நேரம் இப்படி ஒரு படம் தயாரானதே ஒரு பதினைந்து நாட்களுக்கு முன்பு வரை பல பேருக்கு தெரியாது. இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின்னின் ரெட் ஜெயெண்ட் மூவிஸ் கைப்பற்றி வெளியிடுகிறது என்ற உடனே படத்திற்கு ஒரு வித எதிர்பார்ப்பு வந்துவிட்டது.
கதை;
வேலை இல்லாத ஒரு பட்டதாரி வாலிபன் நிவின் தன் தங்கையின் திருமணத்திற்காக ஒரு மோசமான கந்து வட்டிகாரன் சிம்ஹாவிடம் கடன் பெற்று தன் தங்கையின் திருமணத்தை நடத்தி வைக்கிறான். இதனுடன் அவனிற்கு தன் சிறு வயதில் இருந்தே இவனுடன் சேர்ந்து படித்த பெண் நஸ்ரியாவின் மேல் காதல் வருகிறது. தன் காதலை அவளிடம் வெளிபடுத்த அவளும் ஏற்று கொள்கிறாள். இந்த காதல் விவகாரம் அந்த பெண்ணின் தகப்பன் தம்பி ராமையாவிற்கு தெரிய வர அவரும் முதலில் ஒத்து கொள்கிறார். பின் நிவின்ற்கு வேலை போனது தெரிந்தும் தன் மகளிற்கு வேறு இடத்தில மாப்பிளை பார்க்கிறார்.
ஒரு நாள் சிம்ஹா இன்று மாலை 5 மணிக்குள் தனது கணக்கை முடிக்க வேண்டும் என கூறுகிறான். அதே நேரம் தன்னுடைய காதலி நஸ்ரியா அவளின் அப்பன் தம்பி ராமையா தனக்கு வேறு மாப்பிளை பார்பதாகவும் அதனால் தான் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் போன் பண்ணி கூருகிறாள். இதனிடையே நிவின் மச்சான் இன்று மாலை 5 மணிக்குள் தனக்கு சேர வேண்டிய டௌரி பணத்தை கொண்டு வருமாறு கேட்கிறார். தனது மகளை கடத்தியதாக தம்பி ராமையா போலிசிடம் புகார் தருகிறார். போலீஸ் நிவினிற்கு போன் செய்து 5 மணிக்குள் நஸ்ரியாவை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறபிக்கிறது.
இத்தனை பிரச்சனைகளையும் ஒரே நாளில் எதிர்கொள்ளும் நிவின் தனது நண்பனிடம் பணத்தை கடனாக பெற்று கொண்டு சிம்ஹாவிடம் கொடுபதற்காக வரும் பொழுது அவரிடம் இருந்து பணத்தை ஒருவன் திருடி கொண்டு ஓடுகிறான். இதனிடையே நஸ்ரியாவை தவறுதலாக சிம்ஹா கடத்த நிவின் இத்தனை பிரச்சனைகளையும் எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை படம் காலையில் துவங்கி மாலையில் முடிகிறது.
நடிகர்,நடிகைகள்;
அறிமுக நடிகர் நிவின் நன்றாக இயல்பாக நடித்துள்ளார் தமிழில் பெரிய ரவுண்டு வருவரா என பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
அறிமுக நடிகை நஸ்ரியா ஆளு பார்க்க சொக்க கீது இப்பவே பாப்பாக்கு நிறைய வாய்ப்பு வராத கேள்வி பட்டேன் தனுஷ் கூட ஒரு படம் பன்றாங்க
கண்டிப்பா நல்ல எதிர்காலம் இருக்கு.
சூது கவ்வும் படத்தில் தூள் கிளப்பிய பகலவன் கதாபத்திரத்தில் நடித்த சிம்ஹா இதில் கந்து வட்டிகரனாக வருகிறார். அந்த படத்தில் இவரை காமெடி யா பார்தனளவோ என்னவோ இவர பெரிய வில்லனாலம் ஏத்துக்க முடியல்ல ஆனா இதுலயும் நல்லா பண்ணி இருகார்.
தம்பி ராமையா வழக்கம் போல அருமை. ரொம்ப நாட்களுக்கு பிறகு சார்லி நடிச்சு இருக்கிறார். நண்பர்களாகவும், திருடர்களாகவும் நடித்து இருக்கும் அனைவரும் நன்றாக செய்து இருக்கிறார்கள்.
சிறிது நேரமே வந்தாலும் நாசரின் நடிப்பு கலக்கல்.
இசை;
அறிமுக இசை அமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே இடம் பெற்று உள்ளது. கதை ஓட்டத்துடன் வரும் சோமாரி என்ற கானா பாடல் ஆட்டம் போட வைக்கிறது பின்னணி இசை படத்திற்கு ஏற்றவாறு அமைந்து உள்ளது.
இயக்கம் அறிமுக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். புதியவர்களின் வருகை தமிழ் சினிமாவிற்கு ஆரோக்யமானதாக அமைந்து உள்ளது. இவர்களின் அடுத்த அடுத்த படைப்புகள் நாம் ஆவலுடன் எதிர்பார்க்க தூண்டுகிறது.
படத்தின் முதல் பகுதி மெதுவாக செல்கிறது. இடைவேளை பின்பு தான் படமே வேகம் எடுக்கிறது. இந்த படத்தின் வெளியிட்டாளர் உதயநிதி படத்த மூன்று தடவை பார்த்தாராம். அந்த அளவு நமக்கு பொறுமை இல்லைங்க உங்களுக்கு டைம் இருந்தா போயி படத்த பாருங்க ஒரு தடவ பார்க்கலாம்.
தஞ்சை ஜி வி ஸ்டுடியோல பார்த்தேன் 60 ரூபாய் டிக்கெட் விலை கூட்டம் சுமாரா இருந்துச்சு.
நேரம்- நல்ல நேரம் தமிழ் சினிமாவிற்கு
*** படத்தின் முதல் பகுதி மெதுவாக செல்கிறது. இடைவேளை பின்பு தான் படமே வேகம் எடுக்கிறது. இந்த படத்தின் வெளியிட்டாளர் உதயநிதி படத்த மூன்று தடவை பார்த்தாராம். அந்த அளவு நமக்கு பொறுமை இல்லைங்க உங்களுக்கு டைம் இருந்தா போயி படத்த பாருங்க ஒரு தடவ பார்க்கலாம்.
ReplyDeleteதஞ்சை ஜி வி ஸ்டுடியோல பார்த்தேன் 60 ரூபாய் டிக்கெட் விலை கூட்டம் சுமாரா இருந்துச்சு.
நேரம்- நல்ல நேரம் தமிழ் சினிமாவிற்கு ***
படத்துக்கு, மார்க் எம்புட்டு? 45/100? :)