மனிதர்களில் சிலபேர்… எதைச் சொன்னாலும், செய்தாலும் சிரிப்பாகத்தான் இருக்கும் நமக்கு.
எனக்குத் தெரிந்த ஒரு கிராமத்துப் பெரியவர் 70 வயது. இன்னும்கூட, கேலிதான், கிண்டல் பாட்டுத்தான்.
ஒரு நாள் அவர் திண்ணையில் உட்கார்ந்து வைத்தியம் சொல்லிக் கொண்டிருந்தார். (அவருக்கு எந்த வைத்தியமும் தெரியாது.
“நான் சொன்னபடியே செய் தண்ணிய மடக் மடக்குன்னு குடி அப்புறம் பாரு என்ன நடக்குதுண்ணு”. அப்போது தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தை மடாரென்று கீழே “ஓ” வென்று கத்தி அழுதது.
கிழவனார் குழந்தையைப் பார்த்தார். சத்தமான குரலில் “எந்தருச்சுவாடா.. தூக்கி விடுகிறேன்” என்று கத்தினார். குழந்தை அதே வேகத்தில் எழுந்த ஓடி அவரிடத்தில் வந்தது.
“முட்டாப் பயலே.. நீயா எந்திருச்சு வந்தப்பெறுகு நானா தூக்கி விடுவேன் போடா!” குழந்தை குழப்பமாக அவரைப் பார்த்தபடி நின்றது.
புதிதாக வகுப்பிற்கு வந்த ஆசிரியர் வருகைப் பதிவை எடுத்து பெயர் வாசித்தார். பலர் வரவே இல்லை. கோபம் வந்தது அவருக்கு.
“டேய் வராதவனெல்லாம் ஒழுங்கா எந்திரிங்கடா”இருந்த மாணவர்களுக்கெல்லாம் ஒரே குழப்பம்.
என் நண்பர் ஒருவர், தொடர்ந்து எப்பதும் யாராவது ஒருவருக்குத் கடிதம் எழுதிக்கண்டே இருப்பார் பதில் வருமா? வராதா? அதைப் பற்றியெல்லாம் கலைப்படமாட்டார். எல்லாம் எழுதிவிட்டுக் கடைசியில் ஒரு வரி மறக்காமல் எழுதிவிடுவார்.
“இந்தக் கடிதம் கிடைக்கவில்லை என்றால் உடனே பதில் எழுது” இதற்கு என்ன பொருள் என்று எனக்கு இன்றைக்கும் விளங்கவில்லை.
சிலர் யாரையும் ஏமாற்றப் பார்ப்பார்கள். ஒரு ஏழையின் சிரிப்பைக் காண விரும்பிய கடவுள் அவன் முன்னே தோன்றி “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.
“பணம், செல்வம், தங்கம், வைரம்!” என்றான் ஏழை ஆசையோடு.
கடவுள் வலது கையின் சுட்டுவிரலை நீட்டினார். அங்கிருந்த பீரோ தங்கமானது.
ஆனால் ஏழை பேசாமல் இருந்தான். கடவுள் மறுபடி விரலை நீட்ட, அங்கிருந்த மேடை தங்கமானது.
அவன் பேசாமல் இருந்தான். கடவுள் வேக வேகமாக அந்த அறையில் உள்ள பொருட்களையெல்லாம் தங்கமாக்கினார். அப்போதும் ஏழை சிரிக்கவில்லை.
சோர்ந்து போன கடவுள் ஏழையிடம் கேட்டார். “இன்னும் உனக்கு என்ன வேண்டும்?” என்று. “அந்த விரல் வேண்டும்” என்றான் ஏழை கடவுள் மயங்கி விழுந்தார்.
ஒரு திருமண வீட்டில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது என்னோடு வந்த ஒருவர் கவலையோடு என்னிடம் கேட்டார்” உங்களுக்கு ஜிலேபி போட்டார்களா?”
“இல்லையே”என்றேன்.
“நல்லவேளை, எனக்கும் போடல… அதான் கேட்டேன்” திருப்தியாக நடந்து போனார்.
வாசலில் என் செருப்பைத் தேடிக் கொண்டிருந்தேன். அந்த “ஜிலேபி” மீண்டும் வந்தார். “சே – 300, 400 ரூபாய் இருக்கும் புத்தம் புது செருப்பு. சாப்பிட்டு வந்து பார்க்கிறேன் காணம் சார்”
“ஐயோ அப்பறம் என்ன பண்ணீங்க” நான் கவலையோடு கேட்டேன்
.
“அப்புறம் என்ன.. என் செருப்பைத் போட்டுட்டு வந்தேன்… எல்லாம் நேரம் சார் நேரம்!” அவர் பேசிக்கொண்டே போனார். எனக்கு பிறகுதான் புரிந்தது, யாரோ ஒருவருடைய செருப்பை இவர் பார்த்து வைத்து அது கிடைக்காத ஏக்கத்தில் பேசுகிறார் என்று.
“எங்க அப்பா ரெண்டு கையிலேயும் ஒரே தள்ளு…. பஸ் ஓடியே போயிரும்” சொன்னான் ஒரு சிறுவன் பெருமையாக.
“ம்… இதென்ன பெரிசு, எங்கப்பா ஒரே கையில பஸ்ஸைத் தள்ளிருவாரு!” இன்னொரு பையன் சொன்னான்.
மூன்றாவது பையன் சொன்னான்; “எங்கப்பா ஒரு ஊது ஊதுனார்னா போதும் பஸ் ஓடியே போயிரும்”.
ஆமா உங்கப்பா யாரு பயில்வானா?”
“இல்லடா… கண்டக்டரு”
புதுவருட காலண்டரைப் பார்த்துக் கொண்டிருந்த என்னுடைய ஆசிரிய நண்பர் மகிழ்ச்சியோடு சொன்னார் “அட, இந்த வருஷமும் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ல தான் வருது… பார்த்தீங்களா?”
இந்த மாதிரித் தொடர் குழப்பங்கள் உங்களுக்கு வந்ததுண்டா?
|
|
Tweet |
2 comments:
அத்தனையும் உண்மை.....எல்லாமே நடு சென்டர்ல போட்ட பால் மாதிரி இருக்கு....தொடருங்கள் சகோ...தொடர்கிறேன்..வாழ்த்துக்கள்.
வருகைக்கு நன்றி
Post a Comment