலகில்? அந்தப் பணத்தில் நல்ல விஷயங்கள் ஏதாவது செஞ்சிருந்தாங்கன்னா நாலு பேரு வாழ்த்தியிருப்பாங்க!
நண்பரே...அவதார்...படம்கூட ஆரம்பத்தில் சொதப்பலாகத்தான் இருந்ததாக கேள்வி...பிறகு மிகப்பெரிய வெற்றிப்படமானது...எல்லா புதிய முயற்சிகளு ஆரம்பத்தில் இப்படித்தான் இருக்கும் என்று சூப்பர் ஸ்டார் அறியாமலா இருப்பார்...?
Post a Comment