Tuesday 18 June 2013

சயின்ஸ் கபாலி {18.06.2013}


இதயம் துடிக்கும் போது சத்தம் வருவதேன்?

மனிதன் இதயத் துடிப்பின் போது லப்டப் ஓசை கேட்பதாக சொல்கிறோம். இந்த சப்தம் எப்படி ஏற்படுகிறது என்பது தெரியுமா உங்களுக்கு?

மனித இதயம் நான்கு அறைகளை கொண்டது. மேல உள்ளவை வலது,இடது ஆரிகிள்கள். கிழே உள்ளவை வலது,இடது வென்ட்ரிகில்கல். ஆரிகில்களையும், வென்ட்ரிகில்கலையும் இரு வால்வுகள் இணைகின்றன. அவை ஈரிதழ் வால்வு மற்றும் மூவிதழ் வால்வு என அழைக்கப்படுகின்றன.
இந்த வால்வுகளே இரத்தத்தை ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு செல்ல அனுமதிகின்றன.

இதயம் சுருங்கி விரிதலின் போது ஒரு ஆரிக்கிள் சுருக்கம், ஒரு வென்ட்ரிக்கில் சுருக்கம், அதையெடுத்து சிறு ஓய்வு இவற்றை உள்ளடக்கியதே இதய துடிப்பாகும்.இந்த செயலின் போது வால்வுகள் மூடுவதால் இரு வகை ஒலிகளை கேட்கிறோம். வென்ட்ரிக்கில் சுருக்கத்தின் போது வால்வு இழுத்து மூட படுவதால் "லப்" என்ற ஒலி உண்டாகிறது. வென்ட்ரிக்கில் விரிவடையும் போது "டப்" என்ற ஒலியும் உண்டாகிறது. இந்த செயல் மாறி மாறி நடைபெறுவதால் நம்மால் லப்டப் என்ற ஒலியை கேட்க முடிகின்றது. 


 வினோத விலங்குகள்;

*சிங்கத்தின் கர்ஜணை அதிகபட்சம் நான்கு மைல் தூரம் வரை கேட்கும்*

*துருவ கரடிகள் இடது கையை தான் அதிகம் பயன்படுத்தும்*

*பற்கள் இல்லாத பாலுட்டி எறும்புதின்னி*

*கண் இமைகள் உடைய ஒரே மீன் இனம் சுறா. இவற்றால் இமைகளை சிமிட்ட முடியும்*

*இறால் மீனின் இதயம் தலை பகுதியில் உள்ளது* 

*ஆந்தையால் நீல நிறத்தை பார்க்க முடியும்*

*பச்சோந்தியின் நாக்கு அதன் உடலை விட 2 மடங்கு நீளம் கொண்டது*


இழந்த உறுப்புகளை திரும்ப பெரும் உயிரினம்;

மனிதர்களாகிய நமக்கு இழந்த உறுப்புகளை திரும்ப பெரும் திறன் இல்லை. அதாவது அவை மீண்டும் நமக்கு வளர்வது இல்லை. இந்த விஷயத்தில் சாலமண்டர் என்ற உயிரினம் நமக்கு உதவகூடும் என்று விஞ்ஜானிகள் கருதுகின்றனர்.

நீரிலும், நிலத்திலும் வாழ கூடும் சாலமண்டர் ஒரு அதிசய உயிரினம். காரணம் இது இழக்கும் உறுப்புகள் மீண்டும் வளர்ந்து விடுகின்றன. கால்கள்,தண்டுவடம்,முளைத்திசு, இதயத்தின் சில பகுதிகள் என இவற்றை இழந்தாலும் இவை மீண்டும் எவ்வித குறை பாடு இன்றி வளர்ந்து விடுகிறது. 

சாலமன்டரின் இந்த அதிசய திறனுக்கு அதன் நோய் எதிர்ப்பு சக்தியே காரணம் என கண்டறிந்து உள்ளனர்.  சாலமற்றரின் நோய் எதிர்ப்பு செல்களை நீக்கியவுடன் அதனால் இழந்த  உறுப்புகளை  திரும்ப பெற முடிவது இல்லை.
இதுகுறித்த ஆய்வை தொடந்து வரும் விஞ்ஜானிகள் மனிதர்களுக்கு இந்த சிறப்பை ஏற்படுத்த முடியுமா என்ற நோக்கில் உழைத்து வருகிறார்கள்.



புகழ்பெற்றவர்களின் படைப்புகள்;

* காளிதாசர் - ரகு வம்சம் *

*பான பட்டர் - ஹர்ஷ சரிதம் *

*மகாத்மா காந்தி - சத்திய சோதனை *

*ரவீந்த்ர நாத் தாகூர் - கீதாஞ்சலி *

*ரூசோ - சமுதாய ஒப்பந்தம் *

*ஷேக்ஸ் பியர் - மெர்ச்சென்ட் ஆப் வெனிஸ் *

*மார்க்சிம் கார்க்கி - தாய் *

*சார்லஸ் டிக்கன்ஸ் - எ டேல் ஆப் டூ சிட்டிஸ் *

*வால்டர் ஸ்காட் - ஜவன் ஹோ  *

*காரல் மார்க்ஸ் - மூல தனம் *


வாழ்த்துகளுடன்!

12 comments:

Avargal Unmaigal said...

புகழ்பெற்றவ்ரகளின் படைப்புகளில் ஒன்று விட்டுபோய்விட்டது. அது வேறு ஒன்றுமல்ல உங்களின் படைப்புகள்தான் நண்பரே

Unknown said...

மதுரை தமிழன் அண்ணே உங்கள மாதிரி பெரியவங்க இருக்கும் பொழுது நாங்கலாம் எம்மாத்திரம் உங்கள் ஆசிகள் இருந்தாலே போதும் வருகைக்கு ரொம்ப நன்றி அண்ணே

திண்டுக்கல் தனபாலன் said...

சயின்ஸ் கபாலி (நீங்களே தேர்ந்தெடுத்தால் தான் ஒரு திருப்தி இருக்கும்) நல்ல தகவல்களையும் விளக்கங்களையும் தருகிறார்... தொடர வாழ்த்துக்கள்...

Unknown said...

ஆமாண்ணே நல்லா இருக்கோ இல்லையோ நாமலே தேர்ந்தெடுத்தால் தான் மனதிற்கு திருப்ப்தியாய் உள்ளது நன்றி தனபாலன் அண்ணே

தினகரன் said...

புகழ் பெற்ற படைப்புகளை உங்கள் பார்வையில் ரசித்தும் ஒரு பதிவு எழுதலாமே ?

Unknown said...

அண்ணே அந்த அளவு நான் வொர்த் இல்லன்னே

Barari said...

அரிய தகவல்களை அறிய தந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள்.

saidaiazeez.blogspot.in said...

ஸய்ன்ஸ் கபாலி ஸோக்காதான் மேட்டர் சொல்லிகிறார்பா! ஆனா அந்த parts வளர்ர விஷயம்தான் பயமாகீது!
சும்மா நகம் வளர்ந்தாலே தாங்கமுடிலே, ரோசிச்சு பாரு, தலை போச்சுன்னா தல வளரும், கண்ணு போச்சுன்னா கண்ணு வளரும்...
கொன்சம் இசக்கு பிசக்காய்,
தலை இடுப்புல வளர்ந்துன்னா?
கண்ணு உள்ளங்கைலே வந்துட்டா?
(நாங்களும் 'மாத்தி'க்கு மாத்தி ரோசிப்போமில்லே தலீவா!

Unknown said...

பராரி வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

Unknown said...

சைதை அஜிஸ் உங்க கருத்தும் நியாயமானது தான் எந்த அளவு சயின்ஸ் வளருதோ அந்த அளவு ஆபத்தும் வளர்கிறது

தினகரன் said...

:-/யானைக்கு தன்பலம் தெரியாதுங்கறது சரியாத்தாங்க இருக்கு .

கலியபெருமாள் புதுச்சேரி said...

சாலமண்டர் பற்றி இதுவரை அறிந்ததில்லை..தகவலுக்கு நன்றி நண்பா..