(தலைவரே இது சினிமா இல்ல) |
நாவடக்கம்
வளர்ந்து வரும் மனிதனுக்கு நாவடக்கம் மிகவும் இன்றியமையாதது. வளர்ந்து வரும் மனிதர்கள் துணிவாகப் பேசினாலும் திமிராகப் பேசுவதாகவே கருதுவார்கள். அதனால் துணிவைக்கூட மென்மையாகவே சொல்ல வேண்டும்.
நண்பர்கள்
மனம் சோர்வடையும் போதும் துன்பம் அடையும்போதும் அவற்றைப் பகிர்ந்து கொள்ள மனம் ஒப்பியவர்களை மட்டுமே தேடுகிறது. அவர்களே நல்ல நண்பர்கள். அவர்களே வாழ்க்கைக்கு துணையானவர்கள்.
நேர்மை
நேர்மையான வழியில் வராத எதுவும் நிலைத்து நிற்பதில்லை. நிறைவைக் கொடுப்பதும் இல்லை.
நியாயம்
பெரிய பதவியில் இருப்பவர்கள் எதைச் செய்தாலும் பாதிக்கப்பட்டவர்கள். ஏதேனும் ஒரு குறைசொல்லிக் கொண்டே இருப்பார்கள். அதனால் அது பற்றிக் கவலைப்படாமல், நியாயம் எதுவோ அதைச் செய்துவிட்டால் போதுமானது.
(மீடியா முன்னாடி இப்படி எப்பவும் சிரிக்கணும் ) |
நல்லவர்
ஒரு மனிதன் எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முடிவதில்லை. அப்படி இருப்பதும் இயலாத காரியம்.
நாட்டுக்கேற்ற விதி
இன்னும் நாம் ஆங்கிலேய விதிமுறைகளிலிருந்து விடுபடவில்லை. நம் நாட்டுக்கு ஏற்ற விதிமுறைகளை நாம் வகுத்துக்கொள்ள வேண்டும்.
நாட்டின் கடமை
பொறுப்புணர்ச்சி உள்ள மக்களை உருவாக்காத நாம் ஒருக்காலும் முன்னேறாது.
நன்மை தருவது
எவ்வளவு மறைத்தாலும் ஒரு மனிதனின் நடைமுறைகள் அவனை வெளிக்காட்டி விடும். அதனால் உண்மையாக நடந்து கொள்வதைவிட நன்மை தருவது வேறொன்றும் இல்லை.
(பொது வாழ்கையுளையும் நடிக்க தெரியனும் ) |
|
|
Tweet |
6 comments:
வருகைக்கு நன்றி முத்தரசு
நல்லவொரு பதிவு
நன்றி சிவா
ரொம்ப சரியா சொன்னிங்க ...
//பொறுப்புணர்ச்சி உள்ள மக்களை உருவாக்காத நாம் ஒருக்காலும் முன்னேறாது.
//
அது நாமா? நாடா ?
நன்றி ராஜா சார் நாடு தான் பிழை ஆயிருச்சு
Post a Comment