வணக்கம் நண்பர்களே இந்த ஆண்டு முடிய போகுது புது வருஷம் பிறக்குது எல்லாரும் கடந்த வருஷம் பிடிச்ச நடிகர் நடிகை பாடல் படம் டாப் 10 போட ஆரம்பிச்சுட்டாங்க அதான் நம்ம பங்குக்கு நாமளும் வரிசை படுத்தலாம்னு எழுத ஆரம்பிச்சுட்டேன்.
இந்த வருடம் நான் பார்த்த படங்கள்:
1.நண்பன்
2.வேட்டை
3.மெரினா
4.தோனி
5.அமபுலி 3d
6.காதலில் சொதப்புவது எப்படி
7.அரவான்
8.கழுகு
9.ஒரு கல் ஒரு கண்ணாடி
10.லீலை
11.வழக்கு எண் 18\19
12.கலகலப்பு
13.தடையற தாக்க
14.சகுனி
15.நான் ஈ
16.பில்லா 2
17.மதுபான கடை
18.அட்டகத்தி
19.நான்
20.முகமூடி
21.சுந்தர பாண்டியன்
22.சாட்டை;
23.தாண்டவம்
24.இங்கிலீஷ் விங்க்ளிஷ்
25.மாற்றான்
26.பிட்சா
27.போடா போடி
28.துப்பாக்கி
29.நடுவுல கொஞ்சம் பக்கத காணோம்
30.நீர்பறவை
31.கும்கி
32.நீதானே என் பொன்வசந்தம்
இத்தனை படம் போன வருஷம் நான் பார்த்தது இதுல இருந்து டாப் 10 எனக்கு பிடிச்ச வரிசைல போட்டுருக்கேன் சரியான்னு சொல்லுங்க
10.நடுவுல கொஞ்சம் பக்கத காணோம்;
தமிழ் சினிமாவின் புதிய முயற்சி சும்மா சொல்ல கூடாது சூப்பர். பெரிய பட்ஜெட் படெமெல்லம் மண்ணை கவ்வ லொவ் பட்ஜெட்ல எடுத்து எல்லார்க்கும் லாபம் கொடுத்த படம்.படம் அங்க அங்க போர் அடிச்சாலும் வித்தியாசமான முயற்சி பாராட்டியே ஆகணும்.
9.தோனி
தோனி படம் வெற்றி படமா தோல்வி படமான்னு தெரில்ல. ஆனா பார்த்த எனக்கு பிடிச்சு இருந்துச்சு. பிரகாஷ் ராஜ் நடிப்ப பத்தி சொல்ல வேணாம் பின்னி இருப்பாரு குடும்ப தலைவரா. இசைஞானி சூப்பரா பண்ணி இருப்பாரு. வாங்கும் பணத்துக்கும் பாட்டு தான் ரொம்ப நாளா என் ரிங்க் டோன இருந்துச்சு.
8.சாட்டை;
இந்த படமும் நல்ல பாராட்டையும் விமர்சனத்தையும் பெற்ற படம் வசூல்ரீதியா வெற்றி படமான்னு தெரில்ல. எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. சமுத்திர கனி நடிப்ப விட தம்பி ராமையா என்னைய கவர்ந்தார். அரசு பள்ளிலையும் தரமான கல்வி கொடுக்க முடியும்னு வலியுறுத்தும் படம்.
7.சுந்தர பாண்டியன்;
நம்ம சசிகுமார் நடிச்ச சூப்பர் ஹிட் படம். நல்ல பொழுதுபோக்கு நெறஞ்ச படம்.பரோட்டா சூரி காமெடி ரொம்ப நல்ல இருந்துச்சு. நம்ம லட்சுமி மேனேன் அறிமுகம். எப்பவும் போல நட்ப பத்தி கடைசில சசிகுமார் பேசும் வசனம் நச் ரகம். வாழ்த்துக்கள் சசி சார்.
6.துப்பாக்கி;
விஜய்க்கு உண்மையான வெற்றி கிடைத்த படம். காமெடி பாடல் சண்டை அனைத்தும் சரிசமமாக கலந்து கட்டி சூப்பர் மசாலா என்டேர்டேய்னர். மொத்தத்தில் இந்த வருடம் அனைத்து முன்னணி கதாநாயகர்களும் மண்ணை கவ்வ 2 சூப்பர் ஹிட் கொடுத்து ரசிகர்களின் சிம்மாசனத்தில் இடம் பிடித்து விட்டார் தளபதி.
5. ஒரு கல் ஒரு கண்ணாடி;
அரசியல் உலக வாரிசு கலை உலகில் அறிமுகமான படம். உதயநிதி அடிதடி பண்ணி நம்ம எல்லாரையும் சாவ அடிக்காம. அமைதியா தனக்கு என்ன வருமோ அதை மட்டும் செஞ்சு இருப்பாப்ல. அதுக்கே அவர பாராட்டனும். நம்ம சந்தானம் போன வருஷம் காமெடி ல கலக்குன படம். நம்ம மொழு மொழு ஹன்சிகா படம் புல்லா ஓடுன படம். வசூல் ரீதியா பெரிய வெற்றி அடைஞ்ச படம். எல்லாருக்கும் பிடித்த படமாக அமைஞ்சது.
4.பிட்சா;
போன வருஷம் இவருக்கு தான் நல்ல வருடமா அமைஞ்சு இருந்துச்சு. இவரு வில்லனா பண்ணுன சுந்தர பாண்டியன் ஹிட் அடிக்க புதிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் அசத்தலான இயக்கம் மூலம் வெளி வந்த இந்த படம் பட்டைய கிளப்பியது.வித்தியாசமான திரைகதை திரிலிங்க் சவுண்ட் எபெக்ட் எல்லாம் சூப்பரா இருந்துச்சு. இது மாறி அவரு வித்தியாசமா ட்ரை பண்ணனும்னு வாழ்த்துவோம்.
3.வழக்கு எண் 18\19
பெரிய எதிர்பார்போடு வந்த படம். ஒரு படம் வந்த உடனே நம்ம பதி உலகத்துள்ள உள்ள எல்லாம் போட்டு கிழிகிழி ன்னு கிழிப்பாங்க. அதும் விஜய் படம்னா அல்வா தான். ஆனா அந்த அளவு கிழியாம பாராட்டு பெற்ற படம். நம்ம பதிவர்கள் அதிகமா பாராட்டுன படம் இதுவா தான் இருக்கும்னு நான் நெனைக்குறேன். படம் கடைசில நானே அழுதுட்டேன். புதுமுகம்கல்ட்ட இந்த அளவு நடிப்ப வர வைக்க நம்ம பாலாஜி சக்திவேல் போன்ற இயக்குனர்களால் தான் முடியும்.
2.நண்பன்;
மிக பெரிய எதிர்பார்போடு வந்த படம். இந்த மாறி படங்களா தேர்தெடுத்து நடிச்சா நம்ம தளபதி என்னைக்குமே தளபதி தான். மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் படம். இவங்களுக்கு சம்பளம் கொடுத்தே 80% பட்ஜெட் வந்து இருக்கும். அனைவர்க்கும் பிடித்த படம். பெரிய நடிகர்கல்ன பஞ்ச் பேசி 50 பேர அடிக்கணும்குற ட்ரென்ட் மாறி இப்படியும் நடிக்கலானு நம்மள சந்தோஷ படுதுன படம். இது மாறி படங்கள் வரணும்குறது தான் நம்ம ஆசை.all is well.
1.நான் ஈ
என்ன படம் யா போன வருடம் சூப்பர் டூப்பேர் மாஸ் பம்பர் பிக்கேஸ்ட் ஹிட். அப்டின்னா அது இந்த படம் தான்யா. ஒரு ஈ ய வச்சுகிட்டு சும்மா பூந்து விளையாடி இருபாரு நம்ம ராஜமௌலிகாரு. அவருக்கு என்னோட சல்யுட். நம்ம திலிப் வில்லாத்தனதுல மிரட்டி இருப்பாரு. நம்ம அழகுசிலை சமந்தா பார்த்துகிட்டே இருக்கலாம். நாணி அவரும் நல்ல பண்ணி இருபாரு. சந்தானம் 2 சின் வந்தாலும் பின்னிருபாறு காமெடி ல இதை எல்லாத்தையும் விட ஒரு ஈ இவ்ளோ அருமையா காட்டி இருபாங்க. மொத்ததுல கலக்கலான படம்.
மற்றும் வசூல் ரீதியா வெற்றி பெற்ற படங்களான அட்டகத்தி,தடையற தாக்க, கும்கி,கலகலப்பு,நான், போன்ற படங்கள் டாப் 10ல் இடம் இல்லாத காரணத்தால் இடம் பெறவில்லை. இருப்பினும் இவையும் வரவேற்பு பெற்ற படங்களே.நன்றி மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

|
|
Tweet |
2 comments:
Sakkara katty, Thavarukal erruntha thaan manusan, neenka manusan ok yaa
Top 10
Post a Comment