Sunday 23 June 2013

தலைவா வெளியிட்டு விழா படங்கள் & பாடல்கள்


நேற்று மாலை தலைவா படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா. நட்சத்திர ஹோட்டலில் தடபுடலாக நடந்தது. ஜி.வி.பிரகாஷும் அவரது வருங்கால மனைவி சைந்தவியும் விஜய்யை வாழ்த்தி ஒரு பாடல் பாடினார்கள். நாளை - அதாவது இன்று விஜய்யின் பிறந்தநாள் என்பதற்காக.

விழாவின் தொடக்கத்தில் லேசரில் காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், மாவோ, சே குவேரா, நெல்சன் மண்டேலா என உலகத் தலைவர்களின் படங்களை ஒளிரச் செய்தார்கள். கடைசில் நாம் எதிர்பார்த்த அந்த திட்டமிட்ட விபத்தும் நடந்தது. தலைவர்கள் வரிசையில் கடைசியாக விஜய்யின் முகமும் லேசரில் ஒளிர... அரங்கம் அதிர்ந்த அளவுக்கு நம் மனமும் அதிர்ந்தது. பிதாவே இவர்கள் செய்வது இன்னதென்று....

சத்யராஜ் கொஞ்ச காலமாக விஜய்யின் கொள்கைப் பரப்பு செயலாளராக நடந்து கொள்கிறார். இந்த விழாவிலும் அப்பணியை சிறப்பாகவே செயல்படுத்தினார். இங்கே உலக தலைவர்களின் முகங்களை லேசாரில் காண்பித்தார்கள். அதில் எனக்குப் பிடித்த பெரியார், எம்ஜிஆர், பிரபாகரனின் முகங்களும் இடம்பெற்றிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன் என்றார். அடுத்து அவர் சொன்னதைக் கேட்டிருந்தால் ஜேம்ஸ் கேமரூனின் இதயம் சுக்கு நூறாக உடைந்திருக்கும். தலைவா படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை பாராட்டியவர், அவர் தென்னகத்து ஜேம்ஸ் கேமரூன் என்றார், எவ்வித சங்கோஜமும் இல்லாமல். எப்படிப்பா...?

சந்திர பிரகாஷ் ஜெயின் - படத்தின் தயாரிப்பாளர் - தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை புரிந்து கொண்ட ஒரே நடிகர் என்று ஆஸ்திரேலிய நிகழ்வு ஒன்றை விவரித்தார். அனைவரும் எதிர்பார்த்தது விஜய்யின் பேச்சை.

ஜுன் 8 நடைபெறுவதாக இருந்த பிறந்தநாள் விழா ரத்து செய்யப்பட்டதைப் பற்றி தீனி போடுவார் என்று பார்த்தால், படத்தைப் பார்த்தேன், எனக்குப் பிடித்திருந்தது, உங்களுக்கும் பிடிக்கும் என்று இரண்டே வார்த்தைகளில் மேடையிலிருந்து இறங்கிக் கொண்டார்.

ரசிகர்களின் ஆரவாரத்தை தாண்டி கேட்டது நம் புரட்சி தமிழனின் ஜால்ரா சத்தம்தான். விஜய் தலைவா ஆயிட்டார், இனி அவரது ரசிகர்கள் தளபதிகள் ஆக வேண்டியதுதான் என்றார். அகராதியை தலைகீழாக புரட்டியும் இதற்கு அர்த்தம் விளங்கவில்லை. தெரிந்ந்தவர்கள் பின்னூட்டமிடலாமே.


1.வாங்கண்ணா;

விஜய் & சந்தானம் இணைந்து பாடி அசத்தி இருக்கிறார்கள் கேட்க மிக சூப்பரா இருக்கு. நம்ம தளபதி பாடும் பாடல்கள் அனைத்தும் கலக்கல் ரகம் அதில் இந்த பாடலும் இணைந்து கொண்டது வாங்கண்ணா அசத்துங்கண்ணா. நானும் இந்த பாடல அப்லோட் பன்றேன் 2 மணி நேரம் ஓடுதே தவிர அப்லோட் ஆகவில்லை.

2.யார் இந்த சாலை ஓரம்;

ஜி.வி. பிரகாஷ் அவரின் வருங்கால மனைவி சைந்தவி இணைந்து பாடி இருகின்றனர் லவ்லி மெலோடி சாங். ரசித்து அனுபவித்து இருவரும் பாடி இருக்கின்றர்கள்.

  3.சொல் சொல் அன்பே;

இது இன்னொரு மெலோடி கேட்க மிக சுமார் தான்.

4.தமிழா தமிழா;

தமிழனின் பெருமையை சொல்கிறோம் என்ற பாடல் இந்த பாட்டு திரையில் வரும் பொழுது அனைவரும் தம் அடிக்க வெளியே செல்வது உறுதி.

5.தளபதி தளபதி;

தலைவான்னு பெயர் வச்சாச்சு இளைய தளபதியின் புகழ் பரப்ப ஒரு பாடல் இல்லையேன்றால் எப்படி எனவே மொக்கையா ஒரு பாடல். தளபதி திருந்துனாலும் சுத்தி இருக்குற பக்கிங்க விடாது போல.

எ.எல். விஜய் இயக்கம் இவரின் அனேக படங்கள் காப்பி தான். இந்த படத்தின் ட்ரைலர் பார்க்கும் பொழுது கூட தேவர் மகன் படம் தான் நினைவிற்கு வருகிறது. பார்க்கும் பொழுது துப்பாக்கி அளவிற்கு இருக்காது என்றே தோணுகிறது.

ஆனா ஒரு விஷயம் கண்டிப்பா இருக்கு அது என்னன்னு தானே கேக்குறிங்க வழக்கம் போல தீவிரவாதி, குண்டு வெடிப்பு அதுக்கு காரணம் இஸ்லாமியர்கள் இது மட்டும் கண்டிப்பா இடம் பெற்று இருக்கும். 


நன்றி,வணக்கம் 

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமேல் கேட்டுப் பார்க்க வேண்டும்...

உங்களின் கணிப்பிற்கு வாழ்த்துக்கள்... அப்படி இல்லாமல் இருந்தால் நல்லது...