நான் கடந்த முறை இளைய தளபதியின் டாப் டென் படங்களை பதிவிட்டு இருந்தேன் அந்த பதிவை படிக்காதவர்கள் கிழே உள்ள லிங்கில் சென்று படித்து கொள்ளவும்.
இந்த பதிவை படித்த எனது நண்பர் திருப்பூர் கோபி முக புத்தகத்தில் அப்படியே டாப் மொக்கை படங்களை வரிசை படுத்தி இருக்காலான்னு சொன்னாரு ஆஹா அடுத்த பதிவுக்கு தலைப்பு ரெடி என்று உருவானது தான் இந்த பதிவு.
விஜய் பூவே உனக்காக படத்தில் நடித்த பின்னர் தான் அவரை நடிகராக தமிழகம் ஏற்று கொண்டது அதுவரை அவர் பிட்டு பட நடிகராகவே சோப்பு போடவும் கபடி விளையாடவும் சங்கவியுடன் ஆட்டம் போட்டு கொண்டு இருந்தார். பூவே உனக்காக படத்தை பார்த்த பின்பு தான் எனக்கு தளபதியை பிடிக்க ஆரம்பித்தது அதன் பின் அவர் நடித்த படங்கள் மட்டுமே என் கணக்கில் எடுத்து கொள்ள பட்டது.
10.மாண்புமிகு மாணவன்
எப்பவுமே விஜய்யை வைத்து அவரது தந்தை இயக்கி இருந்த ஒன்ஸ்மோர் தவிர படமெல்லாம் மொக்கையாகவே இருக்கும். அந்த வரிசையில் இதுவும் ஒரு மொக்கை படமே.
9.நிலாவே வா
இந்த படத்தில் சிலுவை என்னும் கதாபத்திரத்தில் நடித்து இருப்பார். பாடல்கள் நன்றாக இருத்தாலும் படம் படு கேவலமா இருக்கும். இந்த படத்தின் கடைசி காட்சியில் அனைவரும் கடலில் நின்று கொண்டு சிலுவை சிலுவை ன்னு கத்துவாங்க கதறுவாங்க. தியேட்டர்ல இருந்து மக்களும் கதரிக்கிட்டே வெளிய ஓடிட்டாங்க.
8.என்றேன்றும் காதல்
இந்த படத்துல்ல தயாரிப்பாளர் காசுல்ல நல்லா வெளிநாட்ட சுத்தி பார்த்துட்டு வந்துருபாங்க. விஜய் படம்னா பாட்டாவது நல்லா இருக்கும் இந்த படத்துல்ல அது கூட நல்லா இல்லை.
7.நெஞ்சினிலே
இதும் அவரது தந்தையின் இயக்கத்தில் வந்த செம்ம மொக்கை. இந்த படத்துல்ல இருந்து தான் ரசிகர்கள் இவர புகழுர மாதிரியும் பதிலுக்கு இவர் ரசிகர்களை புகழ்வது போல பாடல் இடம் பெற ஆரம்பித்தது. நான் இந்த பாட்ட கேட்டு மெய் மறந்து போனேன் அந்த கால கட்டத்தில் தலைவர் என்னம்மா நம்ம மேல பாசம் வச்சு இருக்கிறார் என்று.
6.மின்சார கண்ணா
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்திலேயே மிக மட்டமான படம்னா அது இது தான் அந்த காரணத்தினால் தான் இந்த படத்துக்கு அப்புறம் இரண்டு பேரும் சேரவே இல்லை. இவரு யாரு புறாவுக்கே பெல் அடிச்சவருள்ளே என்று தேவை இல்லாத பில்ட் அப் கொடுத்தனால படம் படுத்து கொண்டது.
5.கண்ணுக்குள் நிலவு
காதலுக்க்கு மரியாதை என்னும் மிக பெரிய வெற்றியை தந்த அதே கூட்டணி ஆனா இந்த தடவ அதே வெற்றியை பெற முடியவில்லை. விஜய்யின் நடிப்பும் இந்த படத்தில் பெரிதாய் எடுபடவில்லை. ஆனா இசை மிகவும் பேசப்பட்டது பாடல்கள் மிகவும் அருமை.
4.தமிழன்
இந்த படத்தில் நம்ம இந்திய நாட்டு கடன்களை எல்லாம் அடைத்து அவருக்கு தபால் தலை வெளியிடும் அளவிற்கு சாதனை புரிந்த இளைஞராக தளபதி நடித்து இருப்பார் இந்தியாவின் கடனை அடைத்த இந்த படம் தயாரிப்பாளரின் கடனை அடைக்க முடியாமல் போயி விட்டது.
3.புதிய கீதை
இந்த படத்தில் திறமையான மாணவராக நடித்து இருப்பார். இந்த படத்தில் இருந்து தான் அஜித்தை வம்புக்கு இழுத்து படத்தில் ஒருவருக்கு ஒருவர் தாக்கி வசனம் வைக்கும் முறை ஆரம்பம் ஆனது. வழக்கம் போல பாடல்கள் அருமை ஆனால் படம் பப்படம்.
2.உதயா
இந்த படத்தில் தான் விஜய்யும் இசை அமைப்பாளர் ரஹ்மானும் முதன் முதலாக ஓன்று சேர்த்தனர். பொருளாதார சிக்கலில் சிக்கிய இந்த படதின் தயாரிப்பாளர் நடராஜன் பல வருசமா படத்தை கிடப்பில் போட்டு விட்டார். ரொம்ப நாள் கழித்து இந்த படத்தை வெளியிட்டார். உடனே எடுத்து ரிலிஸ் பண்ணுனாலே படம் ஓடுறது கஷ்டம் அதுல இது வேறயா படம் ஊஊ.
1.சுறா
நான் விஜய் ரசிகனாக இருந்தும் விஜய் நடிபிற்காக மேல கூறிய அவரது அனைத்து மொக்கை படங்களையும் ரசித்ததுண்டு. ஆனால் என்னையும் வெறுப்பேற்றிய படம் என்றால் அது இதுவே எனவே இதற்கு முதல் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
டாப் டென் என்று சொல்லிவிட்டதால் அழகிய தமிழ்மகன், குருவி,வில்லு, ஆகிய படங்கள் இடம்பெற வில்லை.
|
|
Tweet |
17 comments:
சுறா முதல் இடத்துக்கு பொருத்தமான படம்...
ஆனா லிஸ்ட்டுல வில்லு காணமே.....
ஒரு வேளை அதை ஹாலிவுட் படத்துல சேர்த்துட்டிங்களா
ஏதோ பரவா இல்ல ம்ம்ம் அடுத்த கட்ட நடவடிக்கைகள்
படத்தில் கீழுள்ள கமெண்ட்ஸ் மொக்கை இல்லை... ஹிஹி... வாழ்த்துக்கள்....
இந்த லிஸ்டில் இடம் பெற்று இருக்கும் பல படங்களை நான் பார்த்ததில்லை ஆனால் நான் பார்க்க நேர்ந்த வில்லு படத்தை நீங்கள் பார்க்கவில்லை போல் தெரிகிறது. வில்லு படத்தை நீங்கள் பார்த்து இருந்தால் அது தான் முதலிடம் பெற்று இருக்கும்
மாண்புமிகு மாணவன் மானங்கெட்ட மாணவனாகிவிட்டார்..சுறா எறாவாகி விட்டது..
சௌந்தர் அண்ணே வில்லு தனி லிஸ்ட் ல இருகேன்னே
சல்மான் தம்பி வாங்க வாங்க கருத்திற்கு நன்றி
தனபாலன் அண்ணே அப்டியா ரொம்ப சந்தோசம் ஹீ ஹீ
மருதநாயகம் தல டாப் டென் ன்னு சொல்லிட தால சேர்க்க முடில்ல அந்த படத்த நானும் பார்த்து நொந்து இருக்கேன்
வருகைக்கு ரொம்ப நன்றி கலியபெருமாள் சார்
வில்லு & வேட்டைக்காரன் மிஸ்ஸிங்.. ஒரு வேளை அது மகா மொக்கை பட லிஸ்ட்ல வந்தாலும் வரும் போல ?? ஹிஹி
ஆதி, சிவகாசி மிஸ்சிங்
எங்கய்யா வேட்டைக்காரனை காணும்?
டாகுடர் படம் எல்லாமே மொக்கைதான் இதுக்கு தனியா வேற லிஸ்ட் போடனுமா...? கொடுமைடா சாமி.....!
dai comment addikura dubukungalaa... Ajith padathoda lista eduthaa... 52 movilaa 50 moka... intha kulla suriya lista eduthaa "AAyan" movie tavara ellam moka.... so ithuku enga talapthi padam evelovoo parava illa...
-A vijay Fan -
ஹா ஹா ஹா... சூப்பர் ெசல்வன்.
intha padamellam flop aanadhuku avanga appan than karanam not a my thalapathy fault thalapathy is always best actor and huge fan following him .....
Post a Comment