ஒரு சிலருக்கே ஆண்டவன் தனித்துவமான குரல் வளத்தையும், நடனம் ஆடும் ஆற்றலை இறைவன் வழங்கி இருப்பான். அவ்வாறு இரண்டையும் ஒரு சேர பெற்றவர் தான் சந்திரபாபு. அவரது பாட்டிற்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அவர் பாடிய அனேக பாடல்கள் எல்லாம் இன்றும் மக்கள் மனதில் நிலைத்து இருக்கும். அவரது நடனமும் தனித்துவம் வாய்ந்தது. அது மட்டும் இல்லாமல் நகைச்சுவையில் பின்னி எடுப்பார். நகைச்சுவையால் பலரை மகிழ்வித்த அவரது சொந்த வாழ்க்கை மிக சோகமானது. அவரை பற்றிய ஒரு நினைவு பதிவு.
சந்திரபாபு எம்.ஜி.ஆரை வைத்து மாடி வீட்டு ஏழை படத்தை தயாரித்த போது சென்னையில் பிரமாண்ட வீடு ஒன்றை கட்டிக் கொண்டிருந்தார். முதல் மாடிவரை கார் போவது போன்று வடிவமைக்கப்பட்ட வீடு. வீடு பாதியில் நிற்கும் போது படமும் பாதியில் நின்றது. நாயகிக்கு நடிக்க தெரியலை, ஆளை மாற்று என்றார் எம்.ஜி.ஆர். எழுபது சதவீதம் படம் முடிந்த பிறகு எப்படி மாற்றுவது? - இது சந்திரபாபு. ஆளை மாற்றினால்தான் ஆச்சு என்று எம்.ஜி.ஆர். அடம்பிடிக்க, எடுத்தவரைக்குமான ஃபிலிம்களை தீயிட்டு கொளுத்தினார் சந்திரபாபு.
அவருக்கு பைனான்ஸ் செய்தவர்களும் பெரிய இடத்து பிரஷர் காரணமாக சந்திரபாபுவை நெருக்க, அவர் ஆசையோடு கட்டி வந்த வீடு கடன்காரர்களின் கைக்கு போனது. அப்படி மாடி வீட்டு ஏழையை தயாரித்து, ஏழையானார் சந்திரபாபு.
மேற்கத்திய கலாச்சார பாதிப்பில் வளர்ந்தவர் சந்திரபாபு. அண்ணே என்று பவ்யமாக மற்றவர்கள் எம்.ஜி.ஆரை சுற்றி நிற்க, கால் மேல் கால் போட்டு மிஸ்டர் ராமச்சந்திரன் என்று பெயர் சொல்லிதான் அழைப்பாராம் சந்திரபாபு. அவரை மட்டுமில்லை, சிவாஜி கணேசனும் அவருக்கு மிஸ்டர் கணேசன்தான்.
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
புத்திசாலி மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...
சந்திரபாபு புத்திசாலி.
திறமையுள்ள கலைஞர். மனிதாபிமானம் நிறைந்தவர். சந்திரபாபுவுக்கு எனது நினைவு அஞ்சலிகள்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
நான் அவர் நடித்த ஒரு படம் சிறுவயதில் எத்தனை தடவை பார்த்தேன் நினைவில்லை...அதில் வாயிலிருந்து கோழிக் குஞ்சு எடுப்பார்? குலேபகாவலி...?
ReplyDeleteபரிதி ஸார்... அவர் வாய்லேர்ந்து கோழிக்குஞ்சை எடுக்கறது நாடோடி மன்னன் படத்துல...!
ReplyDeleteகாமெடியனாக இருந்தாலும் அவர் நடிக்கற எல்லாப் படத்துலயும் அவருக்குன்னு குறைந்தபட்சம் ஒரு பாடல் காட்சியாவது ஒதுக்கப்பட்டிருக்கும். வேறெந்த காமெடியனுக்கும் இல்லாத சிறப்பு. உயரமான அவர் உடல்வாகுக்கு அவர் ஆடும் மேற்கத்திய பாணி நடனங்கள் மிகவும் சிறப்புச் சேர்த்தவை. சென்னைத் தமிழை தமிழ் சினிமாவுல முதன்முதலாப் பேசி நடிச்சவர் அவர்தான். மறக்க முடியாத மேதை.
This comment has been removed by the author.
ReplyDelete"மாடி வீட்டு ஏழை, மூன்று நாட்கள் மட்டுமே ஷூட்டிங் நடைபெற்றது. அதற்குள் எப்படி அய்யா 70 சதவீதம் படம் முடிந்திருக்க முடியும்? "தட்டுங்கள் திறக்கப்படும்" என்ற ஒரே ஒரு பாடல்காட்சி மட்டுமே எடுத்து முடித்திருந்தார்கள்.
ReplyDeleteமூன்றாவது நாளில்தான் எம்ஜியாருக்கும் சந்திரபாபுவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒரு காட்சியை எம்ஜியார் சற்று மாற்ற வேண்டும் என சொல்ல, சந்திரபாபு, "இந்த படத்திற்கு நான்தான் டைரக்டர்" என சொல்ல, அன்றே படம் ஊற்றி மூடப்பட்டது.
அதன்பின்பு, சிவாஜி கணேசனை வைத்து, இதே பெயரில் இப்படம் வெளிவந்தது.
திறமைசாலி..... ஆனாலும் வாழ்வில் சந்தித்த கஷ்டங்கள்.....
ReplyDeleteஅவர் பற்றிய புத்தகம் ஒன்று பற்றி சமீபத்தில் படித்தது நினைவுக்கு வந்தது...
சந்திரபாபு பற்றிய சுவையான நினைவுகள்!!!
ReplyDeleteஅன்புள்ள அய்யா திரு.
ReplyDeleteவணக்கம்.
நடிகர் சந்திரபாபு பற்றியும்...மாடி வீட்டு ஏழை படம் பற்றியும் நன்றாக கூறி இருக்கிறீர்கள்.
பாராட்டுகள்.
எனது ‘வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து தாங்கள் கருத்திட அன்புடன் அழைக்கின்றேன்.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in