கதை;
ஆள் கடத்தி பணம் பறிக்கும் வில்லன் ஆதியை என்கவுண்ட்டர் செய்ய அமைக்கப்படும் போலீஸ் படைக்கு கிஷோர்தான் தலைவர். மனைவியை இழந்த கிஷோர் தன் மனவளர்ச்சி குன்றிய மகனை கிராமத்திலிருக்கும் தாயிடம் அனுப்பி பராமரிக்க வைக்கிறார். திடீரென தாயும் இறந்து போக, குழந்தையை தன்னிடமே வளர்க்க வேண்டிய நிர்பந்தம். என்கவுன்டர் பொறுப்பை நண்பனிடம் ஒப்படைத்துவிட்டு குழந்தையை வளர்க்க கிளம்பும் கிஷோர் எதிர்கொள்ளும் சவால்களும் சங்கடங்களும்தான் படம். முடிவில் கிஷோர் நினைத்த மாதிரி மகன் ஓட்டபந்தய வீரன் ஆகிவிட்டான். ஆனால் கிஷோர் என்ன ஆனார்? கனத்த மவுனத்தோடு படம் முடிய, அதைவிட பெருத்த மவுனம் ஒவ்வொரு ரசிகனின் மனசையும் ஆட்டிப்படைகிறது ஹரிதாஸ்.
ஹீரோ;
இந்த படத்தின் ஹிரோ அந்த மனவளர்ச்சி குன்றிய சிறுவனாக நடித்திருக்கும் பிருதிவிராஜ் தாஸ். நல்ல நடிப்பு. செம்ம பெர்பாமன்ஸ். அந்த பையன்ட்ட இருந்து நடிப்ப கொண்டு வர இயக்குனர் எவ்ளோ முயற்சி பண்ணி இருப்பாரு. ஆட்டிசம் பாதித்த குழந்தை எவ்வாறு இருப்பார்களோ அதை அப்படியே பிரதிபலித்து இருக்கின்றான்.
கிஷோர் இந்த படத்தில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பெற்றோர்கள் எப்படி கஷ்ட படுவார்களோ அவர்கள் மனது எந்த அளவு வலி நிறைந்து இருக்குமோ அதை அப்படியே நம்ம கண் முன்னாடி கொண்டு வருகிறார். அதும் தான் பெற்ற பையனுக்காக ஓட்ட பந்தயத்தில் கலந்து கொள்ள அவர் பேசும் பொழுதும் தன் மகன் நிலை கண்டு அவனிடம் பேசும் பொழுதும் ஹரி... ஹரி... எனக்கு பிறகு நீ எப்படிடா வாழப் போறே என்று அவர் கதறி அழுகிற காட்சி நம்மையும் கலங்க செய்து விடுகிறது.
சினேகாதான் அம்சவல்லி டீச்சர். மனவளர்ச்சி குன்றிய குழந்தையின் மீது தனி அக்கறை எடுத்துக் கொண்டு அவனை கவனிப்பதில் இருந்து 'நான் ஹரியோட அம்மாவா இருக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்' என்று சினேகா படீரென போட்டு உடைக்கும் போதும் நல்ல பண்ணி இருகாங்க.
டாக்டராக வரும் யூகி சேது கோச்சாக வரும் ராஜ் கபூர் பரோட்டா சூரி கிஷோரின் நண்பர்களாக வரும் நபர்கள் படத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்திருக்கும் ஓமக்குச்சி உள்ளிட்ட சிறுவர்களும் மலைக்க வைக்கிறார்கள் நம்மை. வசனங்கள் சில இடங்களில் அழவும் பல இடங்களில் நம்மையறியாமல் புன்முறுவல் பூக்கவும் வைக்கிறது. அவன் கோச் இல்ல... சரியான காக்ரோச்! என்னங்க... டாக்டர் கோச் மாதிரி பேசுறாரு. கோச் டாக்டர் மாதிரி பேசுறாரு. அவங்களுக்கெல்லாம் மேட்ச்ல ஜெயிச்சாதான் வெற்றி. இந்த மாதிரி குழந்தைகளை வச்சுருக்கிற எங்களுக்கு இவங்க கலந்துகிட்டாலே வெற்றி இப்படி வசனங்களில் கண்ணிரையே வரவழைக்கிறார் வசனகர்த்தா வெங்கடேஷ்.
மிக ஷார்ப்பான, சுவாரஸ்யமான எடிட்டிங். நடத்திக் காட்டியிருக்கிறார் ராஜா முகமது. எந்த இடத்திலும் துருத்திக் கொண்டு நிற்காத இசையை தந்திருக்கிறார் விஜய் ஆன்டனி.
ஆட்டிஸம்' என்ற மனவளர்ச்சி குன்றிய ஒரு சிறுவனையும், காவல் துறையின் அதிகாரி ஒருவரின் ஆபத்தான வாழ்க்கையையும் வைத்துக் கொண்டு ஒரு விறுவிறுப்பான படத்தை உருவாக்கியிருக்கிற விதம், அதன் திரைக்கதை, அதை படமாக்கிய விதம் என மொத்தத்தில் ஒரு மன நிறைவான படத்தை இயக்கியிருக்கிறார் குமாரவேலன்.
தஞ்சை விஜயாவில் இந்த படத்தை பார்த்தேன் கடைசியா இந்த தியேட்டரில் காதல் படம் பார்த்தது அதுக்கு அப்புறம் இந்த படம் தான் பார்க்கிறேன். இந்த படத்தின் வசூல் அவ்வளவு திருப்பதியாக இல்லை என்றே செய்திகள் வருகின்றன. இது மாறி படத்திற்கு நாம் ஆதரவு தர வில்லை என்றால் அலெக்ஸ் பாண்டியன் போல மொக்கை படம் தான் நமக்கு கிடைக்கும்.
ஹரிதாஸ்=மன நிறைவு
நன்றி.
|
|
Tweet |
No comments:
Post a Comment